காமக் கதைகள் 45 (6)

'காரில் புணர்வது பற்றி என்ன நினைக்கிறாய் நீ' என்றான் அதீதன்

‘உன் அனுபவத்தைச் சொல்லு'

‘சிலர் காரிலேயே பாதிப் புணர்ச்சியை முடித்துவிடுகிறார்கள்'.

‘எங்கே எங்கே' என்றேன் ஆர்வத்துடன் நான்.

‘மெரினாவில் காந்தி சிலை தாண்டி லைட் ஹவுஸ் முன்பு வரிசையா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களின் முன் / பின் இருக்கைகளில் இதுதான் நடக்கிறது'

‘உன் கதையைச் சொல்லு' என்றேன்

‘சுமோவோ அல்லது அதுபோன்ற கார்களோ இருந்தால் பெசண்ட் நகர் அருகில் சாலையோரத்தில் காரின் பின் இருக்கைகளை உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் என்னிடம் இருப்பது அப்படிப்பட்ட கார் இல்லையே..' என வருத்தப்பட்டான் ஆதீதன்.

அவனது பதினெட்டாவது காதலியான கீதாவுடனான உறவு 4 மாதம் 5 நாட்களில் முறிந்து போனது குறித்து எழுதலாமா என யோசிக்கிறேன். வேண்டாம், அது அவ்வளவு சுவையாயிராது. மாறாக சமீபத்திய காதல் கதையைச் சொன்னான்.

அவன் தெருவில் இருக்கும் வனஜாவிற்கு திருமணமாகி குழந்தையுண்டு. வயது 27; அழகாக இருப்பாள். கணவன் சம்பாதிப்பது போதவில்லை போல. அதற்காக பிராத்தல் செய்யவும் விருப்பமில்லை. யாராவது ஒருவர் அவளை வைத்துக் கொள்வது போல் இருந்தால் பரவாயில்லை என நினைத்திருக்கிறாள்.

இது எதுவும் அறியாத அதீதன் அவளைக் காதலித்திருக்கிறான். காதலித்தால் மிகத் தீவிரமாகக் காதலிப்பான் - வனஜாவிற்காக உருகியிருக்கிறான். முதல் மாதம் அத்தை மகன் மருத்துவச் செலவுக்கென்று பணம் கேட்டிருக்கிறாள். அடுத்த மாதம் உறவினர் திருமணம்; நகை அடகில் இருக்கிறது, எடுக்கவென பணம் கொடுத்திருக்கிறான். அதற்கடுத்த மாதம் குழந்தையின் பள்ளிச் செலவிற்கென கேட்டு வாங்கியிருக்கிறாள்.

அதீதன் கணக்குப் போட்டுப் பார்த்தான். மாதத்திற்கு 14,400 ஆகியிருக்கிறது.

அடுத்த மாதம் அவள் பணம் கேட்டபோது தயங்கியபடி இவ்வளவுதான் முடியும் என குறைவான தொகையைச் சொன்னானாம். வனஜா, ஐயோ போதாதே என இழுத்திருக்கிறாள். அதீதன் இல்லை, இவ்வளவுதான் முடியுமென தீர்மானமாகச் சொல்ல ‘என்ன ஓக்கும் போது கணக்காடா போட்டே' என்றிருக்கிறாள். இவனும் விடாமல் ‘அதுக்குன்னு, நான் வர்ரதே மாசத்துக்கு ரெண்டு நாள்தான். உனக்கு தங்கத்துலயா செஞ்சிருக்கு, அவ்வளவு கொடுக்க' என சண்டை போட்டிருக்கிறான். வனஜா அதீதனை விரட்டி விட்டாள்.

வாய்விட்டுச் சிரித்தேன். தெய்வீகக் காதலில்லையா ?

‘கேளுடா இன்னும் கதை முடியல' என்றான்.

