பாரிய வித்தியாசங்கள் (அ) திரும்பத் திரும்ப

சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டிருக்கிறான் பைத்தியக்காரன்
பேசியதையே திரும்பத் திரும்பப்
பேசிக் கொண்டிருக்கிறான் மேடையில் அரசியல்வாதி
அதே துணையைத் திரும்பத் திரும்பப்
புணர்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்
ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச்
செய்துகொண்டிருக்கிறார்கள் குமாஸ்தாக்கள்
ஒரே கவிதையைத் திரும்பத் திரும்ப
எழுதிக் கொண்டிருக்கிறான் நகுலன்
ஒரே பிராண்டைத் திரும்பத் திரும்பக்
குடித்துக் கொண்டிருக்கிறான் அதீதன்

26 comments:

Anonymous said...

orea blogai thiruma thirumba padiththukondu irukkiroam naangkaL !!!!

Bala

முரளிகண்ணன் said...

ஒரே பின்னூட்டத்தையே திரும்ப திரும்ப போடுகிறேன் நான்

நல்லாயிருக்கு

வால்பையன் said...

ஒரே பிளாக்கில் திரும்ப திரும்ப
எழுதி கொண்டிருக்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர்

Arun Nadesh said...

//அதே துணையைத் திரும்பத் திரும்பப்
புணர்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்//

அதீதனுக்கு இது பொருந்துமோ..???
பதில் "இல்லை" என்றால் அதீதன் மனிதனில்லையா??

//சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டிருக்கிறான் பைத்தியக்காரன்//

இதில் குறிப்பிடப்பட்டுள்ள "பைத்தியக்காரன்", பதிவர் பைத்தியக்காரனா??

:-)

மணிவண்ணன் said...

படித்ததையே திரும்பத் திரும்ப
படித்துக் கொண்டிருக்கிறான் மணியன்.

காமக் கதைகளைத் தான் சொன்னேன். அதீதன் அதுக்கு அப்பறம் கதை எதுவும் சொல்லலையா? :(

anujanya said...

சுந்தர்,

//அதே துணையைத் திரும்பத் திரும்பப்
புணர்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்
ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச்
செய்துகொண்டிருக்கிறார்கள் குமாஸ்தாக்கள்//

இரண்டும் ஒன்றே தானோ!

Refer முரண் :
(//புணரக் காத்திருக்கும் மனைவியை
அடைய விரைகிறார்கள் குமாஸ்தாக்கள்//

நல்லா இருக்கு

அனுஜன்யா

MSK / Saravana said...

ஆமாம்.. ஆமாம்..

இயல்பாகிவிட்டது..

Anonymous said...

anpin sakootharan

www.vimbam.blogspot.com


vanththu ungkaL karuththai pathivu seiungkal


anpudan
appuchchi

தமிழன்-கறுப்பி... said...

இப்ப என்ன சொல்றிங்க...:)

Anonymous said...

காமக்கதைகளும் திரும்ப திரும்ப வருது தானே.. ஒரேடியா நிறுத்திடீங்க?

narsim said...

//சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டிருக்கிறான் பைத்தியக்காரன்
பேசியதையே திரும்பத் திரும்பப்
பேசிக் கொண்டிருக்கிறான் மேடையில் அரசியல்வாதி//

இரண்டும் ஒன்னு இல்லையா??

நர்சிம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பாலா, நன்றி.

முரளிகண்ணன், நன்றி.

வால்பையன், நன்றி.

நடேஷ், நன்றி. பைத்தியக்காரன் என் நல்ல நண்பர்தான். அவரை யாராவது பைத்தியக்காரன் எனத் திட்டினால் கோபப்படமாட்டார் (மகிழ்வார்??) :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மணிவண்ணன்.

நன்றி, அனுஜன்யா.

நன்றி, சரவணகுமார்.

நன்றி, அப்புச்சி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தமிழன், அனானி & நர்சிம்... நன்றி.

மங்களூர் சிவா said...

//
வால்பையன் said...

ஒரே பிளாக்கில் திரும்ப திரும்ப
எழுதி கொண்டிருக்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர்
//

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

திரும்ப திரும்ப ரிப்பீட்டு போட்டுக்கொண்டிருக்கிறேன் நான்
:))

மங்களூர் சிவா said...

/
Nadesh said...

//அதே துணையைத் திரும்பத் திரும்பப்
புணர்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்//

அதீதனுக்கு இது பொருந்துமோ..???
பதில் "இல்லை" என்றால் அதீதன் மனிதனில்லையா??
/

வெரி குட் கொஸ்டியன்
:))))

Anonymous said...

kettaarulle nadesh oru kelvi?
kettaarulle, kettaatulle, kettaarulle?!? ;-)

Anonymous said...

pala thunaigalai punaranumnu dhaan pala perukku aasai.

azhagu, arivu, pechu thiramai, panam, padhavi idhula edhaavadhu onnu, rendu amainjaa mudichu koduthiralaam. hehehe ;-)

Anonymous said...

"பாரிய" என்றால் என்ன?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மங்களூர் சிவா.

நன்றி, அனானி.

பெரிய என்ற அர்த்தத்தில் உபயோகித்திருந்தேன்.

Vaa.Manikandan said...

சுந்தர்,

நல்ல கவிதை. அரசியல்வாதியைத் தவிர்த்திருக்கலாம். அது திரும்ப திரும்ப சொல்லப்பட்ட விஷயம். வேறு வடிவங்களில்.

குசும்பன் said...

சுந்தர்ஜி வா.ம போல் நானு சொல்கிறேன் அரசியல்வாதியை தவிர்த்து இருக்கலாம், ஏற்கனவே சதுரம்,முக்கோணம்,வட்டம், உருளை,செவ்வகம் என்ற பலவடிவங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.:)))

குசும்பன் said...

//ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச்
செய்துகொண்டிருக்கிறார்கள் குமாஸ்தாக்கள்//

இரண்டும் ஒன்றே தானோ!

Refer முரண் :
(//புணரக் காத்திருக்கும் மனைவியை
அடைய விரைகிறார்கள் குமாஸ்தாக்கள்// //


போத்திக்கிட்டு படுத்தா என்ன படுத்துக்கிட்டு போத்திக்கிட்டா என்ன? விசயம் ஒன்னுதானே???

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மணிகண்டன். எழுதியதும் எனக்கே லேசாக உறுத்தியது :(

நன்றி, குசும்பன்.

ஜமாலன் said...

//அதே துணையைத் திரும்பத் திரும்பப்
புணர்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்//

நல்ல கவிதை. இதில் மனிதர்கள் என்பதற்கு பதிலாக கணவர்கள் என்று இருந்திருக்கலாமோ?..

வழக்கம்போல ரொமாண்டிசிஷம் இல்லாத உங்கள் கவிதைகள் அருமையாக உள்ளன.