தமிழ் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் புனைவு / பத்தி எழுத்துகளில் என்னைக் கவர்ந்த சிலரது எழுத்துகளைப் பற்றிய விமர்சனம் இது :
பரிசல்காரன் (http://www.parisalkaaran.com/)
எல்லாவற்றையும் சுவாரசிய எழுத்தாக்கும் திறமை இவருக்கிருக்கிறது. அது சினிமா பற்றியதானாலும் சரி, சிகரெட் பற்றியானாலும் சரி. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலே ஒருமாதிரி சுவாரசிய நடை வந்துவிடும் என்பது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. பலருக்கு அதுவும் வாய்க்கவில்லை எனும்போது இதன் முக்கியத்துவம் புரியும்.
தொடர்ந்த பத்தி எழுத்துகளால் புனைவு எழுத்து பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது. இதைச் சிலர் மறுத்தாலும் என்னால் பல உதாரணங்களைத் தரமுடியும். இன்னொன்று, பத்தி எழுத்துகள் எவ்வளவுதான் சுவாரசியமாக இருந்தாலும், நினைவில் நிற்பதில்லை. முதல்படியாக, பத்தி எழுத்துகளைக் கட்டுரைகளாக உயர்த்தமுடியுமா எனப் பார்க்கலாம். இதைப் பரிசலும் யோசித்துப் பார்க்கலாம்.
ஸ்ரீதர் நாராயணன் (http://www.sridharblogs.com/)
இவர் சமீபமாக எழுதத் துவங்கியிருக்கிறார். அறிவியல்-புனைகதைகளை விறுவிறுபாக எழுதுகிறார். புனைவெழுத்தில் உத்திகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அதை அனாயசமாக கையாள்கிறார். இவரது பின்னூட்டங்களில் / பத்திகளில் வெளிப்படும் pro capitalism leanings எனக்கு உவப்பில்லாதது :(
நல்ல கதைமொழி இவருக்கிருக்கிறது. இன்னும் ஆழமான விஷயங்களை எழுதினால் மகிழ்வேன். இவர் நிறைய நல்ல சினிமா பார்ப்பவர்; திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை எழுதினால் எப்படியிருக்கும் என யோசித்துப் பார்ப்பது interesting!
நர்சிம் (http://www.narsim.in/)
வெகுஜன நடையில் பழந்தமிழ்க் கவிதைகளை இவர் கொடுக்கும் விதம் அழகு. அதற்குநான் தொடர் வாசகன். எப்படியாவது அவற்றைத் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.
சரளமான நடையில் வெகுஜனக் கதைகள் எழுதுகிறார். ஆனால் முடிவுகளில் முத்தாய்ப்பு வைப்பது போல் எழுதுவது கொஞ்சம் அபசுவரமாக இருக்கிறது. கதை வடிவத்தில் இவர் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல வெகுஜனக் கதைகளை இவரால் தரஇயலும்!
அனுஜன்யா (http://www.anujanya.blogspot.com/)
சமீபத்திய வலைப்பதிவு கவிதைகளில் இவருடையது எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. விருட்சம், கீற்று, உயிரோசை என கலந்துகட்டி இவரது கவிதைகள் வருகின்றன. தர்க்க-ரீதியான சிந்தனைகள் தேவைதான்; ஆனால் அவற்றைக் கவிதை ஆக்கத்தின்போது தவிர்த்துவிடுவது நலம்.
போலவே இவர் கவிதைகளுக்குப் பின்னூட்டங்களில் விளக்கம் தருவதையும் தவிர்க்கலாம். அவை அக்கவிதைகளுக்கு ஒற்றைப் பரிமாணத்தன்மையைத் தந்துவிடுகின்றன. கோடிட்டுக் காட்டலாம், ஆனால் நோட்ஸ் வேண்டாமே... இவர் நிறைய வாசிக்கவும் செய்கிறார் எனப் புரிகிறது. மகிழ்ச்சி.
யாரையும் அளவுக்கதிமாகப் பாராட்ட வேண்டுமென்பது என் நோக்கமல்ல. என்னளவில் நம்பிக்கையளிக்கும் வலைப்பதிவு எழுத்துகளை அறிமுகம் செய்வதும், அவர்களை இன்னமும் தீவிரமாக எழுதத் தூண்டுவதுமே என் விருப்பம்.