அடித்து விரட்டிய வனஜா இவனை மறுபடியும் தொடர்ந்து அலைபேசியில் அழைத்து வரச் சொல்லியிருக்கிறாள். அதீதனும் சென்றிருக்கிறான். பேரம் பேசி மடிந்து.... இப்போது மறுபடியும் உறவு மலர்ந்துவிட்டது.

‘அவ முதல்லயே சொல்லியிருக்கலாம் இவ்வளவு பணம் வேணும்னு...' என்றான் அதீதன்.

35 comments:

ரவி said...

எக்ஸலண்ட் !!!

ரவி said...

அருமையாக ரசிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது...

கதையா அல்லது நிகழ்வா என்று குழம்பும் அளவில் இருக்கு...

லக்கிலுக் said...

//உனக்கு தங்கத்துலயா செஞ்சிருக்கு, அவ்வளவு கொடுக்க' //

நியாயமான கேள்வி! :-)

தொடர் சூடு பிடிக்கிறது. அனலை அப்படியே மெயிண்டெயின் செய்யவும்!

Ken said...

அடித்து விரட்டிய வனஜா இவனை மறுபடியும் தொடர்ந்து அலைபேசியில் அழைத்து வரச் சொல்லியிருக்கிறாள். அதீதனும் சென்றிருக்கிறான். பேரம் பேசி மடிந்து.... இப்போது மறுபடியும் உறவு மலர்ந்துவிட்டது.

‘அவ முதல்லயே சொல்லியிருக்கலாம் இவ்வளவு பணம் வேணும்னு...' என்றான் அதீதன்

:))))))))))))

Athisha said...

கதை நல்லாருக்குங்க

அடுத்த கதை நாளைக்கே வருமா..

மங்களூர் சிவா said...

/
தொடர் சூடு பிடிக்கிறது. அனலை அப்படியே மெயிண்டெயின் செய்யவும்!
/
:))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆணாதிக்கக்கூறுகளுடன் இக்கதை இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள்.

அது சரியென்றே படுகிறது. மறுவாசிப்பில் இக்கதை எனக்குப் பிடிக்கவில்லை.

லக்கிலுக் said...

//மறுவாசிப்பில் இக்கதை எனக்குப் பிடிக்கவில்லை.//

அதெல்லாம் கிடையாது. எங்களுக்கு பிடிச்சிருக்கு. தொடர்ந்து அடிச்சியே ஆடவும்!

டொக்கு வைக்க பெருசுகள் நிறைய வலையுலகில் இருக்கின்றன. உங்களை போல சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசுபவர்கள் தான் தேவை!!! :-)

ரவி said...

///ஆணாதிக்கக்கூறுகளுடன் இக்கதை இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள்.///

யார் சொன்னது ? செல்லாது செல்லாது...ஒத்துக்க முடியாது...

எந்த கூறு இருந்தாலும் சரி..கதை சூப்பர் :)))

மறுவாசிப்பு ? Why மறுவாசிப்பு...? No வாசிப்பு...OK ?

கே.என்.சிவராமன் said...

சுந்தர், இந்தப் பிரதி சாதாரண மூன்றாம்தர ‘அனுபவக் கதைகள்' போல் இருக்கிறது. ஆனால், இந்தப் பின்னூட்டம்,

//ஆணாதிக்கக்கூறுகளுடன் இக்கதை இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள்.

அது சரியென்றே படுகிறது. மறுவாசிப்பில் இக்கதை எனக்குப் பிடிக்கவில்லை.//

வேறாக இருக்கிறது. போர்னோவுக்கும், போர்னோ இலக்கியத்துக்குமான வித்தியாசம் தங்களது முந்தைய கதைகளில் தெரிந்தது. ஆனால், இந்தப் பிரதி?

நட்பின் நெகிழ்ச்சியில் சொல்கிறேன்... வார்த்தைகள் உங்களை ஆட்சி செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்...

மொழி விளையாட்டில் காமத்தின் அதிகாரம் சிதைய வேண்டும்... அதிகாரத்தை நிலை நிறுத்தும்படி இருக்கக் கூடாது...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

இராம்/Raam said...

