வினை - எதிர்வினை - தொடர்வினை

கால் பிய்க்கப்பட்ட குழந்தை
அழுதுகொண்டிருக்கிறது தனியாக
கர்ப்பிணியின் வயிற்றைக் குத்தி
சிசுவின் உருவாகாத உடலைக் கிழித்தும்
தேடித் தேடிக் கொன்றும்
கொண்டாடுகிறார்
கையில் சூலமேந்தியவர்கள்

நிகழ்ந்த வரலாறின்
கரிய நிழல்
சூழ்ந்திருக்கிறது நாற்புறமும்

வெடிக்கின்றன குண்டுகள்
காய்கறிச் சந்தையிலும்
பேருந்துகளிலும்
பொது ஜனங்கள் அல்லாட

ஃப்ளூரசண்ட் திரைகளில்
வெடித்த மற்றும் வெடிக்காத
குண்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வரலாற்று நாயகர்கள்
ஏசி அறைகளில் சொகுசாக

30 comments:

Nadesh said...

//சிசுவின் உருவாகாத உடலைக் கிழித்தும்//

மேற்கண்ட வரிகளைப் படிக்கும் போது ஈரல் குலையை பிடித்து யாரோ உலுக்குவது போல உணர்ந்தேன்...

//நிகழ்ந்த வரலாறின்
கரிய நிழல்//

poetic.....

உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் சுந்தர்!!


அன்புடன்,
அருண்.
http://arun-nadesh.blogspot.com/

மோகன் கந்தசாமி said...

க்ளாஸ்....!

மஞ்சூர் ராசா said...

இன்று படித்த ரிஸான் ஷெரிப்பின் கவிதை ஒன்று :

புதைகுழி வீடு !

அத்திவாரத்தை
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !

முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !

உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !

பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !

இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !

விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !

அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !

உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

எம்.ரிஷான் ஷெரீப் said...

" வினை - எதிர்வினை - தொடர்வினை "

அருமையான கவிதை. ஆயுதங்கள் ஆண்டுவரும் தேசங்களின் வலியை உரக்கப் பேசுகிறது.வாழ்த்துக்கள் சுந்தர்.

கவிதைக்கான இணைப்பினைத் தந்த நண்பர் மஞ்சூர் ராசா அவர்களுக்கு நன்றி...!

Nadesh said...

//ஃப்ளூரசண்ட் திரைகளில்
வெடித்த மற்றும் வெடிக்காத
குண்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வரலாற்று நாயகர்கள்
ஏசி அறைகளில் சொகுசாக//

Karl Kraus-ன் மேற்கோள் ஓன்று நினைவுக்கு வந்தது.

"Sentimental irony is a dog that bays at the moon while pissing on graves."

ரிஷான் ஷெரீப் கவிதைகளை அறிமுகம் செய்த தோழர் "ராசா" அவர்களுக்கு நன்றி.

//உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?//

அதிகார மையங்களின் தாழ்வாரங்களில் உலவும் அப்பாவி ஆவிகளின் ஆன்மக் கூக்குரல்.

அன்புடன்,
அருண்.
http://arun-nadesh.blogspot.com/

நல்லதந்தி said...

கவிதை நன்றாக உள்ளது.இதே போல் பலப்பல குண்டு வெடிப்புகளில் இறந்த குழந்தைகளையும்,,அந்த குண்டு வைத்தவர்களைப் பற்றியும் எழுதுவீர்கள் என்றே நினைக்கிறேன்!

கிருத்திகா said...

சொல்லண்ணாத்துயரத்தை கவிதை வரிகள் மட்டுமல்ல அதன் தலைப்பும் கொணர்கிறது சுந்தர்...

M.Saravana Kumar said...

இங்கு இதுவும் நடக்கும். இதற்க்கு மேலும் நடக்கும்..

லக்கிலுக் said...

பொட்டிலடிப்பது போல கடுமையான அதிர்ச்சியை தருகிறது இந்த கவிதை :-(

கென்., said...

கால் பிய்க்கப்பட்ட குழந்தை
அழுதுகொண்டிருக்கிறது தனியாக
கர்ப்பிணியின் வயிற்றைக் குத்தி
சிசுவின் உருவாகாத உடலைக் கிழித்தும்
தேடித் தேடிக் கொன்றும்
கொண்டாடுகிறார்
கையில் சூலமேந்தியவர்கள்

நிகழ்ந்த வரலாறின்
கரிய நிழல்
சூழ்ந்திருக்கிறது நாற்புரமும்


நாற்புரமும் = நாற்புறமும் நல்ல கவிதை இது பொட்டிலடித்தார்ப்போல்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி நடேஷ் & மோகன் கந்தசாமி.

