காமத்திற்கும் காதலுக்குமான வித்தியாசம் மிக மெல்லியது இல்லை இரண்டும் ஒன்றுதான் டைல்ஸ் ஒட்டப்பட்ட குளிர்ச்சியான வெறுந் தரையில் படுப்பதும் யார் மேலாவது படுப்பதும் ஒன்றா கட்டிலா மெத்தையா மெத்தை எடுக்கப்பட்ட கட்டிலா இரண்டு தலையணைகளில் முகம் புதைத்து தூங்குவதா முத்தங்களைக் கால்களிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது நெற்றியிலிருந்து காது நுனிகளைக் கடிக்கலாமா நிலவில் தெரியும் உருவம் மூன்றா ஆண் பெண் மேல் கீழா கீழ் மேலா கேரளா
மாநிலத்தில் பெண்கள் உடை மதிய வெயிலில் மெரினாவில் கட்டிப் பிடித்துக் கொண்டு காதலர்கள் மாலை வேளைகளில் மடியில் படுத்தபடி ஆண் மடியில் பெண் போலீஸ் பணப்பறிப்பு தினசரிச் செய்தி எல்ஃபிரட் ஜெலனிக் பியானோ டீச்சர் டி சேட் சேடிஸம் ஆர்ஃபிசம் கியூபிசம் ஃபாவிசம் ஷேவ் பண்ணிய முகத்துடன் முத்தமிடுவது லேசான மீசை முளைத்த பெண் மார்பு நடுவில் முடி முளைத்த பெண் காம இச்சை கூடுதலாயிருக்கும் வழுக்கைத் தலையர்களுக்கு செக்ஸ் ஆர்வம் கூடுதலாயிருக்கும் கைகளிலும் மார்பிலும் ரோமம் அதிகமாயிருக்கும் ஆண் கவர்ச்சியானவன் தமிழ்
நாட்டின் கலாச்சாரம் வேறு கால்மெட்டி பார்த்தபடி நடக்கும் பெண்கள் இடித்துச் செல்லும் பொறுக்கிகள் பேருந்து நிலையத்தில் குறி காண்பித்தபடி தூங்கும் பைத்தியக்காரன் ரயிலில் எதிர் பெர்த்தில் படுத்திருப்பவனை எப்படி எழுப்புவது கழிவறைகளில் துர்நாற்றம் தாங்க முடியாததாய் இருக்குமே தொலைதூரப் பேருந்தில் முன் இருக்கைப் பெண்ணின் முலைவருடுவது எப்படி காலைச்சுரண்டினால் விழித்துக் கொள்வாளா கடந்து போகும் லாரியின் டிரைவர் எவ்வளவு நாள் மனைவியைப் பிரிந்திருப்பான் பஞ்சாப்
கோதுமை நிறத்தில் பெண்கள் துப்பட்டா கழற்றி போடும் ஆட்டம் கொண்டாட்டம் தமிழ் சினிமாவில் வரும் அருவருப்பான அங்க சேஷ்டைகள் நாடகங்களில் இல்லை ஒம்பதாம் நம்பர் மட்டும் இங்கே சேராதம்மா எதுவும் கேளு சும்மா உறங்கும் பெண்மணியின் விலகிய மார்பை வெறித்துப் பார்ப்பது விலக்கப்பட்டவற்றின் எச்சங்கள் பம்ப் செட்களில் வழிகிறது கையில்லா ரவிக்கை ரவிக்கையில்லா முதுகு இழுத்துச் சொறுகிய புடவை ஏற்றிக் கட்டிய கொண்டை
வளைவுகள் கொண்ட திருப்பதியில் சதை வியாபாரம் காம லீலைகள் சரோஜாதேவி புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை இணையத்தில் படிக்கத் துவங்கி விட்டார்கள் தொலைக்காட்சியில் டென்னிஸ் இடத்தை பெண்கள் WWF பிடித்துக் கொண்டது பார்க்கிறான் பார்க்கிறாள் பார்க்கிறாள் பார்க்கிறான் பார்க்கிறான் பார்க்கிறாள் பார்க்கிறாள் பார்க்கிறான் நடன ஆடை நெய்கிறான் நாக்கில் எச்சில் ஊறியபடி ஆடைகளைத் தடவிப் பார்த்து உச்சமடைகிறான் விடலைப் பையன் தனிமை உருகி வழிந்தோட காமம் சுற்றிக் கொண்டிருக்கிறது மின்னஞ்சல்களில் நயாக்ரா
ஃபால்ஸ் வயாக்ரா ரைசஸ்
பனிக்காலத் தனிமை - 02
6 days ago
27 comments:
அருமை சுந்தர். முந்தைய கதையைக் காட்டிலும் இது நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.
அருமை. அருமை. இதுவரை வந்த ஏழு கதைகளிலேயே இதுதான் டாப்பு!
