அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களை அழைத்து கடனட்டை சேவையை விற்கும் டெலி மார்கெட்டிங் வேலை ரேவதிக்கு. அதீதனுக்கு வரும் அழைப்புகளில் பெண் குரல் கேட்டால் விடமாட்டான், பேசிக் கொண்டே இருப்பான்; ராங் நம்பரென்றால் கூட பெண் குரலென்றால் பேச ஆரம்பித்து விடுவான்.
அவனது வழக்கமான அறிமுகம்..
'எனக்கு வயசு 27ங்க. ஒரு ஷிப்பிங் கம்பெனில மேனேஜரா இருக்கேன்..' எனத் துவங்கும். முதலில் எதிர் பார்ட்டியின் விவரங்களைக் கேட்கவே மாட்டான். 'அவங்களாத் தருவாங்கடா...'. பிறகு, மெதுவாக அவர்களுக்குப் பிடித்தமானது, பொழுது போக்கு எனக் கேட்டுக் கொள்வான். அந்தப் பெண் தப்பித் தவறி, உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எதுவெனக் கேட்டால் போதும், உடனே சுஜாதா கதையிலிருந்து எடுத்து விடுவான் ‘ஐ லைக் ஆல் பால் கேம்ஸ்' என்று (பாருங்க கதை படிப்பது எதுக்கெல்லாம் உபயோகமா இருக்குன்னு!).
அந்தப் பெண் கெக்கே பிக்கே எனச் சிரிக்கும்...
'எப்படிடா இவ்வளவு நிச்சயமா சொல்றே.. கோவம் வராது அவங்களுக்கு' என்றேன் நான்.
‘கோபப் படறவங்க முதல்ல இவ்வளவு தூரம் என்கிட்ட பேசியே இருக்க மாட்டாங்க..'
அப்படித்தான் ரேவதியுடனும் நடந்தது. அடுத்து ஸ்டாக்கில் இருக்கும் ஒன்றிரண்டு ஜோக்குகளை அள்ளி விட்டான். சாம்பிளுக்கு :
மனைவிக்கு புருசன் மேல ரொம்ப கோபமாம், தன்னை கவனிக்கறதே இல்லைன்னு. அதனால அவன வெளியே தள்ளிக் கதவ சாத்திட்டாளாம். கொஞ்ச நேரத்துல டொக்கு டொக்குன்னு கதவ தட்டினானாம். அவ நீங்க தானே கதவ திறக்க மாட்டேன்னுட்டாளாம். நான் இப்போ எதால கதவ தட்டறேன்னு தெரிஞ்சா நீ சந்தோஷப் படுவேன்னான் அவன். அவளுக்கு சுருசுருன்னு ஆகிடுச்சாம். அப்படியா அதை இன்னைக்கு ராத்திரி எனக்கே கொடுத்திடுவீங்களான்னா. அவனும் சரின்னான். அவ ஆசை ஆசையா கதவத் திறக்க, அவன் கையில புது டார்ச் லைட் இருந்துச்சாம்!
ரேவதியுடனான உறவு தொடரும் என நினைத்தவனுக்கு அதிர்ச்சி. கொஞ்ச நாட்களிலேயே அவனுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டாள்.
‘ஏண்டா' என்றேன்.
‘அவகிட்ட கிரெடிட் கார்ட் வாங்கிக்கறேன்னு சொல்லியிருந்தேன். டிமிக்கி கொடுத்துகிட்டே வந்தேன்.. ஒரு வேளை அதுகூட காரணமாயிருக்கலாம்' என்றான் அதீதன்.
பனிக்காலத் தனிமை - 03
47 minutes ago
20 comments:
/
‘அவகிட்ட கிரெடிட் கார்ட் வாங்கிக்கறேன்னு சொல்லியிருந்தேன். டிமிக்கி கொடுத்துகிட்டே வந்தேன்.. ஒரு வேளை அதுகூட காரணமாயிருக்கலாம்'
/
இருக்குமா இருக்கும்!