சூப்பரு.. :)

PPattian said...

//மொழி விளையாட்டில் காமத்தின் அதிகாரம் சிதைய வேண்டும்... அதிகாரத்தை நிலை நிறுத்தும்படி இருக்கக் கூடாது//

பைத்தியக்காரன், "அதிகாரம்" என்று நீங்கள் குறிப்பது எதனை? "Domination" என்ற அர்த்ததிலயா?

தெரியாம கேக்கறேன், சொல்லி கொடுக்கவும்..

வளர்மதி said...

சுந்தர்,

பைத்தியக்காரனின் பகிர்வை வழிமொழிகிறேன்.

பணிச்சுமை காரணமாக விரிவாகப் பகிர முடியவில்லை.

விடுபட்டதும் விரிவாகப் பகிர முயற்சிக்கிறேன்.

நன்றி.

வளர் ...

ஆடுமாடு said...

உங்கள் கதையை விட, பின்னூட்டங்கள் ரசிக்கும் படி இருக்கிறது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, பைத்தியக்காரன் & வளர்மதி.

இனி, இன்னும் கவனமாயிருக்க முயல்கிறேன்.

லக்கிலுக் said...

////நன்றி, பைத்தியக்காரன் & வளர்மதி.

இனி, இன்னும் கவனமாயிருக்க முயல்கிறேன்.////

பைத்தியக்காரனும், வளர்மதியும் ஆட்டைய கெடுத்துட்டாங்களே :-(

லக்கிலுக் said...

//நன்றி, பைத்தியக்காரன் & வளர்மதி.

இனி, இன்னும் கவனமாயிருக்க முயல்கிறேன்.//

பைத்தியக்காரனும், வளர்மதியும் சேர்ந்து ஆட்டையை கெடுத்துட்டாங்களே? :-((((

Sridhar Narayanan said...

//உங்கள் கதையை விட, பின்னூட்டங்கள் ரசிக்கும் படி இருக்கிறது//

நான் நினைததை ஆடுமாடு சொல்லிட்டார். பின்னூட்டங்கள் வழியாக வேறு கதையை படிக்க முடிகிறது :-))

சிபி அப்பா said...

கத்தி மேல் நடப்பது போன்றது இந்த முயற்ச்சி-இன்னும் கவனமாக இருங்கள். ஒரு தவறான சொல்லாடல் ஒட்டு மொத்த முயற்றியையும் சிதைத்துவிடலாம்.

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா சொன்னது...
\\\/
தொடர் சூடு பிடிக்கிறது. அனலை அப்படியே மெயிண்டெயின் செய்யவும்!
/
:))///

அனலா அட பாவிகளா...:)


அண்ணே பாத்துண்ணெ ரொம்ப பத்த வச்சிராதிங்க...

King... said...

//ஆணாதிக்கக்கூறுகளுடன் இக்கதை இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள்.

அது சரியென்றே படுகிறது. மறுவாசிப்பில் இக்கதை எனக்குப் பிடிக்கவில்லை.//


அப்படித்தான் தெரிகிறது...
ஆனால்ஆணாதிக்கம் என்கிற சொல்லில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது...


சூடு ஏறுகிறது என்பதற்காக வார்த்தைப்பிரயோகம் பொருத்தமற்றுப்போகக்கூடாது,
முன்னயவற்றில் இருந்து இது வேறுபடுவது போல இருந்தாலும்...
மற்றப்படி நானும் அண்ணன் பைத்தியக்காரன் கருத்தை வழிமொழிகிறேன். தொடாடந்து பேசுங்கள் சொல்ல வந்த விடயம் போதுமானதயாயிருக்கிறது.

உங்கள் பின்னூட்டம் பதிவுக்கு வேறுகோணத்தை கொடுத்திருக்கிறது....

கே.என்.சிவராமன் said...