//வழுக்கைத் தலையர்களுக்கு செக்ஸ் ஆர்வம் கூடுதலாயிருக்கும்//
இந்த கதையிலேயே ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமாக இருந்த வரி இந்த வரி :-)
காற்புள்ளி, முற்றுப்புள்ளி, ஆச்சரிய குறி, கேள்விக்குறிகளுடன்:
காமத்திற்கும் காதலுக்குமான வித்தியாசம் மிக மெல்லியது. இல்லை இரண்டும் ஒன்றுதான். டைல்ஸ் ஒட்டப்பட்ட குளிர்ச்சியான வெறுந் தரையில் படுப்பதும் யார் மேலாவது படுப்பதும் ஒன்றா? கட்டிலா? மெத்தையா? மெத்தை எடுக்கப்பட்ட கட்டிலா? இரண்டு தலையணைகளில் முகம் புதைத்து தூங்குவதா? முத்தங்களைக் கால்களிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது நெற்றியிலிருந்து! காது நுனிகளைக் கடிக்கலாமா? நிலவில் தெரியும் உருவம் மூன்றா? ஆண் பெண் மேல் கீழா கீழ் மேலா?
கேரளா மாநிலத்தில் பெண்கள் உடை. மதிய வெயிலில் மெரினாவில் கட்டிப் பிடித்துக் கொண்டு காதலர்கள். மாலை வேளைகளில் மடியில் படுத்தபடி ஆண் மடியில் பெண். போலீஸ் பணப்பறிப்பு தினசரிச் செய்தி. எல்ஃபிரட் ஜெலனிக், பியானோ டீச்சர். டி சேட், சேடிஸம், ஆர்ஃபிசம், கியூபிசம், ஃபாவிசம். ஷேவ் பண்ணிய முகத்துடன் முத்தமிடுவது, லேசான மீசை முளைத்த பெண், மார்பு நடுவில் முடி முளைத்த பெண், காம இச்சை கூடுதலாயிருக்கும். வழுக்கைத் தலையர்களுக்கு செக்ஸ் ஆர்வம் கூடுதலாயிருக்கும். கைகளிலும் மார்பிலும் ரோமம் அதிகமாயிருக்கும் ஆண் கவர்ச்சியானவன். தமிழ்
நாட்டின் கலாச்சாரம் வேறு. கால்மெட்டி பார்த்தபடி நடக்கும் பெண்கள், இடித்துச் செல்லும் பொறுக்கிகள், பேருந்து நிலையத்தில் குறி காண்பித்தபடி தூங்கும் பைத்தியக்காரன், ரயிலில் எதிர் பெர்த்தில் படுத்திருப்பவனை எப்படி எழுப்புவது? கழிவறைகளில் துர்நாற்றம் தாங்க முடியாததாய் இருக்குமே! தொலைதூரப் பேருந்தில் முன் இருக்கைப் பெண்ணில் முலைவருடுவது எப்படி? காலைச்சுரண்டினால் விழித்துக் கொள்வாளா? கடந்து போகும் லாரியின் டிரைவர் எவ்வளவு நாள் மனைவியைப் பிரிந்திருப்பான்? பஞ்சாப் கோதுமை நிறத்தில் பெண்கள் துப்பட்டா கழற்றி போடும் ஆட்டம் கொண்டாட்டம், தமிழ் சினிமாவில் வரும் அருவருப்பான அங்க சேஷ்டைகள் நாடகங்களில் இல்லை. ஒம்பதாம் நம்பர் மட்டும் இங்கே சேராதம்மா, எதுவும் கேளு. சும்மா உறங்கும் பெண்மணியின் விலகிய மார்பை வெறித்துப் பார்ப்பது. விலக்கப்பட்டவற்றின் எச்சங்கள் பம்ப் செட்களில் வழிகிறது. கையில்லா ரவிக்கை ரவிக்கையில்லா முதுகு இழுத்துச் சொறுகிய புடவை ஏற்றிக் கட்டிய கொண்டை.
வளைவுகள் கொண்ட திருப்பதியில் சதை வியாபாரம், காம லீலைகள். சரோஜாதேவி புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை, இணையத்தில் படிக்கத் துவங்கி விட்டார்கள். தொலைக்காட்சியில் டென்னிஸ் இடத்தை பெண்கள் WWF பிடித்துக் கொண்டது. பார்க்கிறான், பார்க்கிறாள், பார்க்கிறாள் பார்க்கிறான் பார்க்கிறான், பார்க்கிறாள், பார்க்கிறாள், பார்க்கிறான். நடன ஆடை நெய்கிறான், நாக்கில் எச்சில் ஊறியபடி ஆடைகளைத் தடவிப் பார்த்து உச்சமடைகிறான் விடலைப் பையன். தனிமை உருகி வழிந்தோட காமம் சுற்றிக் கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்களில் நயாக்ரா.
கதை சூப்பர் தல
இப்பதான் கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது
முற்றுப்புள்ளி இல்லாத கீபோர்டு வேணும்னு கடையில கேட்டு வாங்குனிங்களா சார்?
அருமை சுந்தர்.
என்ன சுந்தர் இத காம அந்தாதியா? உரையாடலை வெட்டி குரல்களாக மாற்றிவிட்டீர்கள்.
