காமக் கதைகள் 45 (20 - 2)

வந்தனா வசித்தது கோயமத்தூரில். அவள் கணவன் மேத்யூ. இரண்டு குழந்தைகள் உண்டு. சிறுவயதிலேயே காதலித்துத் திருமணம் செய்தவள். அதனால் அவளது மொத்த குடும்பமே அவளுக்கு எதிராக இருந்தது. மேத்யூவுடனான வாழ்க்கை அவளுக்குச் சலித்துவிட்டது.

அவள் வேலை செய்துவந்த ஹோட்டலில் அப்போது தரணியும் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

மேத்யூவிற்கு மேரியுடன் பழக்கமேற்பட்டது. அவளை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டான் வந்தனாவின் சம்மதத்துடன். மேரி அவர்களுடனேயே வசிக்கவும் அவள் சம்மதித்தாள்.

வீட்டைவிட்டு ஓடிப்போவதென வந்தனா முடிவு செய்யும்போது அவளுக்கு வயது 27. குழந்தைகளைப் பிரிவதில் அவளுக்கு வருத்தமிருந்தாலும், இப்போது மேரியிருப்பதால் குழந்தைகளை பார்த்துக் கொள்வாள் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

அவளை மாலதியின் வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் தரணி. மாலதியின் தூரத்து உறவுப் பெண் வந்தனா என மாலதி அவள் கணவன் பிரதீப்பிடம் அறிமுகப்படுத்தினாள். அவனும் மாலதியின் சொந்தம்தான், ஆனால் இது வேறுவழி உறவு எனச் சமாளித்தாள்.

தரணிக்கு வந்தனாவுடனிருந்த உறவைப் பற்றி அவர் மாலதியிடம் மறைத்துவிட்டார். போலவே வந்தனாவும் தங்களது உறவு தூய்மையான நட்புதான் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

- இவ்வளவு மோசமான குணங்களைக் கொண்ட தரணியை ஏன் இன்னும் அவர் இவர் என மரியாதையாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டாள் வாசகி. அவர் அதீதனின் மேலதிகாரியாகப் பணியாற்றியவர் என்றேன். ஏற்கனவே இக்கதைகள் அதிகாரப் படிநிலைகளைக் கேள்விக்குள்ளாக்கவில்லை என விமர்சனம் இருக்கையில் நீங்கள் இப்படிச் செய்யலாமா என அக்கறையுடன் விசாரித்தாள். -

பிரதீப்பிற்கும் வந்தனாவும் நெருங்குகிறார்கள் என்பது தெரிந்தும் மாலதி கண்டுகொள்ளவில்லை, மறைமுகமாக ஊக்குவிக்கவே செய்தாள். அவர்கள் உறவு வளர்ந்ததும், அதையே காரணம் சொல்லி, பிரதீப்பிடமிருந்து விலகினாள். பிரதீப்பிற்கும் வந்தனாவுடன் வாழ ஆசையிருந்ததால் இதைப் பெரிய பிரச்சனையாக்கவில்லை.

குழந்தையையும் கூட்டிக் கொண்டு தரணியுடன் வாழத் துவங்கினாள் மாலதி. தரணி வேறுவேலை கிடைத்து ஈரோட்டிற்குச் சென்றுவிட்டார் அவர்களுடன்.

அதீதனுக்கு மாலதிமூலம் வந்தனா பழக்கமானாள். இரண்டே வாரங்களில் காதலிக்கத் துவங்கினார்கள். இதற்கிடையில் வந்தனா பிரதீப்புடனும் நெருக்கமாக இருந்திருக்கிறாள், அவளால் இருவரில் ஒருவரை முடிவு செய்ய இயலவில்லை.

இக்கதையின் தொடர்ச்சி காமக் கதைகள் 45 (10) என்ற தலைப்பில் எழுதப் பட்டிருக்கிறது. மீண்டுமொருமுறை அக்கதையைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (http://jyovramsundar.blogspot.com/2008/07/45-10.html)

(இந்தக் கதை இன்னமும் முடியவில்லை... )

20 comments:

அனுஜன்யா said...

சுந்தர்,

கதையை விட, கதை சொல்லும் உத்தி மிக சுவாரஸ்யமாக உள்ளது. நடுவில் வாசகியின் விசாரிப்பு!. கா.க.(10)க்கு ஒரு சுட்டி குடுக்கலாமே. தொடருங்கள்.

அனுஜன்யா

M.Saravana Kumar said...

21) க்கு பிறகு (20 - 2)..

நினைத்தது சரிதான்..

பார்க்கலாம் கதைகளும் என்ன சொல்ல போகிறது வாசர்கர்களுக்கு..

நான் எதையையும் சொல்வதற்காக இதை என்று சொல்லிவிடாதீர்கள்..
:)

Tharuthalai said...

