தேடுபொறிகளும் குறிச்சொற்களும்

தேடுபொறிக்குள் சிக்கிக் கிடக்கிறது
அறிவின் எல்லைகள்
சரியான குறிச்சொற்களைத்
தேடவும் வந்துவிட்டது மென்பொருள்

வேண்டியது கல்யாணமா
கட்டணக் கழிப்பறையா
அல்லது
எப்படிக் கழிக்கவேண்டுமென்பதா
தேடினாலே போதும்

வேறெதுவும் தேவையில்லை
தேடுபொறியே தெய்வம்

18 comments:

omsathish said...

thagknoondu matter thanaa innikku...?

அனுஜன்யா said...

அதெல்லாம் சரி. 'கா.க' விலிருந்து 'க' வரை (கல்யாணம், கட்டணக் கழிப்பறை, கழித்தல்) வந்தாயிற்று. தேடுபொறி 'கவிதை எழுதுவது எப்படி' என்று சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை. தேறி விடுவேன். நன்று சுந்தர்.

அனுஜன்யா

வால்பையன் said...

தேடினாலும் கிடைக்காத ஏதாவது
தேடுபொறியில் கிடைக்குமா-
கிடைத்தால் அது கிடைக்காததல்ல
கிடைக்காவிட்டால் எதற்கு
தேடுபொறி

வால்பையன்

Nadesh said...

சுந்தர்,

உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேடுபொறி மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவற்றை சாத்தியமாக்குகிறது என்பதே உண்மை. மற்றபடி கவிதையில் ரசிக்கும் படியாக எதுவுமில்லை!! :-(

M.Saravana Kumar said...

உண்மைதான்..

கூகிள் இன்றிய ஒரு நாளை நினைக்கவே கடினமாயிருக்கிறது..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஓம்சதீஷ், அனுஜன்யா, வால்பையன், நடேஷ் & சரவண குமார்... நன்றி.

SanJai said...

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சஞ்சய், நன்றி.

Joe said...

Too busy over the weekend, mate?

I was expecting a post on the stories section.

About this poem, I didn't like it much!

மதுவதனன் மௌ. said...

உங்க வலைப்பதிவின் ஓடையை எங்காவது போட்டுவிடுங்க..பதிவதற்கு வசதியாக

ஸ்ரீதர் நாராயணன் said...

நீட்சியாக தோன்றியது...

வைக்கோலுக்கிடையே ஊசியை
தேடி எடுத்துவிட்டேன்.
தைக்கும்போது குத்தாமல் இருக்க
இரண்டு குறிச்சொற்கள் கிடைக்குமா?

தேடிப் பார்தபின்பும்
மேலும் தேடுகிறேன்
இங்கே குவியலாக கிடக்கும்
குறிச் சொற்களில்
எங்கோ தொலைத்த சுயத்தை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜோ.

நன்றி, மதிவதனன். நீங்க சொல்றது புரியல :(

நன்றி, ஸ்ரீதர் நாராயணன். உங்க நீட்சி நல்லாவே இருக்கு :)

மதுவதனன் மௌ. said...

உங்கட வலைப்பதிவின் rss feedஇனை வலைப்பதிவின் ஒரு மூலையிலாவது போட்டுவிடுங்கள். Subscribe செய்ய இலகுவாக...mathuvathanantharunie

கிருத்திகா said...

அய்யோ நிசமாத்தாங்க :)

கடைசி பக்கம் said...

set me to think....

chk in google how to think for this kind of issues

:-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மதுவதனன், எப்படிச் செய்வெதன்பது தெரியவில்லை. சரி, நண்பர்களிடம் கேட்கிறேன். (நீங்கள் ரீடர் உபயோகிக்கலாமே).

நன்றி, கிருத்திகா.

நன்றி, கடைசி பக்கம்.

மங்களூர் சிவா said...

/
வேறெதுவும் தேவையில்லை
தேடுபொறியே தெய்வம்
/

99% சரி
:))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மங்களூர் சிவா.