போன தையில் கல்யாணம்
இந்த தையில் குழந்தை
இரண்டு தைக்கும் இடையில் ஏதோ ஒன்று நடந்ததால்.
- இத சுஜாதாவின் கதை ஒன்றில் வரும் ஒரு கவிதை. இதில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தை உள்ளது. அதை கண்டுபிடியுங்கள் என்கிற ரீதியில் போகும் வசந்தின் குசும்பு. ஆங்கிலப் பற்றுள்ள பதிவர்கள் அதைக் கண்டு உய்விக்க கடவது.
அப்புறம் ஒரு கணவன் மணைவி அவர்களது மகன் மூவரும் ஊடடி போனார்களாம். அங்கு ஒவ்வாரு இடத்திலம் நமது ஹனிமூனில் இங்குதான் நின்றோம் இற்குதான் சாப்பிட்டொம் இங்குதான் உட்கார்ந்தோம் என்று கணவன் கூறிக்கொண்டே வந்தானாம். அதற்கு அவனது பிள்ளை அப்ப நான் எங்க இருந்தேன்? நான் எங்க இருந்தேன் என்று கேள்வி கேட்டக்கொண்டே வந்தானாம். எரிச்சலடைந்த கணவன் கூறினானாம்..வரும்பொது என்கிட்ட இருந்த போகும்போது அம்மாகிட்ட இருந்த என்று.
இதுவும் அமரர் சுஜாதாவின் மெக்சிகன் சலவைக்காரிவகை ஜோக்குதான்..
என்ன சுந்தர் காமக்கதையில் காமத்தைக் காணோம். மசால் தோசையில் மசாலாவைக் காணோம் என்று தங்கவேலு சொன்னதைப்போல.
இப்படி வெளியேவே நின்னா எப்படி? இன்னும் கொஞ்சம் உள்ளே அல்லது கீழே போங்கள் கதையில்தான்.. :)
//தன்னை கவனிக்கறதே இல்லைன்னு. அதனால அவன வெளியே தள்ளிக் கதவ சாத்திட்டாளாம். //
அதுதான் உள்ள இருந்தாலே அந்த ஆளு கவனிக்க மாட்டேன்றானே,,, இதுல வெளியில வேற தள்ளி கதவ சாத்திட்டா என்னா ஆவுறது? புரியாத பொண்ணா இருக்குதே. கம்முன்னு நம்ம அதீதன விட்டு பாடம் நடத்த சொல்லுங்க
// அவகிட்ட கிரெடிட் கார்ட் வாங்கிக்கறேன்னு சொல்லியிருந்தேன். டிமிக்கி கொடுத்துகிட்டே வந்தேன்.. ஒரு வேளை அதுகூட காரணமாயிருக்கலாம் //
கிரடிட் கார்டு வாங்குனா பொண்ணு ஃப்ரியா? எந்த பேங்க்ல இப்படி ஒரு சர்வீஸ் இருக்கு?
சுந்தர், கொஞ்சம் கதாபாத்திர வகைமைகளை மாற்றி விளையாடுங்கள் என்று கேட்டுக்கொள்ளலாமா? இதிலும் ரேவதி வனஜாவைபோல அவள் காரியத்திலேயே கண்ணாக இருக்கிறாள். ஆணுக்கும் ஏதோவொரு விலையைக் கொடுக்காமல் அவன் காரியம் முடியாது போலிருக்கிறது. புதிதாக கதையாடல் இல்லாவிட்டால் காமத்தளங்களின் காமக்கதைகள் போல எல்லாக்கதையும் ஒரே சாயலோடு பிறந்துவிடும்.
ஜமாலன், தேவையா இந்த ஜோக் பின்னூட்டத்தில்?