பின்னூட்டத்திற்கும் கவிதைக்கும் நன்றி மஞ்சூர் ராசா.

நன்றி, ரிஷான் ஷெரீப்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லதந்தி, கிருத்திகா, சரவணகுமார், லக்கிலுக்.. நன்றி.

கென். நன்றி. திருத்திவிட்டேன் :)

நிலா முகிலன் said...

அருமையான கவிதை வரிகள். வெடிகுண்டுகள் வேடிக்காதிருக்கட்டும்..

Anonymous said...

Fabulous poem!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நிலா முகிலன் & அனானி.

Anonymous said...

politically correct bullshit

ஜமாலன் said...

//ஃப்ளூரசண்ட் திரைகளில்
வெடித்த மற்றும் வெடிக்காத
குண்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வரலாற்று நாயகர்கள்
ஏசி அறைகளில் சொகுசாக//

இதுதான் பொட்டில் அறையும் வரிகள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி, நன்றி. தோன்றுவதை / சரியெனப் படுவதையே எழுதுகிறேன். அது பொலிடிக்கலி கரெக்டா இல்லையா என்பது அவரவர் பார்வை.

நன்றி, ஜமாலன், பின்னூட்டத்திற்கும், உங்களுடைய ஷேர்ட் ஐட்டத்தில் இதைச் சேர்த்ததற்கும்.

தமிழன்... said...

இவற்றையும் எழுதுங்க...!

கயல்விழி said...

:(

Anonymous said...

வினை - கோத்ரா படுகொலை
எதிர்வினை- குஜராத்தில் முஸ்லீம்கள்
கொலை செய்யப்படுதல், தாக்கப்படுதல், சொத்துக்கள் சேதப்படுதல்
தொடர்வினை- இது ஆளுக்கு ஆள் மாறுபடும்.செக்யுலரிஸ்ட்களுக்கு
குஜராத் முடிவற்ற தொடர்வினை.
மோடியை எப்போது வேண்டுமானாலும்
திட்ட ஒரு காரணம்.தாங்கள் செக்யுலரிஸ்ட் என்பதை நிருபீக்க
கோத்ராவை விட்டுவிட்டு அதற்கு
எதிர்வினையாக நடந்ததை வினையாக
காட்டுவது, தீவிரவாதம் வெறும் எதிர்வினை என்று திசை திருப்புவது
அல்லது அதை மறைமுகமாக
நியாயப்படுத்துவது போன்று பல
வழிகளில் பலருக்கு பலன் தருவது.
அதற்கோர் சான்று இக்கவிதை.

Anonymous said...

ஷியாக்கள் சுன்னிகளைக் கொல்வது,பாகிஸ்தானில் நடக்கும்
தொடர் குண்டு வெடிப்புகள், ஈரானில்
அரசு செய்யும் மனித உரிமை மீறல்கள், சூடானில் டாபுர் பகுதியில்
நடப்பது - இது குறித்தெல்லாம்
கண்டித்து எழுதிவிடாதீர்கள்.எழுதினால்
நீங்கள் செக்யுலரிஸ்ட் இல்லை.

Anonymous said...

ஃப்ளூரசண்ட் திரைகளில்
வெடித்த மற்றும் வெடிக்காத
குண்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வரலாற்று நாயகர்கள்
ஏசி அறைகளில் சொகுசாக

வரலாற்று நாயகர்கள் என்பதை
அறிவு ஜீவிகள்,கவிஞர்கள் என்று
எழுதினாலும் சரியாகத்தான் இருக்கும்.
அதுதான் மிகச்சரியாக இருக்கும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தமிழன், கயல்விழி & மூன்று பின்னூட்டங்கள் போட்ட அனானி :)

ottakuththar said...

நிகழ்ந்த வரலாறின்
கரிய நிழல்
சூழ்ந்திருக்கிறது நாற்புறமும்///

அழமான வரிகள் அனைவரின் உள்ளத்திலும் எதோ ஒருவகை கரிய வரலாற்று உணர்வு தொடந்து கொண்டுதான் உள்ளது சாதியாகவும் சமயமாகவும் பொருள் வெறியாகவ்ய்ம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஒட்டக்கூத்தர்.

நர்மதா said...

சம்பவங்களின் யதார்த்ததுடன் வீச்சான கவிதை. கவிதையின் முடிவு அருமை என்பது மட்டுமல்ல காலத்துக்கு தேவையான எழுத்து.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நர்மதா.

சூர்யா - மும்பை said...

கவிதை அருமை. ஆனால் வினை பற்றிய வரிகள் எங்கே?

அன்புடன்

சூர்யா.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சூர்யா.