பொலிடிக்கலி கரெக்ட்யாய் ஒரு கவிதை

தேவடியாள் என்றால்
வெகுஜனத்திற்குக் கரெக்ட்
பாலியல் தொழிலாளி என்றால்
அறிவுஜீவிகளுக்குப் பொலிட்டிகலி கரெக்ட்
யாராவது விளக்குங்கள்
எது எல்லோர்க்குமான பொலிட்டிகலி கரெக்ட்டென்று
இல்லையா குறைந்தபட்சம்
விளக்காவது பிடியுங்கள்

கஞ்சா பிடிப்பதும் காய் அடிப்பதும்
பலருக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
ஹூக்கா பிடிப்பதும் முலைதிருகுவதும்
கதை எழுதுபவர்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்

குண்டு போடுவது எதிர்வினை என்றால்
ஸ்ரீனிவாஸ்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
அறம் அழிவென்றால் எல்லாமே கரெக்ட்
கரெக்ட் இன்கரெக்ட் கரெக்ட் இன்கரெக்ட்
கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட்

பொலிடிக்கலி கரெக்ட்டாகக் கவிதைஎழுத ஆசைப்படுகிறான் அரசியல் கலப்பை (முண்டக் கலப்பை அல்ல) விரும்பாத பொலிடிக்கலி கரெக்ட் பர்ஸன்.

(நண்பர் நர்சிம்மின் வலைப்பதிவில் அவரது ஐம்பதாவது இடுகைக்காக எழுதப்பட்ட கவிதை)

8 comments:

Anonymous said...

'இல்லையா குறைந்தபட்சம்
விளக்காவது பிடியுங்கள்'

ஆம், பவர்கட்டின் போது விளக்குப்
பிடித்தால் கோடிப்புண்ணியம் :)

Anonymous said...

ippidi edhaiyachum kevalama eludhuradha vida thooku matikalam; illana atleast velakachu pudikalam. thoo..

Ramesh said...

//விளக்காவது பிடியுங்கள்//

நான் சந்தித்த அரசியல்வாதிகள் அரசாங்க ஊழியர்களை பார்த்து நக்கலாக சொல்வது, தமிழ்நாட்டில்.... சிரித்த முகத்தோடு வேலை செய்துவிட்டு, கோபங்களை வீட்டில் தான் காண்பிக்க வேண்டும்...(அது வேறு விஷயம், பல கவிதைகள் எழுதலாம்... என்னுடைய உன் புன்முறுவல் ஒன்று போதுமே மாதிரி...)

உள் அர்த்தம் நிறைந்த கவிதை. வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முதல் அனானி, நன்றி.

இரண்டாவது அனானி, கூல்!

ராம், நன்றி.

வால்பையன் said...

கரைக்டா தான் சொல்லியிருக்கிங்க

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வால்பையன்.

MSK / Saravana said...

கலக்கல்.. :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சரவண குமார்.