இப்போதெல்லாம் எதைப் பார்த்தாலும் பயமாயிருக்கிறது.
இக்கதைகள் வெறும் உணர்ச்சிகளைக் கிளறும் கதைகளாகச் சிலர் பார்ப்பார்களோ என்ற பயம். என் உறவினர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம்; அப்படி நடந்தால் என்னுடைய பிம்பம் என்ன ஆகுமோ என்ற பயம். கோபம் கொண்ட பெண் வாசகிகள் யாராவது நான் தனியாகச் செல்கையில் குத்திக் கொன்றுவிடுவார்களோ என்ற பயம். எனக்கு ஓடத் தெரியும்; ஆனால் அவர்கள் குழுவாகவோ அல்லது வாகனத்திலோ வந்தால் என்ன செய்வது என்ற பயம். அவ்வளவு விரைவாக உன்னால் ஓட முடியாது; அதற்குத்தான் சிகரெட் பிடிக்கக் கூடாது என யாராவது அறிவுரை சொல்வார்களோ என்ற பயம். சிகரெட் விலை ஏறிக் கொண்டேயிருக்க என்னுடைய காதலியும் சிகரெட் பிடிக்கத் துவங்கிவிட்டால் செலவைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற பயம்.
காதலியுடன் விடுதி படுக்கையறையில் ஒன்றாக இருக்கும்போது போலீஸ் வந்துவிட்டால் என்ன செய்வது? இல்லாத தாலியை காட்டாததால் எங்களைக் கைதுசெய்துவிடுவார்களோ. அதுகூடப் பரவாயில்லை, அடுத்த நாள் செய்தித்தாள்களில் அழகியுடன் வாலிபன் கைது என படத்துடன் செய்திவந்துவிடுமோ என பயமாயிருக்கிறது.
அப்படி எதுவும் ஆகாவிட்டாலும், காதலி மாத்திரை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். கர்ப்பமானதை உடனடியாகக் கவனியாமல் 9 வாரங்கள் கழித்து கவனித்து, சிகிச்சையில் மரணமடைந்தால் என்ன செய்வது? காவல்துறை கைது செய்தால் என்னை அடிப்பார்களா.? செல்லில் வெறும் ஜட்டியுடன் நிற்கை வைத்து லத்தியால் பிளப்பார்கள் எனக் கேள்விப் பட்டதிலிருந்து பயமாயிருக்கிறது. சிறைச்சாலையில் உடனிருக்கும் கைதிகள் என்னை ஒருபாலுறவிற்குக் கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது. என்னுடைய குதம் அவர்களது குறிகளைத் தாங்குமா என பயமாயிருக்கிறது.
போலீஸ் பிடிக்காவிட்டாலும், அவளுக்கு ஏதாவது நோயிருந்து அது என்னையும் தொற்றிக் கொண்டால் என்ன செய்வது என பயமாயிருக்கிறது. பால்வினை நோய் வந்தால் குறியின் முனை சிறு சிகப்பு மலரைப் போல் வீங்கிச் சீழ் வடிந்து சிறுநீர் பிரியவே சிரமப் படுவேனோ என பயமாயிருக்கிறது (உடனே காமத்தை மலருடனும் சீழ் வடிதலுடனும் குறியீட்டு ரீதியாக ஒப்பிடுகிறேன் என யாராவது சொல்லிவிடுவார்களோ என பயமாயிருக்கிறது).
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர் வேதம் தந்த பூமி இது என்றான் ஒருவன். ஒருவன் பலரைக் காதலிப்பதை எழுதும் நீ ஒருத்தி பலரைக் காதலிப்பதை எழுது முடியாமா என்கிறான் இன்னொருவன். இந்தக் கதைகள் உனக்கு நடந்த கதைகளா எனக் கேட்கிறான் வேறொருவன்.
காமக் கதைகள் எனத் தலைப்பு வைத்துவிட்டு காமத்தை எழுத ஏன் பயப்படுகிறாய் என்கிறான் என் நண்பன். உடலுறவு கொள்வதை அப்படியே அங்குலம் அங்குலமாக விவரித்தால் நன்றாயிருக்குமாம்; கூடவே படங்களும் இருந்தால் தேவலையாம். அவனிடம் மேலே கூறிய பயங்களைச் சொன்னேன்.
பயமில்லையென்றால் நானும் அதீதனைப் போல் பலரைக் காதலித்திருக்க மாட்டேனா...???