நண்பர் புபட்டியானுக்கு,

அதிகாரம் என எதை சொல்கிறீர்கள் என கேட்டிருக்கிறீர்கள். நான் புரிந்து கொண்டதை இங்கு பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். இது முற்று முழுதான இறுதி முடிவல்ல. எனது புரிதலின் போதாமையும் கலந்தது.

நண்பா, அதிகாரம் என்பது ஒரு பொருளல்ல, அது யாருக்கும் உரியதும் அல்ல. அதிகாரம் என்பது சீருடையில், ஒரு சொல்லில், ஒரு பொருளில், ஏன் ஒரு பார்வையில்... என பல தளங்களில் விரிகிறது. போலீசாரின் சீருடையை பார்த்ததும் வரும் பயத்தை ஒரு உதாரணமாக கொண்டால், அதிகாரம் சீருடையில் இருப்பது புரியும். சாதாரண லத்தியை பார்த்ததும் ஏற்படும் பயம் கூட அதிகாரத்தின் விளைவை விளக்குவதுதான். ராமாயணத்தில் ராமரின் காலணிகளை சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்ததாக வருவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஆக, அதிகாரம் பல துறைகளில், நிறுவனங்களில், குழுக்களில், சார்பான உறவுகளில் இயங்கி கொண்டிருக்கிறது. ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனிக்கு வழிந்து கொண்டிருக்கிறது. அதாவது இடம் மாறிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு மன்னராட்சியில் அதிகாரம் மன்னர்களிடம் இருந்தது. அதுவே மன்னராட்சி முடிவுக்கு வந்ததும் அதிகாரம் வழிந்தோடி வேறொரு இடத்துக்கு சென்றது. நேபாளத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். சில மாதங்களுக்கு முன் நேபாளத்தை ஆண்ட மன்னனின் ஒவ்வொரு சொல்லும் அதிகாரமாக இருந்தது. இன்று?

ஆக ஒற்றைத்தன்மை கொண்டதாக ஆதியில் இருந்த அதிகாரம், இன்று பன்மை தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. அதுவும் முக்கியமாக தொழில்நுட்பம் வாய்ந்ததாக இருக்கிறது. சட்டமாக இயங்காமல் சகஜமாக இயங்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. தண்டனையை தீர்வாக்காமல் கட்டுப்பாட்டை முன்வைக்கிறது. சரி - தவறு, நல்லது - கெட்டது ஆகியவை இன்று நுட்பமான குறிகளின் வழியே உணர்த்தப்படுகிறது.

அதாவது உடம்பில் வசிப்பவர்கள் மனிதர்கள் என்று பார்க்காமல், உடல்களாக மனிதர்களை பார்ப்பதுதான் அதிகாரம். அரசாலும், அரசு சார்ந்த நிறுவனங்களாலும் உடல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுப்படுத்தல் சிறைச்சாலைகளில் மட்டுமே இல்லை. பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடம், குடும்பம், சாலை, திரையரங்கம், காவல்துறை, ராணுவம், செய்தித்தாள்கள், இதழ்கள்... என சகல இடங்களிலும் இருக்கிறது, இயங்கிவருகிறது.

அந்தவகையில்தான் காமமும், அதிகாரத்தின் பிடியில் இருக்கிறது என்கிறேன். பாலியல் சார்ந்த கட்டுப்பாடுகளை சமூகம் விதிக்கும்போதே வடிகால்களையும் அனுமதிக்கிறது. ரகசியமாக பேசவும், பார்க்கவும் அனுமதிக்கப்படும் எந்த பொருளும், விஷயமும் அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் தீவிரமாக இயங்குகின்றன என்பதுதானே பொருள்?