//என்ன சுந்தர் காமக்கதையில் காமத்தைக் காணோம். மசால் தோசையில் மசாலாவைக் காணோம் என்று தங்கவேலு சொன்னதைப்போல.//
டார்ச் லைட்டை, அந்த நபர் மனைவிக்கிட்ட கொடுத்ததை நீங்க படிக்கலையா?!
மசால் தோசையில் மசாலா ஆப்டிகல் இல்யூஷனில் தெரியுது பாருங்க தல. :)
Perundevi said...
//ஜமாலன், தேவையா இந்த ஜோக் பின்னூட்டத்தில்?//
அதற்குன்னு தனிப்பதிவா போடமுடியும்..:)
சுந்தர் இப்படி எழதுகிறார்..
//அவ ஆசை ஆசையா கதவத் திறக்க, அவன் கையில புது டார்ச் லைட் இருந்துச்சாம்!//
அதனால்தான் அந்த ஜோக்கை எழுதினேன். மற்றபடி சுந்தரின் கதையில் உள்ள அந்த காமத்தின் விலைகுறித்த விடயங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. :~(
ஒருவேளை இது அதீதனுக்கும் பயன்படலாமல்லவா? :~)
ஜமாலன் சார் தங்கள் பின்னூட்டியிருந்த ஜோக்குகளை பார்த்ததும் எனக்கு இந்த ஜோக் தான் நினைவுக்கு வந்தது...
ஒரு பெண்மணி நிறைய பணம் படைத்தவள்.. ஆனால் திருமணம் ஆகவில்லை... ஏனெனில் அவள் தனக்கு வரப்போகும் கணவனுக்கு சில கண்டிஷன்கள் போட்டாளாம்.. தனக்கு கணவனாக வரப்போகிறவன்
தன்னை அடிக்கக் கூடாது
தன்னை தவிர வேறு எந்த பெண்ணையும் பார்க்கக் கூடாது
தன்னை விட்டு எங்கும் போகக்கூடாது
காம விளையாட்டில் கை தேர்ந்தவனாக இருக்க வேண்டும்...
அவளுக்கு ஒரு ஆள் கூட எதிர்பார்த்ததில் பாதி அளவு கூட அமையவில்லை....
கடைசியாக தன் தோழியின் யோசனையைக் கேட்டு தினசரிகளில் விளம்பரம் கொடுத்தாள்...
மறுநாள் காலை அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது..
சரி விளம்பரம் வேலை செய்கிறது என்று எண்ணியபடி கதவைத் திறந்து பார்த்தாள்... ஒருவர் ஒரு சக்கர நாற்காலியில் கறுப்பு கண்ணாடி போட்டு அமர்ந்திருந்தார்...
"யார் நீங்கள்.. என்ன வேண்டும் உங்களுக்கு?"
"தினசரியில் விளம்பரம் பார்த்து விட்டு என் நணபரை என்னை இங்கு விட சொன்னேன்.."
"எங்கே அவர்?"
"அவர் அப்போதே போய்விட்டார்... உங்கள் கண்டிஷன்களுக்கு தகுதியான வரன் நான் தான் எனக்கு தோன்றியது... அதான் வந்திருக்கிறேன்..."
"தங்களுக்கு....?"
"ஆமாம்... கண்பார்வை கிடையாது... கை கால் விளங்காது.."
அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது..
"ஏன் சிரிக்கிறீர்கள்.. கண் தெரியாது.. வேறு பெண்களை பார்க்க மாட்டேன்.. கை விளங்காது உங்களை அடிக்க மாட்டேன்.. கால் விளங்காது.. உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன்..."
"எல்லாம் சரி தான்... அந்த நான்காவது கண்டிஷன்"
"பாருங்கள்.. எனக்கு கை கால் விளங்காது.. கதவை தட்டி தான் உங்களை அழைத்தேன்.. எப்படி தட்டியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?"