மேலேயும் கிழேயும் கேளராவை தமிழ்நாட்டை பஞ்சாபை இணைத்துப் படித்தால் வேறமாதிரியாக உள்ளது. நல்ல முயற்சி.
ஆமா கதை எங்கே? :)
சொற்களால் ஆன உலகிற்கு கதை எதற்கு? என்கிறிர்களா?
//ஆமா கதை எங்கே? :)//
அதானே? கதை எங்கே?
முன்னாடியெல்லாம் 69 தான் கதைன்னு சொல்வீங்க. இங்கே அதுகூட இல்லையே? :-(
நன்றி, மஞ்சூர் ராசா.
பன்முக வாசிப்பைச் சாத்தியப்படுத்தவே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
ஆண் பெண் கீழ் மேல் இவற்றுடன் கேரளாவைச் சேர்த்து வாசிக்கலாம். கேரளா ஸ்டைல் பற்றிய பொதுப் புத்தி பேச்சுக்களைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்தானே :)
நயாக்ரா வீழ்வதால் அடுத்த பத்திக்கு விழுந்து விடுகிறது :)
நன்றி, தம்பி.
மேலே மஞ்சூர் ராசாவிற்குச் சொல்லிய பதிலைப் படிக்கவும். மற்றபடி, முற்றுப் புள்ளிகள் இல்லாத கீபோர்டெல்லாம் இல்லை :)
/நயாக்ரா ஃபால்ஸ் வயாக்ரா ரைசஸ்/
அது :-)
Falce viagra rises? :)
நின்று நிதானித்து வாசிக்கையில் புரிகிறது...
அட இவ்ளோ விசயம் இருக்கா கலக்கல்:)
இது என்ன தளபோட்சுத்ரி -யின் மற்றொரு வடிவமா?
முதலில் படித்தபோது அங்கங்கே விடுபடுவது போல் இருந்தது. பின்னூட்டங்களும் படித்தபின்தான் தெரிந்தது பத்திகளை இணைத்து படிக்க வேண்டும் என்று. நன்றாக செல்கிறது. விரைவில் தொடருங்கள்.
எனக்கு புரியலயா இல்ல இத்தனை பேர் பொய் பேசுகிறார்களா காமக் கதைகளா இல்லை கன்பூசன் கதைகளா ஒண்ணுமே புரியல எனக்கு மட்டுமா இல்ல எல்லாருக்குமா
கேரளா மேட்டர் பற்றி இன்னமும் கொஞ்சம் விளக்கமாக எழுதவும் :-)
கேரளா ஸ்டைல் குறித்து விளக்கமாக எழுதவேண்டி ஒரு பின்னூட்டம் போட்டேனே? அதை காக்கா தூக்கிக்கிட்டு போயிடிச்சா? :-(
நன்றி, RVC.
நன்றி, லக்கி லுக்.
நன்றி, அதிஷா.
நன்றி, இராம்.
பதிவின் உள்ளடக்கம் புரிகிறது...(நீளமாக கூடாது என்று நிறைய தவிர்த்திருப்பீர்கள் போலும்)
ஜமாலன்...said..
///என்ன சுந்தர் இத காம அந்தாதியா? உரையாடலை வெட்டி குரல்களாக மாற்றிவிட்டீர்கள்.
மேலேயும் கிழேயும் கேளராவை தமிழ்நாட்டை பஞ்சாபை இணைத்துப் படித்தால் வேறமாதிரியாக உள்ளது. நல்ல முயற்சி.
ஆமா கதை எங்கே? :)
சொற்களால் ஆன உலகிற்கு கதை எதற்கு? என்கிறிர்களா?///
அண்ணன் இது வெறுமனே சொற்கள் மட்டுமல்ல சுந்தர் அண்ணன் சொல்ல வந்த இந்த தொடரில் இந்த பதிவு முக்கிமான அத்தியாயம் என எனக்கு தோன்றுகிறது...
புரிகிறது...
நன்றி, மங்களூர் சிவா.
நன்றி, ஜமாலன்.
நன்றி, விதயாசாகரன்.
நன்றி, தமிழன்.
நன்றி, மோகன் கந்தசாமி. அப்படியும் வச்சுக்கலாம் :)
நன்றி, வசந்த்.
நன்றி, வெண்பூ.
நன்றி, கிங்.
பின்னநவீனத்துவ முதன் முதலில் கதை பத்தி படித்து இன்றுதான் புரிந்தது
:-D. என் பின்நவீனத்துவ வாசிப்புக்கு இதை ஆரம்பமாகக் கொள்கிறேன்.
அதிஷாவின் பதிவில் கோவியின் பின்னூட்டம் வழியே மோகன் கந்தசாமியையை சந்தித்து இந்த பதிவின் முகவரி வாங்கி வந்தேன்!
கலக்கலா இருக்கு!
சரோஜாதேவி புத்தகங்கள் அளவுக்கு த்ரில் இல்லை
புனிதா
Post a Comment