தனிப்பட்ட அளவில், பரிசல், நர்சிம் போன்றவர்களின் எழுத்து முறைமையை நான் நிராகரிப்பவனே. ஆனால், அவர்களிடம் தென்படும் தெறிப்பும் உழைப்பும் என்னை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. அதுவே பெரிய விஷயம்தானே!
லஞ்ச் எடுத்துவரவில்லை, மதியம் உணவிற்கு பிரியாணி சாப்பிடலாமா, சாயங்காலம் டீ குடிக்கலாமா என மூன்று பதிவுகளாகப் போட்டு துன்புறுத்துகிறார்கள் சிலர். டிஜிட்டல் டைரியாம்! கட்டற்ற சுதந்திரத்தில் ஒன்றும் செய்ய இயலாது!
கென் (http://www.thiruvilaiyattam.com/)
இதில் பெருந்தலைகளைப் பற்றி எழுதவேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனாலும் கென்னைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவரைச் சாரு நிவேதிதாவின் மூன்றாவது வாரிசாக வலையுலகம் அறியும்! மிகச் சிறு வயதில் (28 வயசுதானாம்) எப்படி இவ்வளவு அற்புதமாக எழுதுகிறார் என என்னை மலைக்கச் செய்யும் எழுத்து இவருடையது. இவரைப் புனைவிலக்கியத்திற்கு இழுத்துவந்த தல பாலபாரதிக்கு நன்றி.
இவரது ராபித்தும் பள்ளிவாசல் பாங்குச் சத்தமும் மற்றும் பல புனைவுகள் என்னை மிகவும் கவர்ந்தன. தொடர்ந்து கவனித்து வாசிக்கப்பட வேண்டியவர் கென்.
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
42 comments:
Accept the list!
பரிசல்! வாஸ்த்யாயனர் வாயால் பிரம்மரிஷி பட்டம் !
மிக்க நன்றி சுந்தர்ஜி..
நீங்கள் கூறிய குறையையும்(அபசுவரம்) தவிர்க்க முற்படுவேன்.. கருத்துக்கும் வாசிப்பிற்கும் வாழ்த்திற்கும் வழிகாட்டலுக்கும் மிக்க நன்றி..
ம(நெ)கிழ்ச்சியாக உணர்கிறேன்...
நர்சிம்
பத்தி எழுத்துகளிலேயே சுற்றி கொண்டிருந்த எனக்கு இது ஒரு புது அனுபவம்!
நன்றி
:-) விமர்சனத்துக்கும், தொடர் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.
//திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை எழுதினால் //
இதைப் பற்றி ஏற்கெனவே யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அதற்கு நிறைய தயார்படுத்திக் கொள்ள வேண்டுமே. தற்போது க்ளீன் ஸ்லேட்தான். :-)
பரிசல், நர்சிம், அனுஜன்யா, கென் இவர்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பேன். பரிசலின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது :-)
இப்பொழுதெல்லாம் படிக்க மட்டும்தான் நேரமிருக்கிறது. அவ்வளவு தமிழ் பதிவுகள் இருக்கின்றன :-)
ரொம்ப நன்றிங்க சுந்தர்.
என்னைப்பற்றியும் கூறி இருப்பதற்கு மிக்க நன்றி.
இந்த வாரிசு விவகாரத்தை நீங்களுமா சொல்லனும் :)
//தொடர்ந்த பத்தி எழுத்துகளால் புனைவு எழுத்து பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது.//
ஜ்யோவ்ராம், பத்தி எழுத்து என்பது 'காலம் ரைட்டிங்' பற்றிதானே குறிப்பிடுகிறீர்கள். பதிவில் கட்டுரைகளாக நீட்டி முழக்க முடியுமா என்று ஒரு கேள்வியும் வருகிறதே.
ம்ம்ம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்தது தவிர இவர்கள் எழுத்துக்களஒ தொடர்ந்து வாசித்ததில்லை... நல்ல அறிமுகம் வாசித்துவிட்டு சொல்கிறேன்...
//குசும்பன் said...
பரிசல்! வாஸ்த்யாயனர் வாயால் பிரம்மரிஷி பட்டம் !
//
குசும்பா,
நல்லவேளை வாஸ்த்யாயனர் வாயால் காமக் கொடுறன் பட்டம் வாங்கியது போல என்று சொல்லவில்லை
:)
சுந்தர்,
வாஸ்த்யாயனர் வாயால் அனைவருக்கும் மன்மதன் பட்டம் கிடைத்த மாதிரி இருக்கு !
