(1)
ஒன்றுமில்லாமல் இருக்கிறேன்
ஒன்றுமில்லாமல் இருக்கிறாய்
ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்
பகல் இரவு மாலை காலை
போகும் வரும்
(2)
எல்லாருக்கும் இருக்கும்
அதே சூழலும்
அதே மனிதர்களும்
அதே மனித உறவுகளும்
எனக்குக் கற்றுத் தருபவை
வேறாக உள்ளன
போலவே
என் எதிர்வினைகளும்
(3)
சொல்கிற அவனுக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறோமென்று
கேட்கிற எனக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறானென்று
ஆனாலும்
அவன் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான்
நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்
கார்காலக் குறிப்புகள் - 60
5 hours ago
16 comments:
சுந்தர்,
இரண்டும் மூன்றும் யோசிக்க வைக்கிறது. நன்று. ஒன்று இன்னும் பிடிபடவில்லை. நகுலனின் 'நில் வா போ' மாதிரி உள்ளது. யோசித்துவிட்டு வருகிறேன்.
அனுஜன்யா
//சொல்கிற அவனுக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறோமென்று
கேட்கிற எனக்கும் தெரியும்//
உண்மையை உரக்கச் சொல்கிற வரிகள்..
நர்சிம்
சுந்தர் அண்ணா 3 கவிதையும் நல்லாருக்கு
எழுதப்படாத வரிகள் புலப்படும் எழுதப்பட்ட வரிகள்.
ரசிக்கவும், சிந்திக்கவும், பெருமூச்சுடன் நகைக்கவும்...
Hats off!!
கடைசி கவிதை நம்மளை பற்றியதா?
//ஒன்றுமில்லாமல் இருக்கிறாய்
ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்//
ஈவிரண்டும் சொல்வது ஒன்றுதானே?
முதல்வரி தேவையான அருகாமையைத் தந்துவிடுகிறது;
//இருக்கிறார்கள்// சொல்லும் விலகி இருத்தலுக்கான தூரத்தை,
//பகல் இரவு மாலை காலை
போகும் வரும்//
தந்துவிடுகிறது
//இருக்கிறாய்// என்பதை என்னால் 'பன்மை'யாக வாசிக்க முடிந்தது
ஒன்றுமே இல்லை.. எதிர்வினை... நடந்து கொண்டிருக்கிறது..
தன்னிஷ்டம் போல்.
:)
நன்றி, அனுஜன்யா.
நன்றி, நர்சிம்.
நன்றி,அதிஷா.
நன்றி, நடேஷ்.
வால்பையன், சுந்தரேஸ்வரன் & சரவணகுமார்... நன்றி.
"சொல்கிற அவனுக்கும் தெரியும்
சும்மாதான் சொல்கிறோமென்று
கேட்கிற எனக்கும் தெரியும்......."
ம்ம்ம்
இப்படித்தான் எப்போதும்
நட்பு வட்டம்
மட்டுமல்ல
நன்றி, கிருத்திகா.
கலக்கல்...
//எல்லாருக்கும் இருக்கும்
அதே சூழலும்
அதே மனிதர்களும்
அதே மனித உறவுகளும்
எனக்குக் கற்றுத் தருபவை
வேறாக உள்ளன
போலவே
என் எதிர்வினைகளும்///
//
ஒன்றுமில்லாமல் இருக்கிறேந்
ஒன்றுமில்லாமல் இருக்கிறாய்!?!?
//
naked?????
//
எல்லாருக்கும் இருக்கும்
அதே சூழலும்
அதே மனிதர்களும்
அதே மனித உறவுகளும்
எனக்குக் கற்றுத் தருபவை
வேறாக உள்ளன
//
அதுதான் வாழ்க்கை!!
:)))))))
எல்லா கவிதைகளும் மிக அருமை
நன்றி, டிபிசிடி & மங்களூர் சிவா.
Post a Comment