:-) உங்கள் ராசியான எண் 9-ஆ? இந்தக் கதைக்கு பின்னூட்டத்தில் நிறைய ஜோக்குகள் வந்திருக்கின்றனவே? :-)
நன்றி, மங்களூர் சிவா.
நன்றி, ஜமாலன். மசால் தோசையில் மசால் கேட்டால் பரவாயில்லை. மைசூர் போண்டாவில் மைசூரைக் கேட்டால் என்ன செய்வேன் :)
நன்றி, வெண்பூ.
நன்றி, பெருந்தேவி. எனக்கும் இப்போது வனஜாவையும் ரேவதியையும் ஒரே அச்சில் வார்த்தது போல் தோன்றுகிறது. கதையாக்கத்தில் இன்னும் கவனமாயிருக்க வேண்டுமெனத் தெரிகிறது :)
எனக்கென்னமோ இந்த க்கதையில் நீங்கள் சொல்ல வந்தது என்னவென்று புரியவில்லை ஏதும் விசேடமிருப்பதாகவும் தெரியவில்லை...
காமம் குறைவாக இருக்கிறது. இனி வரும் கதைகளில் கொஞ்சம் 'தூக்கலாக' இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
சதை இல்லாவிட்டாலும் இக்கதையும் எனக்கு வழக்கம்போல பிடித்திருந்தது.
//'எனக்கு வயசு 27ங்க.//
கூட்டுத்தொகை 9 என்று வர என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? :-(
மோகன்தாஸ், மாயன், ஸ்ரீதர் நாராயணன், தமிழன் & லக்கி லுக்... நன்றி.
அந்தப் பெண் கெக்கே பிக்கே எனச் சிரிக்கும்...
'எப்படிடா இவ்வளவு நிச்சயமா சொல்றே.. கோவம் வராது அவங்களுக்கு' என்றேன் நான்.
‘கோபப் படறவங்க முதல்ல இவ்வளவு தூரம் என்கிட்ட பேசியே இருக்க மாட்டாங்க..'
:)))))))))
நன்றி, கென்.
கதையும், பின்னூட்டத்தில் வந்த ஜோக்'களும் சூப்பர்... :)
அதீதன், விசித்திரன், அரூபன் னெல்லாம் பி.ந. கதைகளில் பேரு ரொம்ப வித்தியாசமா வருதே, ஏன்?
அதென்னங்க அது... பெண்கள் மட்டும் எப்போதும் 'கெக்கே பிக்கே'என்று சிரிப்பதாக, அச்சில் வார்த்தெடுத்த வடிவம் மாறாமல் எழுதுகிறார்கள்-எழுதுகிறீர்கள். வாசிக்கும்போதெல்லாம் 'கேனக்கிறுக்குகள்'என்ற சொல் கூடவே நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
நன்றி, இராம்.
நன்றி, உதயகுமார்.
நன்றி, தமிழ்நதி. அசட்டுத்தனமாகச் சிரிப்பது இப்படி குறிக்கப் படுகிறது. இது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதுதான். ‘கெக்கே பிக்கேன்னு சிரிக்காதடா' என ஆண்களையும் சொல்லிக் கேட்டிருக்கிறேன் / படித்திருக்கிறேன்.
மற்றபடி கேனக்கிறுக்கெல்லாம் ஒன்றுமில்லை :)
\\\
என்ன சுந்தர் காமக்கதையில் காமத்தைக் காணோம். மசால் தோசையில் மசாலாவைக் காணோம் என்று தங்கவேலு சொன்னதைப்போல.
இப்படி வெளியேவே நின்னா எப்படி? இன்னும் கொஞ்சம் உள்ளே அல்லது கீழே போங்கள் கதையில்தான்.. :)
///
ஒரு முடிவு கண்டுதான் விடுவீர்கள் போல... பேசுங்கள் பேசுங்கள்... காமத்தை பேசுவதற்கு ஆட்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்...
Post a Comment