:)
சுந்தர்,
முதலில் நன்றி. இப்படி ஸ்பாட் லைட் போட்டுக் காட்டினால் பெருமிதமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்கு. தர்க்கம் - முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். கவிதையைக் கொல்லும் சமாசாரம் அது. முயல்கிறேன்.
பின்னூட்டங்களில் விளக்கம், நோட்ஸ், பொழிப்புரை எல்லாமே உண்மைதான். அவன நிறுத்தச் சொல்லுங்க. அதாங்க நம்ம வெண்பூ. jokes apart, point well taken. உங்கள் அவதானிப்பில் ஒப்புக்கொள்ள முடியாத அபாண்டமான பழி 'இவர் நிறைய வாசிக்கவும் செய்கிறார் எனப் புரிகிறது'.
சற்று ஆயாசமாகவிருந்த எனக்கு இப்படியொரு டானிக். கென் சொல்லித்தான் நீங்க இந்த பதிவு எழுதியது தெரிந்தது. கென் பேரையும் போட்டு மீதி நாலு பேருக்கும் பெருமை சேர்த்துவிட்டீர்கள். அனைவருமே என் நண்பர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
மிக்க நன்றி சுந்தர்.
அனுஜன்யா
உங்களைப் போன்ற ஒரு அனுபவமிக்கவரால் நான் கவனிக்கப் பட்டிருப்பதே மிக்க மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது.
இந்த ஊக்கம் இன்னும் என்னைச் செலுத்தும்!
நன்றி, ரமேஷ்.
நன்றி, குசும்பன் (அடங்க மாட்டீங்களா!).
நன்றி, நர்சிம்.
நன்றி, வால்பையன்.
நன்றி, ஸ்ரீதர் நாராயணன். எழுதுங்க :)
நன்றி, கென்.
நன்றி, பொய்யன். ஆமாம், அந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்யுது.
நன்றி, கிருத்திகா.
அட ஏற்கனவே மூணு பேர் நம்ம ரீடர்ல இருக்காங்க.. மத்த ரெண்டு பேரையும் சேத்துடலாம்..
அனுஜன்யா சொன்னது நிஜம்.. எனக்கு பிடித்தவர்கள் எழுதிய கவிதை இல்லை பதிவு புரியவில்லை என்றால் அவர்களை விளக்கம் கேட்டு ஒரு வழி பண்ணிவிடுவேன்.. இனிமேல் குறைத்துக் கொள்கிறேன்.
//எனக்கு பிடித்தவர்கள் எழுதிய கவிதை இல்லை பதிவு புரியவில்லை என்றால் அவர்களை விளக்கம் கேட்டு ஒரு வழி பண்ணிவிடுவேன்.. இனிமேல் குறைத்துக் கொள்கிறேன்.//
புரியல. எதுக்கு குறைச்சுக்குவேன்னு சொன்னீங்க-ன்னு புரியல.
கேளுங்க.. அப்பதான் எழுதறவங்களுக்கும், படிக்கற வேற வாசகர்களுக்கும் பல விஷயங்கள் புரிபடும் வெண்பூ!
யூ ஆர் எ க்ரேட் ஹ்யூமன்!
உங்களை யாராச்சும் கருத்து கேட்டாங்களா? இல்லை நீங்க பெரிய எழுத்தாளரோ? உங்கள் படிப்பு அறிவு எல்லாம் கேவலமான பத்திரிக்கைகள் எழுதுவதும் கேவலமான எழுத்துக்கள்.
தேவை இல்லாமல் அடுத்தவருக்கு ரேங்க் கொடுக்கும் வேலையை நிறுத்தி கொள்ளவும். வந்துட்டானுங்க
மதிப்பு மிக்க அறிமுகம். நண்பர்களுக்கு வாழ்த்துகள்.!
இந்த லிஸ்ட்டில் ரெண்டு பேர் எனது நெருங்கிய நண்பர்கள்..
மீதி ரெண்டுபேரையும் விரைவில் நண்பர்களாக்க திட்டம்..
//லஞ்ச் எடுத்துவரவில்லை, மதியம் உணவிற்கு பிரியாணி சாப்பிடலாமா, சாயங்காலம் டீ குடிக்கலாமா என மூன்று பதிவுகளாகப் போட்டு துன்புறுத்துகிறார்கள் சிலர்.//
போடுவது தவறில்லை. போட்டு விட்டு தமிழ்மணத்தில் இணைத்து கொடுமை படுத்துரானுகலே .... அதுதான் தாங்க முடியல...
what is paththi and what is punaivu?
en level ennaannu purinjirukkum ungalukku ;)
:)
நன்றி, கோவி கண்ணன்.
