வீடு

நாய்கள் விளையாடிக்
கொண்டிருந்தனவாம் இவ்வீட்டில்
மாடும் கன்றும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனவாம்
புறாக்கள் பறந்து கொண்டிருந்தனவாம்
அணில்கள் லாந்திக் கொண்டிருக்குமாம் எந்நேரமும்
உறவுகளும் நட்புகளும் பேசிச் சிரித்து
கூடி மகிழ்ந்திருந்தார்களாம் இவ்வீட்டில்
இப்போது கடன் காரர்களின் ஏசல்கள் கூட இல்லை
எல்லாரும் எல்லாமும் கைவிட
கழிகின்றன பொழுதுகள் சலனமற்று

8 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

சலனமற்ற வீடுகள் பெரும்பாலும் இருப்பின் சுமைகளை பற்றி இழுத்துச்செல்லும் வாகனங்கள் ஆனாலும் எப்போதும் சொல்வதற்கென அதற்குள்ளும் கதைகள் உண்டு.. மிக கனமான கவிதை... (வீடென்பது எப்போதும் எங்கேயும் இப்படித்தானோ தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா.

Anonymous said...

Good one.

Regards,

Ramesh

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரமேஷ்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிக வலியுள்ள கவிதை. உயிர்ப்புள்ள ஒரு இடம் வீடு. நீங்கள் சொல்லும் சலனமில்லாத பொழுதுகள் மரணத்தை ஒத்தவை. உயிர்ப்பில்லாத வீடுகளை சில பயணங்களில் கண்டதுண்டு. அந்த வீடுகளை பற்றியும், வாழ்தவர்களை பற்றியும் கூறப்படும் கதைகளில் மட்டுமே அவை வாழ்ந்துகொண்டு இருக்கின்றன.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முத்துகுமார்.

இராவணன் said...

நல்ல கவிதைங்க சுந்தர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, இலக்குவண்.