வளர்மதி விலகல்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்
- பிரமிள்

வளர்மதியை நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக வாசித்து வருகிறேன். கவிதாசரணில் அவரை முதலில் படிக்கத் துவங்கியவன், பிறகு பழைய நிறப்பிரிகை இதழ்களிலும் அவருடைய எழுத்துகளைத் தேடிப் படித்தேன்.

அவர் வலைப்பதிவில் எழுதுகிறார் எனத் தெரிந்ததும் மிக மகிழ்ச்சியடைந்தேன். நான் அப்போது வலைப்பதிய ஆரம்பித்திருக்கவில்லை. அறியப்பட்ட அறிவுஜீவிகளுடன் நேர்ப்பழக்கம் வைத்துக் கொள்வதில் எனக்கு மனத்தடை உண்டு. அதையும் மீறி, அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி 2007 நவம்பர் முதல்வாரத்தில் நேரில் சந்தித்தேன். நவம்பர் இறுதியில் நானும் வலைப்பதியத் துவங்கினேன்.

அப்போதிலிருந்து அவர் மீதான மதிப்பு கூடிக் கொண்டிருக்கிறதே தவிர, குறைந்ததில்லை. தமிழில் இருக்கக்கூடிய முக்கிய சிந்தனையாளர்களுள் அவர் ஒருவர் என்பது என்னுடைய திடமான தீர்மானம்!

போன வருட இறுதில் துவங்கிய எங்களுடைய நட்பு இன்னமும் நெருக்கமாகியிருக்கிறது. அவருடன் கழித்த நேரங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. பெரிய சிந்தனைவாதி என்பதான தோற்றம் எதுவும் தராமல் உடனிருப்பவர்களுடன் பழகுவது அவருடைய தனிப்பண்பு. தான் அடையாளம் கண்ட சில இளைஞர்களை அவர் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவ்விளைஞர்கள் இலக்கியம் மட்டுமல்லாது பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள்!!

அடிப்படையில் அவர் மிகவும் ஜாலியானவர். அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அவரது குணத்திற்குத் தீங்கு வருமோ என நினைத்து திரட்டிகளிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

அவரது தீவிர வாசகர்கள் தொடர்ந்து அவரை வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள் - புதிதாக வரும் வாசகர்களுக்கு அவரிருப்பது தெரியாமல் போய்விடக்கூடிய அபாயமிருக்கிறது. ஆனாலும், பலர் இணைப்புச் சுட்டி தந்திருக்கின்றனர். தமிழ்மானம் போன்ற வலைச்சிற்றிதழ்களும் அவருடைய எழுத்துகளைத் தாங்கி வருகின்றன. அதன்மூலம் அவரைப் புதுவாசகர்கள் படிக்கலாம்.

தமிழ்மணப் பொது வாசகர்களுக்கு அவரது விலகல் இழப்பே. இதை, அடிப்படை அறமோ நேர்மையோ அற்று திருடன் போன்ற வசைகளை வீசிச்செல்லும் சில பின்னூட்ட / தனிப்பதிவு கருத்து கந்தசாமிகள் கொண்டாடலாம்! அவர்கள் எங்கு பிரச்சனை என்றாலும் பின்னூட்டியோ அல்லது தனிப்பதிவிட்டோ ஊதிப் பெரிதாக்குபவர்கள் :( இப்போதைக்கு கட்டற்ற இணையப் பொதுவெளியில் ஒன்றும் செய்ய இயலாது :((

இனியாவது அவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் காழ்ப்பு தீர்ந்தால் நல்லது.

நல்லா இருங்க மக்கா!!!

திரட்டிகளில் இல்லாவிட்டாலும் வளர்மதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது என் அவா. அவரும் அப்படியே செய்வார் என்பது என் நம்பிக்கை!

19 comments:

- யெஸ்.பாலபாரதி said...

:(

தொடர்ந்து வாசிக்க என் போன்ற பலர் இருக்கிறோம்.

narsim said...

நல்ல எழுத்துக்களை தேடிச்சென்று வாசிப்பவர்கள் கட்டாயம் வளர்மதியை வாசித்துவிடுவார்கள்.. விடுவேன்..

நர்சிம்

வால்பையன் said...

வருத்தமான செய்தி தான்.

Sridhar Narayanan said...

//தமிழ்மணப் பொது வாசகர்களுக்கு அவரது விலகல் இழப்பே. //

தமிழ்மணம் தானாகவும் பதிவுகளை திரட்டுகிறது. வளர் தீவிரமாக தமிழ்மணத்தில் வரக்கூடாது என்று நினைத்தாலேயன்றி, யார் வேண்டுமானாலும் அவருடைய இடுகைகளை தமிழ்மணத்திற்கு அனுப்பலாம். செல்வராஜோ / தமிழ்சசியோ இதைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

திரட்டிகள் மூலம் பரவலான வாசகர் வட்டம் உருவாகிறது என்பது மிகவும் முக்கியமானது. தமிழ்மணம் ஒரு வழியென்றால் அதைப் போல பல வழிகளும் இருக்கின்றன. அவற்றை தயங்காமல் செயல்படுத்தலாம் வளர். இதை அவர் பதிவிலும் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். :-)

ரவி said...