அணைத்து தழுவி முத்தம் கலைத்து களைந்து முக்கல் முணகல் முத்தம் வியர்வை வேகம் தளர்வு ஆசுவாசம்.....


-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

செக்ஸ் இல்லாத மனிதன் செத்த மனிதன் - சின்னசாமி பிராடு

Tharuthalai said...

அவளுக்கு காமம் கலை
இவனுக்கு பெண்கள் பகை
அவனுக்கு கட்டுடல்
அவனோடு அவள் ஓடிப்போணாள். திட்டமிட்டபடி.
தடயம் கண்டு தேடிப் போனான் இவன்.
இவனோடு எப்போதும் கூட இவன்கள்.
இடம் அறிந்து இவன் அவளுக்கு தூது விட்டான்.
அவள் வர மறுத்தாள். அவன் விட மறுத்தான்.
கலவியில் உச்சம் கண்டனர் அவனும் அவளும்.
இவன் பழி தீர்த்தான். அவளை மீட்டு வந்தான்.
இவள் அவனை இரவில் நெருங்கித் தழுவினாள்
இவனும் இசைந்து இயங்கினான்.
வேகம்.. வேகம்.. - இவள்
களைத்து கவிழ்ந்த அவன்
வில்லேந்திய நாணாய் இவள். நாணமில்லை.
எப்படித் தெரியும் இவளுக்கு குதிரைச் சாவாரி? மருகினான் இவன்.
காலையில் குளக்கரை சென்றான் குழப்பத்துடன்.
குண்டி கொடுத்தவன் குழப்பிவிட்டான் எரிச்சலில்.
பயணம் ஒன்றுதான்
பாதைகள் வேறு. நேரெதிர்.

ஆணே வரலாறு எழுதினான்.
ஆதிக்கம் செய்பவனின் வாய்மொழியே வரலாறு ஆயிற்று.
இவன் குறைகள் மறைந்தே போயிற்று.


-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனுஜன்யா, சரவண குமார், தறுதலை... நன்றி.

narsim said...

இனி குறிப்பேடுடன் தான் தங்கள் கதைகளை படிக்க வேண்டும்..எந்த கதை எதன் உடன் தொடர்பு என்று.. நல்ல உத்தி/முயற்சி

நர்சிம்

அவனும் அவளும் said...

ஒரு ரெண்டு மூணு தலைமுறைக்கு அப்புறம் இந்த மாதிரி குடும்பதுலேந்து வந்த ஒருத்தன் family chart போட்டா எப்படி இருக்கும் சுந்தர் ?

நாடோடி - noMAD said...

அருமையான கதை காமம் மூளையின் வேலை செய்யாத முக்கால் வாசி பகுதியை வேலை செய்ய வைத்து விடுமாம்.. காமம் வேலை செய்ய வைக்குதோ இல்லையோ , காமக் கதைகளை படிக்க நிறையவே வேலை செய்யுது என் மூளை

ஏன்னா கதை புரியுற மாதிரி ஃபேக் பண்ணிட கூடாதுல

வால்பையன் said...

மீண்டும் ஒரு இடியாப்ப விருந்து

//தரணி வேறுவேலை கிடைத்து ஈரோட்டிற்குச் சென்றுவிட்டார் அவர்களுடன்.//

அந்த மாலதிக்கும் எனக்கும் இது வரை எந்த தொடர்பும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன்

குகன் said...

விரசமான வார்த்தைகளை எழுதாமல், காமக்கதைகளை மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள் !!

narsim said...

//ஒரு ரெண்டு மூணு தலைமுறைக்கு அப்புறம் இந்த மாதிரி குடும்பதுலேந்து வந்த ஒருத்தன் family chart போட்டா எப்படி இருக்கும் சுந்தர் //
அவனும் அவளும் -

ஹ..ஹா.. மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவையாக இருந்தாலும்... எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்..

அந்த chart படிக்கிறவன் கதி????

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நர்சிம், அவனும் அவளும், நாடோடி, வால்பையன் & குகன்... நன்றி.

Anonymous said...

தலை சும்மா கிர்ருன்னு சுத்துது. Visio-ல Chart போட்டுத்தான் புரிஞ்சிக்கணும் போல.

Anonymous said...

Visio chart poda idea kodutha anonymous vaazhgha!

enakku oru mannum puriyala!!! mudinjaa night 5 large adichu marubadiyum padichu paakkiren...

Ram said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இரண்டு அனானிகள் & ரமேஷ்... நன்றி.

SanJai said...

அட கதை நம்ம ஏரியாவுல தான் நடக்குது போல.. :)

மங்களூர் சிவா said...

:)

தமிழன்... said...

\\\
(இந்தக் கதை இன்னமும் முடியவில்லை... )
\\\

முடியலை..:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சஞ்சய், மங்களூர் சிவா & தமிழன்... நன்றி.