வழமையாக

முன் அறிவிக்கப்படாத
கணமொன்றில் நிகழ்ந்தது அது

அழகற்றது
உணர்ச்சிக் குவியல்
ஏற்கனவே சொல்லப்பட்டதன்
சரியாய்த் தெரியாத நகல்
உயிரற்றது பாசாங்கானது
தோலால் மூடப்பட்ட எழும்பாத குறி
ஆபாசச் சிரிப்பு
பொருளற்ற வார்த்தை ஜாலம்

அற்புதமானது அழகானது உண்மையானது

முன் அறிவிக்கப்படாத கணங்களில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது

11 comments:

narsim said...

காமக் கவிதைகள்45 ல 1ஆ??

வார்த்தை பிரயோகம் பிரவாகம்...

நர்சிம்

M.Saravana Kumar said...

எது???
:(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நர்சிம் & சரவண குமார்.

அதிஷா said...

நல்ல கவிதை மாதிரி இருக்கு

இது என்ன விடுகதைமாதிரி
விடுகவிதையா

ஸ்ரீதர் நாராயணன் said...

இந்த கவிதையும் தலைப்பும் ஒரு சிறுகதையாக தெரிகிறது.

உங்க பதிவுகள்ல தொடர்ந்து படிக்கிறது கூட ஒரு காரணமாயிருக்கலாம். இனிமேல் குறைச்சுக்க்ப பாக்கிறேன் :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அதிஷா & ஸ்ரீதர் நாராயணன்.

லக்கிலுக் said...

//உயிரற்றது பாசாங்கானது
தோலால் மூடப்பட்ட எழும்பாத குறி//

சூப்பர்.. சூப்பர்!! :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, லக்கிலுக்.

King... said...

வழமைபோல...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிங்.

தமிழ்நெஞ்சம் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்