சரி, பாலியல் அறிவியல் என்பது என்ன? பாலியல் குறித்து வரையறை செய்வது, கலாசார அடிப்படையில் காமத்தை கட்டமைப்பது... இதுதானே? மரபார்ந்த அறிவியல் பாலியலை மறு உற்பத்திக்கான சாதனமாகவும், பாலியல் சார்ந்த நோய்களுக்கான மருத்துவமாகவும்தானே பார்க்கிறது? இனப்பெருக்கத்துக்காக மட்டுமா பாலியல்? இனப்பெருக்கத்தின் மூலம் இந்த சமூகம் தங்கு தடையின்றி இயங்குவதற்கான உடலை உற்பத்தி செய்கிறோம் என்பது தவிர இனப்பெருக்கத்தின் பங்கு என்ன? குழந்தைகளை பெற்றெடுக்கவா காமம்?

பாலியல் குறித்து சமூகம் கட்டமைத்திருக்கும் உண்மைக்கும், உடலியல் சார்ந்த பாலியல் உண்மைக்கும் வேறுபாடு இருக்கிறது. உடலுக்கான காமம் அனுமதிக்கப்படுவதில்லை. ‘சமூகம்' சொல்லும் காமத்தை மட்டுமே அனுபவிக்க நிர்பந்திக்கப்படுகிறோம்.

இந்த இடத்தில் பாலியல் கட்டமைக்கும் உடல் ஆதிபத்தியம் முக்கியமானது. காரணம், இந்த உடல் ஆதிபத்தியம்தான் இன்றைய நவீன அதிகாரத்தின் எல்லா வடிவங்களிலும் ஊடுருவி இருக்கிறது. அது பாலியல் சார்ந்து மட்டுமல்ல, உடலியலின் சகஜ நிலை என்ன என்பதையும் வரையறுக்கிறது. இந்த ஆதிபத்தியம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. தனிப்பட்ட குடும்ப அமைப்பினுள் நேரடியாக தலையிடாதபோதும், அந்த சமூக அமைப்பின் அதிகார வடிவத்துடன் ஊடாடும்போது குடும்பமும் அதிகாரத்தின் நுண் அலகாக மாறுகிறது.

சமூகம் அனுமதித்திருக்கும் போர்னோகிராபிக்கும், அதிலிருந்து விலகிய போர்னோ இலக்கியத்துக்குமான வித்தியாசத்தை உணர சொல்வது இதனால்தான்.

நண்பா, மீண்டும் சொல்கிறேன்... இது இறுதியான முடிவோ, விளக்கமோ இல்லை. எனது போதாமையும் இதில் கலந்திருக்கிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பொய்யன் said...

Dear jyovji

ean ennudaya andrada vazhkkai sambavankalai kathaya ezhuthukireerkal. case pottu viduven. jaakkiradhai.

chanam potta maattin alavukku enakku oru vagina vendum endru oru sultan kettaanam. atharkaka goldil antha alavu vagin seythu avanathu manthiripirathaanikal naadu pooravum thedi alaintharkalam. oru sultan varalatril padithirukkiren. 'thangathlaya senjirukku' padichatum athu gnabagam vanthuruchu :)

வசந்த் said...

இந்த கதை நல்லாத்தான் இருக்கு. வீண் குழப்பங்கள் தேவை இல்லை.

லக்கிலுக்கின் பின்னூட்டங்களும் கலக்கல்.

நன்றி
வசந்த்

பொய்யன் said...

anbulla paithiyam

pinnoottam mattum podavum. athileya pathivu poduvathai thavirkkavum

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

செந்தழல் ரவி, லக்கிலுக், கென், அதிஷா, மங்களூர் சிவா, இராம், புபட்டியன், ஆடுமாடு, ஸ்ரீதர் நாராயணன், சிபி அப்பா, தமிழன், கிங், பொய்யன், வசந்த்...அனைவர்க்கும் நன்றி.

லக்கிலுக் said...

அடுத்த கதையை உடனே பதியவும்!

லக்கிலுக் said...

தலைவர் சாரு நிவேதிதாவும் உங்கள் காமக்கதைகளை ஆவலோடு ரசிக்கிறார். இன்னும், இன்னும் சூடா பஜ்ஜியை போடுங்க மாஸ்டர்! :-)

PPattian said...