///அடிப்படை அறமோ நேர்மையோ அற்று///

இந்த "அடிப்படை அறம்" அடுத்தவரை ஈனப்பிறவி என்று எழுதும் நபர்களுக்கு பொருந்துமா ? அதை ஏன் நன்பர் சுந்தர் கேட்கவில்லை ?

கருத்து கந்தசாமி

:))

ரவி said...

///அவர்கள் எங்கு பிரச்சனை என்றாலும் பின்னூட்டியோ அல்லது தனிப்பதிவிட்டோ ஊதிப் பெரிதாக்குபவர்கள் ////

இணைய போலீசுகள் அதை செய்யட்டும். என்னுடைய நன்பர் ஒருவரை வசைபாடியதை பார்த்துக்கொண்டு பொறுத்துப்போகவேண்டும் என்றா சுரணை என்பது சற்றும் இல்லாத எருமைமாட்டுத்தோல் எனக்கு இருந்திருக்க வேண்டும்...அப்படி இல்லையே என்ன செய்ய ?

Anonymous said...

தமிழில் இருக்கக்கூடிய முக்கிய சிந்தனையாளர்களுள் அவர் ஒருவர் என்பது என்னுடைய திடமான தீர்மானம்!


:). If so then there is no thinker in Tamil.

Valar and Suguna dont have the maturity to engage in a healthy debate in public. Valar has been recycling his past writings and woes. Even if both stop blogging nothing is lost.Perhaps that will reduce the pollution in tamil blogs. I shed no tears for his decision. If they cant discuss their personal problems without washing each other's dirty linen in public what sort of creatures are they.

Anonymous said...

அடிப்படையில் அவர் மிகவும் ஜாலியானவர். அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அவரது குணத்திற்குத் தீங்கு வருமோ என நினைத்து திரட்டிகளிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்

This is laughable.Because an aggregator simply collects and
displays.How can this affect a
person's traits or character.
If he thinks so, the best solution is write under a different name.
Tamilmanam or any aggregator cannot
be responsible for bloggers weaknesses.

லக்கிலுக் said...

//அடிப்படையில் அவர் மிகவும் ஜாலியானவர்.//

உண்மைதான்.

வளர்மதியை தொடர்ந்து வாசிப்பேன்.

Ken said...

உணர்ச்சி வசப்பட்டு எடுக்கிற முடிவு இது. திரட்டிகளிலிருந்து விலகுதல் சரியானதாய் இல்லை.

கருத்து மோதல்கள், தகராறுகள் தனிப்பட்ட விவாதங்களை பொதுவில் வைப்பதை சம்பந்தபட்டவர்கள் தவிர்க்க வேண்டும் . மற்றபடி
யார் யாரோ , யார் எவரோ , எவர் யாரோ என்கிற நகுலன் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது :(

குப்பன்.யாஹூ said...

வளர்மதி தன் முடிவை மறு பரிசீலனை செய்து, மீண்டும் வழக்கம் போல எழுத வேண்டுகிறேன்.

தொடர்ந்து வாசிக்க விருப்பத்துடன் உள்ள ஒரு வாசகன்.

Anonymous said...

இதெல்லாம் ஸ்டண்ட்.கொஞ்ச நாள் கழிச்சு அவரே திரும்ப வந்து சேருவாரு.

King... said...

வாசிப்பதைதவிர வேறென்ன வேலை...

King... said...

சில விசயங்களை தவிர்க்கவே முடியவில்லை...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பாலபாரதி, நன்றி.

நர்சிம், நன்றி.

வால்பையன், நன்றி.

ஸ்ரீதர் நாராயணன். நன்றி. அவர் திரட்டி நிர்வாகத்தினருக்குத் தன் பதிவுகளை நீக்கும்படிக் கடிதமெழுதியிருக்கிறார் என அறிகிறேன்.

செந்தழல் ரவி. நன்றி. நண்பர்களுக்குள் பிரச்சனை வரும்போது முடிந்தால் தீர்த்துவைக்க வேண்டும். இல்லாவிட்டாலும், அது பெரிதாவது போல் எதுவும் செய்யாமலாவது இருக்க வேண்டும். இது என்னோட கருத்து :))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

லக்கி லுக், கென், குப்பன் யாஹூ, கிங் & அனானிகள்... நன்றி.

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி. நன்றி. நண்பர்களுக்குள் பிரச்சனை வரும்போது முடிந்தால் தீர்த்துவைக்க வேண்டும். இல்லாவிட்டாலும், அது பெரிதாவது போல் எதுவும் செய்யாமலாவது இருக்க வேண்டும். இது என்னோட கருத்து...//

இதனை வழி மொழிகிறேன் சுந்தர் ஸார்..

சும்மா இருந்தாலே போதும்.. கேக்க மாட்டேங்குறானுங்க..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உண்மைத் தமிழன்.

thiagu1973 said...

வளர்மதியின் விலகல் அறிவிப்பு வருத்தமளிக்கிறது