மாலதிக்கும் தரணிக்கும் சிறுசண்டை வந்தபோது தரணி, 'நீ உன்புருஷன விட்டு என்கூட வந்தே.. வேற ஒருத்தன் கிடைச்சா என்னவிட்டு ஓடிப்போயிட மாட்டியா என்ன' எனக் கேட்டிருக்கிறார் - அதீதனிடம் மாலதி தொலைபேசியில் சொன்னது.
மாலதிக்கு தரணியின் மூலம் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. முதல் குழந்தை நார்மல் டெலிவெரி என்றாலும் இது சிசேரியன் ஆப்ரேஷன் - இதுவும் அது.
மாலதிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற வியாதிகள் வந்துவிட்டன. காரணம் தரணிதான். மாலதிமேல் சந்தேகப்படுகிறார் தரணி - இதுவமது.
மாலதியின் சிறுவயது சினேகிதன் சீனிவாசனுடன் ஒருநாள் வீட்டில் அவள் தனியாக இருந்தபோது வெளிக்கதவைப் பூட்டிவிட்டு காவல்துறைக்கு பிராத்தல் நடப்பதாகத் தகவல் தந்துவிட்டார் தரணி - இது வேறு.
போலீஸ், நண்பர்கள் தலையீடு, தகராறு, சமரசம், பிரிவு - இதுவும் வேறு.
தரணி மும்பையில் வேலைகிடைத்து மாலதியையும் குழந்தைகளையும் பிரிந்து சென்றுவிட்டார் - அதீதனின் நண்பன் சொன்னது.
பிருந்தா அவளது இரண்டாவது கணவரின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவளது ஒரே குழந்தையுடன் - அதுவும் இது.
மாலதியைப் பற்றிய தகவல்கள் இல்லை - அதுவுமிது.
வந்தனாவுக்கு அதீதனுடனான தொடர்பு தெரிந்ததும் பிரதீப் அவளை விரட்டிவிட்டான். அவள் அதீதனையும் நிராகரித்து உடன் பணிபுரிந்த சந்தோஷுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்; நடுவில் சிலகாலம் அவள் மனது மறுபடியும் அதீதன்மேல் அலைபாய்ந்தாலும் அடக்கிக் கொண்டாள் - தனிப்பட்ட தகவலிது.
அதீதன் வீட்டிற்கு மொட்டைக் கடிதம் வந்தது, அதீதன் சந்தோஷுடன் பயந்து கொண்டே சண்டைக்குப் போனது, வந்தனா இடையில் கொஞ்ச காலம் சந்தோஷுக்குத் தெரியாமல் அவன் நண்பனான தவில் கலைஞன் பிரேமுடன் உறவு வைத்திருந்தது - இதுவமது, அதுவுமிது, வேறுவேறு.
பிரதீப் தனிமையில் வைசாக்கில் இருக்கிறான் இப்போது. அவனது பணமெல்லாம் தொலைந்து காரோட்டியாகப் பணிபுரிகிறான் - இது அதீதன் சொன்னது. கற்பனையாகச் சொல்கிறான் என நினைக்கிறேன். காரணமிருக்கிறது...
அலைபேசியில்லாத காலமது. ஒருமுறை அதீதன் தொலைபேசியில் வந்தனாவை அழைத்தபோது பிரதீப் எடுத்துவிட்டான். இது என் வீட்டு ஃபோன் கண்டவர்கள் ஃபோன் செய்யவேண்டாமென இரைந்தான். நேரில் பார்த்தால் அதீதனை உதைப்பதற்கும் தயாராய் இருப்பதாய் அறிவித்தான்.
பிரதீப் ஒரு முரடன் என்று மாலதி சொல்லியிருக்கிறாள். அவள் தங்கையை தெருவில் போகும் ஒருவன் கிண்டலடித்தபோது காரிலிருந்து இறங்கி அவன் சட்டையைப் பிடித்து அறைந்து தெருவெல்லாம் இழுத்துச் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்வரை அடித்தானாம்.
அதீதன் பதில் பேசாமல் அப்போதிருந்துவிட்டு இப்போது வாய்ப்பு கிடைத்ததும் பிரதீப்மேலான கோபத்தை இப்படிக் கதையில் புகுத்தித் தீர்த்துக் கொள்கிறானோ என்னவோ?
(இந்தக் கதையின் கடைசிப் பகுதி கட்டுரையாக வெளியாகும்)
கார்காலக் குறிப்புகள் - 60
5 hours ago
14 comments:
:)
சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்!
Thanks to your stories, one so called Non Profit Org called TamilManam has earnt good Google advt. revenues. They are actually an aggregator, and if all the bloggers, refuse to share their posts with them, there are gone!
ஒவ்வொரு சாப்ட்வேர் கம்பெனியும் சொந்த பயுனுக்காக இன்டர்நெட் வசதி நிறுத்தினால், இந்தே வம்பு வராது.
கட்டுரையை வாசிக்கறோம்..:)
அதுதான் இதுவா
இல்லை
இதுதான் அதுவா
ஒருவேளை
அதுவுமிதா
இல்லை
இதுவுமதா
எது எப்படியே
அத மட்டும் மறந்துராதிங்க
இத சொல்லத்தான் நான் வந்தேன்
வால்பையன்
மங்களூர் சிவா, ரமேஷ், தமிழன் & வால்பையன்... நன்றி.
படுபாவிகளா!! யு.எஸ்.ல வில்லங்கமான சர்வே அப்பப்ப எடுப்பானுங்க. நீங்க எத்தனை பேரு கூட தொடர்பு வெச்சிகிட்டீங்க அப்படின்னு, ஆண்கள் 70% மூன்றுக்கும் அதிகமான பெண்களுடனும், பெண்கள் 30% மூன்றுக்கும் அதிகமான ஆண்களுடனும் தொடர்பில் இருப்பதாக தெரிகிறதுன்ற கணக்கா ஒரு முடிவு வெளியிடுவானுங்க. இங்க என்னாடான்னா 100% பாலின பேதமில்லாம எல்லாரும் எல்லார் கூடவும்..ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி, வெண்பூ
Sundar,
I feel something is missing from your recent posts. What happend??
Hope you'll be back to form. I like your poems very much than your blogs.
http://arun-nadesh.blogspot.com/
// I like your poems very much than your blogs.//
Sorry.. Its not "blogs" "stories"
http://arun-nadesh.blogspot.com/
பகிர்வுகளுக்கு நன்றி, நடேஷ்.
சிக்கல் அதிகமாயிட்டே போகுதே.. ம்முடியலே
நன்றி, அனானி.
நன்றி
ஷேர்விவேக், புரியல.. எதுக்கு நன்றி??
Post a Comment