என் மூச்சுச் சத்தமே
பிறர் சத்தம் போல் கேட்பதிலிருந்து
எவ்வளவு விதம் விதமான சத்தங்கள்
பக்கத்து அறை அப்பாவின்
சுகமான குறட்டை ஒலி எரிச்சலூட்டுகிறது
பஸ்களின் இரைச்சலும்
காகங்களில் கரைசலும்
கேட்கவே முடிவதில்லை
போதாக் குறைக்கு லொடக் லொடக்கென்று
சத்தமிடும் மின் விசிறி வேறு
என்ன வேலை செய்திருக்கிறாய் என
அதிகாரி இரைந்து விட்டுப் போனது
தனிக் கதை
கூர்ந்து கவனித்தால்
கிளைகள் அசையும் சத்தம் கூடக் கேட்கிறது
போனஸாகத் தெருவில் புலம்பிக் கொண்டே
போகும் குடிகாரனின் சத்தம்
சத்தங்களிலிருந்து தப்பிக்க என்ன
செய்வதென்று யோசித்தபடியே
கண்களை மூடினேன்
சத்தங்களும் அடங்கின
(மாலைக் கதிர் டிசம்பர் 1995ல் வெளியானது)
கார்காலக் குறிப்புகள் - 58
1 day ago
8 comments:
Sundar Sir, Kavithai romba nalla irukku
உண்மைதான் ஆனால் மூடிய கண்கள் திறந்து வைக்கும் ஒரு நம் உள்ளுரையும் இரைச்சல்களை, உற்று கவனித்து தாண்டிச்செல்லமுயன்றால் கேட்கக்கூடியது இனிய இசையாய் இருக்க முடியும். - வாழ்த்துக்கள்.
//சத்தங்களிலிருந்து தப்பிக்க என்ன
செய்வதென்று யோசித்தபடியே
கண்களை மூடினேன்
சத்தங்களும் அடங்கின//
கண்களை மூடினால் சததம் எப்படி அடங்கும்? நீங்கள் சத்தத்தை கேட்காமல்தான் போகமுடியும்.
இங்கு சத்தம் காதால் கேட்பதிலிருந்து மனதால் அறிவதாக மாறியிருந்தால் கவிதை பயனம் வேறு தளத்தில் மாறியிருக்குமோ?
நன்றி, முனி.
நன்றி, கிருத்திகா.
நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள்.
நன்றி, ஜமாலன். இது பழைய கவிதை, எனக்கு அவ்வளவாகப் பிடிக்காதது.
நன்றி, உமாபதி.
Post a Comment