நன்றி, அனுஜன்யா.
நன்றி, பரிசல்காரன்.
நன்றி, வெண்பூ.
//குசும்பன் said...
பரிசல்! வாஸ்த்யாயனர் வாயால் பிரம்மரிஷி பட்டம் !//
:))
நன்றி, முதல் அனானி. விமர்சனம் எழுதுவதில் ஒன்றும் தவறிருப்பதாக நினைக்கவில்லை (விமர்சிக்கப்பட்டவர்களும்!). இது ரேங்க் கொடுக்கும் விஷயமில்லை.
நன்றி, தாமிரா.
நன்றி, அதிஷா.
நன்றி, இரண்டாவது அனானி.
நல்ல அறிமுகங்கள்
கென்னையுமா அவர் ரொம்ப பழைய ஆளுங்க...
நீஙக ராங்க கொடுங்க இல்லை ஏதாச்சும் குட்டி பாலிடிக்ஸ் செய்யுங்க இதை போல ஜால்ரா பாலிடிக்ஸ் செய்யவேண்டாம்.
எழுத்து என்பது தவம். எது தூண்மையான ரசிக்க கூடிய எழுத்து என்றால் நமது குழந்தைகளோடு சேர்ந்து நாமும் ரசிக்க கூடியவையாக இருக்க வேண்டும். உங்களின் காம கதைகளை உங்களின் குழந்தைகளுக்கு படிக்க முடியுமா? சரி உங்கள் குழந்தைகள் படித்தாலும் அடுத்தவர்கள் குழந்தைகள் படிக்க கூடிய எழுத்துகளா??
என்னை பொருத்தவரை நீங்கள் ஒரு ஆபாச மட்டும் இல்லை கேவலமான எழுத்தாளர் அவ்வளவு தான்
////ஸ்ரீதர் நாராயணன் (http://www.sridharblogs.com/)
இவர் சமீபமாக எழுதத் துவங்கியிருக்கிறார். அறிவியல்-புனைகதைகளை விறுவிறுபாக எழுதுகிறார். புனைவெழுத்தில் உத்திகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அதை அனாயசமாக கையாள்கிறார். இவரது பின்னூட்டங்களில் / பத்திகளில் வெளிப்படும் pro capitalism leanings எனக்கு உவப்பில்லாதது////
என்னமோ நீங்க ஒரு மாவோயிஸ்ட் மாதிரி பேசரீகளே நண்பா !!!
:))))
நடைமுறையில் நீங்க ஒரு பக்கா கேபிடலிஸ்டதான் என்று யமக்கு தெரியுமே..
நன்றி, சர்வேசன். புரிஞ்சுடுச்சு :)
நன்றி, தூயா.
நன்றி, இலவசக் கொத்தனார்.
நன்றி, தமிழன்.
மறுபடியும், முதல் அனானி.. நன்றி.
இதை ஜால்ரா என்றா சொல்கிறீர்கள்!! சரி.
மற்றபடி, உங்களுடைய
/என்னை பொருத்தவரை நீங்கள் ஒரு ஆபாச மட்டும் இல்லை கேவலமான எழுத்தாளர் அவ்வளவு தான்/
வரிகளை என் எழுத்துகளின்மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்கிறேன் :)
நன்றி, லக்கி லுக்.
நன்றி, அதியமான். உங்களுக்கு ஜோசியம் பிடிக்கும் எனத் தெரியும். தீர்ப்பு வழங்குவதும் பிடிக்குமோ :)
லக்கி லுக்கின் பெயரில் வந்திருக்கும் பின்னூட்டம் அவர் எழுதியதில்லை என அறிகிறேன். அப்பின்னூட்டத்தை அழிக்கிறேன். இம்மாதிரி அடுத்தவர் பெயர்களில் பின்னூட்டங்கள் இடவேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
///நன்றி, அதியமான். உங்களுக்கு ஜோசியம் பிடிக்கும் எனத் தெரியும். தீர்ப்பு வழங்குவதும் பிடிக்குமோ/////
பாம்பின் கால் பாம்பறியும் தோழரே !! :))
மேலும் நாம் இருவரும் ஏழைகளை 'சுரண்டி' வாழும் முதலாளி வர்கமாயிற்றே ?