என் கேள்விக்காக நேரமெடுத்து நீண்ட பதிலளித்த பைத்தியக்காரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

இப்போது "அதிகாரம்" புரிவது போலும், புரியாதது போலும் உள்ளது. இன்னும் இரண்டு முறை வாசித்தால் பிடிபடும் என நம்புகிறேன் (கொஞ்சம் குழல் விளக்குதான்!!)

மிக்க நன்றி சுந்தர், நன்றி பைத்தியக்காரன்..

Anonymous said...

just saw your link at Charu Nivedita website.. thought of passing this information to you

http://www.charuonline.com/june08/netinterest2.html

Arun

கயல்விழி said...

வலைப்பூ இலக்கியத்தை மற்றொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்! தமிழ் பதிவாளர்களுக்கு படிக்க இருக்கும் தைரியம் எழுத இருப்பதில்லை, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் தான் காரணம். நீங்கள் செய்திருப்பதை எழுத்துப்புரட்சி எனவே கருதுகிறேன்.

பின்குறிப்பு : நீங்கள் எழுதிய கதையில் ஆணாதீக்கம் இருப்பதாக தெரியவில்லை. பணம் வாங்கியதால் இது பெண்ணாதீக்கமாக கூட இருக்கலாம்.

ஜமாலன் said...

ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் போன்ற எதிர்வுகளை விட்டுத் தள்ளுங்கள் இத ஒரு வார்த்தை விளையாட்டுத்தானே. பிம்பங்களை வாசிப்பவனுக்குள் இந்த மொழி இயங்கு வைக்கிறது என்பதே முக்கியம். இங்கும்கூட காமம் என்பது என்ன? உடலா? மொழியா? என்கிற சிக்கல் உள்ளது.

ஒருமுறை எனது நண்பர் ஒருவர் உங்கள் எழுத்து சுத்தமாகப் புரியவில்லை என்றார்? புரியும்படி எழுதிக் கொடுங்கள் என்றார். ஒரு காமக்கதை தான் எழுதி தந்தேன். அதைப்படித்த இது அருமையாக உள்ளது? இதைப் போன்று உங்கள் கட்டுரைகளையும் எளிமையாக எழுதுங்கள் என்றார்? என்னத்த சொல்ல?

தொடருங்கள்..

இதுகுறித்து முக்கியமான சில கருத்துக்களை நண்பர் பெருந்தேவி முன்வைத்துள்ளார் பாருங்கள்- http://innapira.blogspot.com/2008/06/blog-post_22.html

இலக்கியம், கலை என்று ஒன்றை பிரிப்பதிலோ அதற்க உயர்ந்த தகதிகள் தருவதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதெபோல் வார்த்தைகளில் நல்லது கெட்டது என்பதும். பிளாஸ்கில் வைத்து கெடாமல் எப்படி எழுத முடியும் வார்த்தைகளை. :)

வேண்டமானால் போலியானது உணர்வுபுர்வமானது (அதாவது நிஜமானது) என்று பிரிக்கலாமா? அப்படிப் பார்த்தால் நீங்கள் இந்த விளையாட்டை உணர்வபுர்வமாக தொடருங்கள்.

Perundevi said...

ரசித்துப்படித்தேன். கொஞ்சம் விரிவாக பின்னூட்டமிடவேண்டி இருந்ததால், இதைப்பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் வாசிக்கவும். நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, லக்கி லுக். சாருவின் வலைத்தளத்தை நானு படித்தேன்.

நன்றி, புபட்டியன்.

நன்றி, அருண்.

நன்றி, கயல்விழி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி, ஜமாலன்.

நன்றி, பெருந்தேவி. உங்களைச் சிறுபத்திரிகைகள் வாயிலாகத் தெரியும். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் பதிவையும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவையும் நேற்று வாசித்தேன். நன்றி.