கார்காலக் குறிப்புகள் - 60
20 hours ago
21 comments:
எப்படீங்க இது ...சூப்பர்
//பயமில்லையென்றால் நானும் அதீதனைப் போல் பலரைக் காதலித்திருக்க மாட்டேனா...???//
:)
awwwww
இதுவும் கதைதானா? சரி.. சூப்பர் :-)
நன்றி, நாஞ்சில் பிரதாப்.
நன்றி, இராம்.
நன்றி, மங்களூர் சிவா. ப்ரொஃபைல்ல குழந்தை படத்த வச்சுகிட்டு ஏன்யா இப்படிப்பட்ட கதைங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடறீங்க?
நன்றி, லக்கி லுக். ஏன் கதை மாதிரி தெரியலையா?
//ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
/
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நன்றி, மங்களூர் சிவா. ப்ரொஃபைல்ல குழந்தை படத்த வச்சுகிட்டு ஏன்யா இப்படிப்பட்ட கதைங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடறீங்க?
/
சுந்தர் இப்பவே நல்லது கெட்டது நாலு விஷயம் தெரிஞ்சு வெச்சிகிட்டாதானே நாளைக்கு நல்லது எப்பவும் குழந்தையாவே இருக்க முடியுமா!?!!?!?
:))))))))
போன பதிவு கேள்விகள்
இதில் பய புராணமா
வால்பையன்
கடைசிவரியில்தான் கதையே இருக்கிறது போல:)
//பயமில்லையென்றால் நானும் அதீதனைப் போல் பலரைக் காதலித்திருக்க மாட்டேனா...???//
:)வேணாம்ணே...
???????!
why your killing others like this
தேவையற்ற பயங்கள்.
அதாவது மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்.
அல்லது
காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளோ!
யோனி என்ற ஒரு வார்த்தை பயன்படுத்தியற்கு தமிழ்மணத்திலிருந்து ஒருவர் நீக்கப்பட்டாரே!
உங்களின் காமக்கதைகள் தொடர் அந்த ஒற்றைச்சொல்லைவிட எந்த விதத்தில் நாகரிகமாகத்தெரிகிறது? தமிழ்மணம் மற்றும் சகபதிவர்கள் விளக்குவார்களா?
சிட்டுக்குருவி லேகியம் விளம்பரத்தை உங்க பதிவுல் அனுமதிப்பீர்களா, ரேட் என்னன்னு நண்பர் ஒருவர் கேட்கிறார் :-))
நன்றி, விஜய் (ஆமா என்ன எல்லா பதிவுலயும் இப்படி ஒரு பின்னூட்டம்?).
குழந்தை மங்களூர் சிவா, நன்றி.
நன்றி, வால்பையன். ஆமாம்.
நன்றி, கிங்.
நன்றி, தமிழன்.
அடுத்த கதை எங்கே? கொலைவெறியோடு காத்திருக்கிறோம்!
// அவனிடம் மேலே கூறிய பயங்களைச் சொன்னேன்.
பயமில்லையென்றால் நானும் //
அப்படியே கண்ணாடியில என்னோட பிம்பத்தைப் பார்க்கிற மாதிரி இருக்கு....
தெனாலி?
நன்றி, மஞ்சூர் ராசா.
குரு என்ற பெயரில் வந்திருப்பவருக்கு... நன்றி. in principle யாரையும் திரட்டியிலிருந்து நீக்குவது எனக்கு உடன்பாடானதில்லை. நீங்கள் இக்கதை குறித்து விமர்சிக்கலாம்.
நன்றி, பிரபு ராஜதுரை. அப்படியா இருக்கிறது கதைகள் :)
நன்றி, வெண்பூ.
நன்றி, சுகுணா திவாகர். தெனாலிக்குக் காமத்தைப் பற்றிய பயங்கள் இருந்ததாகத் தெரியலையே :)
பயத்திற்கும் காமத்திற்கும் உள்ள உறவு குறித்த யோசிக்க வைக்கிறது. சுயதணிக்கை என்பது என்ன? அதில் காமத்தின் பங்கு என்ன? என்கிற கேள்வியும் இதனுடன் எழுகிறது.. யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.
காமம் குறித்த பயம் நீங்கள் சுட்டியவை எல்லாம் சமூகம் சார்ந்தவை. ஆழ்மனம் சார்ந்த பயங்கள் பற்றி...? நன்றாகத்தான் உள்ளது இந்த மொழிவிளையாட்டும்.
Post a Comment