:))
//மேலும் நாம் இருவரும் ஏழைகளை 'சுரண்டி' வாழும் முதலாளி வர்கமாயிற்றே ?
:))//
அப்படி போடு இவரும் மூகமூடி போட்டவர்தானா
////நன்றி, சர்வேசன். புரிஞ்சுடுச்சு ///
சீரியஸ்லி, பத்தின்னா என்னா புனைவுன்னு என்னா?
அதியமான், don't jump into conclusions!
சர்வேசன், பத்தி - column, புனைவு -fiction.
சரி நண்பரே, உங்களைப் பற்றி நான் அனுமானித்தை வாபஸ் பெறுகிறேன் ;
நீங்கள் ஒரு முதலாளித்துவாதி அல்ல. ஒரு பக்கா செம் புரட்சியாளர்தான். :))
அதியமான், ஒன்று பக்கா கேப்பிடலிஸ்ட், இல்லாவிட்டால், செம புரட்சியாளன். உங்க புரிதல் புல்லரிக்குதுங்கோ!
நான் பாவம்ல, என்ன விட்டுருங்களேன் :)
///அதியமான், ஒன்று பக்கா கேப்பிடலிஸ்ட், இல்லாவிட்டால், செம புரட்சியாளன். உங்க புரிதல் புல்லரிக்குதுங்கோ!
நான் பாவம்ல, என்ன விட்டுருங்களேன் :)
/////
சரி, அதையும் வாபஸ் பெறுகிறேன். நீங்க ஒரு நடுநிலைவாதி / மனிதாபிமானி. சரியா ?
ரெண்டும் இல்லாட்டி, நடுநிலைவாதியா..! யாராவது என்னைக் காப்பாத்துங்கப்பா :))
கே.ஆர்.அதியமான் அண்ணே!
I love America இல்லாங்காட்டி I love ஏதோ ஒரு எழவு! அப்படின்னு பனியன் போட்டுக்கலாம்... தப்பில்ல!
நீயும் ஏதோ ஒரு பனியன் போட்டிருக்கே! இல்லையின்னா நான் மாட்டிவிடுறேன் போட்டுக்க! என்று அடம்புடிக்கிறது ரொம்ப தப்பு!
:))))
பாரி அரசு,
மிக மிக எளிமை படுத்துகிறீர்கள். எப்படி சோவியத் ரஸ்ஸியா உண்மை கம்யூனிசம் அல்ல என்று தோழர்கள் சொல்கிறார்களோ அதே போல்தாம் அமெரிக்கா உண்மையான சுதந்திர பொருளாதார கேபிடலிசத்தின் சின்னம் அல்ல. நார்வே, ஜெர்மனி போன்ற நாடுகளை சொல்லாம்.
You are free to wear a T-Shirt with 'I HATE AMERICA' ; and attack US in the free blogger provided by google inc, an US MNC !! :)))
nd this is an old mail from me which clarifies what values i beilve in (in the name of liberalism) :
Dear Freind,
I could not make myself very clear to you while arguing about free
market capitalism. The UN decleration of fundamental rights covers all
aspects of life.
http://www.unhchr.ch/udhr/lang/eng.htm
and free enterprise is but a part of this declration : right to
property, right to do business and employ anybody thru volountary
free contracts ; and above all rule of the law and non-violation of
anyone's basic rights thru any means for any objectives.
All the rights of every human should not be violated by any other
individual or group or company or army or a nation or parliament or
statute or religious body, etc. that is the crux of it all. Violation of these
rights by any isim is wrong and
unjustifiable.
I consider these basic rights as the holiest of all holies in life.
Violation of property rights took place in Nandigram and elsewhere. Pls
compare how lands for mines and industires were / are acquired in the
West (say in Germany or Canda). but Gujarat SEZ land aquisition was
voluntary, free and fair.
http://www.expressindia.com/latest-news/SEZheavy-Gujarat-Thanks-to-the-states-landacquisition-policy-for-no-Nandigrams-here/273221/
Pls see my latest post :
http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html
anbudan
Athiyaman
உங்கள் பதிவு நன்று... உங்கள் பதிவை படித்து வரும் நண்பன் என்னும் முறையில் என்னுடைய கன்னி பதிவை படித்து கமெண்ட் அவும் ......
http://kadaikutti.blogspot.com
Post a Comment