இந்தக் கதையில் ஒரே கள்ள உறவாக இருக்கிறது; தொலைக்காட்சி தொடர்போல் இருக்கிறது; ஒழுங்கீனத்தின் எல்லையைத் தொடுகிறது எனப் பல விமர்சனங்கள். இதற்கு விளக்கமாக பதில் சொல்வதைவிட ஒரு பத்திரிகைச் செய்தியைத் தருகிறேன் :
20.8.2008 தேதியிட்ட குமுதம் பத்திரிகையில் வந்த செய்தியின் சாரம் :
பெரும்பாலான கொலைகளுக்குப் பின்னணி செக்ஸ் பிரச்சனைகள்தான் (இங்கே செக்ஸும் வயலன்ஸும் இணையும் புள்ளியைப் பற்றி எழுதும் ஆர்வத்தை அடக்கிக் கொள்கிறேன்).
சேலம் அருகில் நடந்தது : கவுரி என்ற ஒரு அம்மா கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். பேரன் பேத்தி எடுத்த வயதில் ஏகப்பட்ட இளவயசுப் பையன்களுடன் சகவாசம் வைத்திருந்ததால் அவரது கணவன் புஷ்பாங்கதன் குடும்ப கௌரவம் காக்க கொன்றிருக்கிறார்.
வேளச்சேரியில் நடந்தது : ‘ஒருமுறை நீங்கள் கொடுத்த முத்தத்தை என்னால் மறக்க முடியவில்லை' என பக்கத்துவீட்டு இளைஞனுக்கு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மனைவியொருத்தி கடிதம் எழுதியிருக்கிறாள். இதை அறிந்த கணவன் அவளுடன் சண்டை போட்டிருக்கிறான். அந்த இளைஞன் சமாதானப்படுத்த வந்திருக்கிறான். ஆத்திரத்தில் கணவன் அவனைக் கொன்றுவிட்டான்.
நீலகிரி மாவட்டத்தில் நடந்தது : காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவிக்கிடையில் ஆறு வருடம் கழித்து பிரச்சனை. மனைவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபனுடன் கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது. கணவன் கண்டிக்க, அவள் காதலனுடன் வாழச் சென்றுவிட்டாள். பிறகு அவனுடனும் ஒத்துவராமல் மறுபடியும் கணவனிடம் மன்னிப்பு கேட்டு வாழ வந்திருக்கிறாள். கொஞ்ச காலத்தில் மறுபடியும் தவறான சூழிநிலையில் மனைவியைப் பார்த்திருக்கிறான் கணவன். இதை ஒருநாள் கணவன் சொல்லிக்காட்ட ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் அவன் தலையில் அடித்துக் கொன்றிருக்கிறாள் மனைவி.
இதற்குத் தீர்வை தமிழ்நாடு மனநலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. ராமசுப்ரமணியத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர் கூட்டுக் குடும்பம் சிதைவைதை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லியிருக்கிறார். வயதானவர்கள் காவல் தெய்வங்கள்; அவர்கள் இல்லத்தில் இருந்தால் இதுபோன்ற தீய எண்ணங்களும் தீய செயல்களும் நடக்காது என்பது அவரது கருத்து.
ஆஹா, எப்படியெல்லாம் பிரச்சனைகளை எளிமையாக்குகிறார்கள் என வியந்தான் அதீதன்.
'தொலைக்காட்சி சீரியல் மாதிரி இருப்பதாகச் சொல்வார்கள், அதனால் எழுதவேண்டாமென்று சொன்னேன்; மீறி நீ இக்கதையை எழுதிவிட்டாய். இனி நான் உனக்குக் கதை சொல்ல மாட்டேன்' எனத் தீர்மானமாய்ச் சொன்னான் அதீதன்.
அவன் சொன்ன காரணம் பற்றிய சந்தேகங்கள் எனக்கிருக்கிறது. ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஒருவேளை அவன் மனம்மாறி மீதிக் கதைகளைச் சொன்னால், எழுதுகிறேன்.
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
14 comments:
அதீதன் சொலவில்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கு தினத்தந்தி. :P
என்ன அதீதன் இப்படி சொல்லிட்டாரு?? அவரு தீர்மானத்த கொஞ்சம் மாத்திக்க சொல்லுங்க...
முருகா...
நாடு ரொம்ப கெட்டு போச்சுடா...
அண்ணே அதுல வர்ற பேரு யாரு யாருக்கு என்ன உறவுன்னு தெளியறதுக்கே ஒரெ கன்ஃபூஷனா இருந்ததுதான் அதனால மெகாசீரியல் மாதிரி இருக்குனு சொல்லிருப்பாங்க போல!
:)
கணவனை விட்டு மனைவி ஓட்டம் என்று சொல்வதை விட,
இந்த ஆணை விட்டு அந்த ஆணுடன் ஓட்டம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
சமுதாய கட்டமைப்பு, ஆகாதா இரண்டு உடல்களை கணவன் ,மனைவி என்ற பெயரில் சேர்த்து வைத்தால் தேமே என்று வாழ இன்னும் நாம் ஆட்டு கூட்டம் அல்ல,
உறவுகளை ஒழித்து விடலாமா என்றாலும் உடனடி பதில் அது பெரிய குழப்பம் ஏற்படுத்தும் என்பதே, ஏனென்றால் மாற்று கருத்துள்ள மனிதர்கள் வாழும் உலகிது,
அடுத்தவன் பொண்டாட்டியை எட்டி பார்ப்பான், ஆனால் பேப்பரை பார்த்து
என்ன பொண்ணுங்கடா இவுங்க என்பான்,
சமுதாயத்துக்காக முகமூடி தரித்து வாழும் சமூகத்தில் எது உண்மை எது போலி என்று யார் கண்டுபிடிப்பது?,
ஆதியில் மனிதனுக்கு இந்த கட்டமைப்புகள் கிடையாது,
இனிவரும் காலமும் அதை மறந்து விடும்.
இடைப்பட்ட காலத்தில் நாம் அந்த கூண்டுக்குள் சிக்கிவிட்டோமோ என்ற மனநிலை ஏற்படுகிறது,
பரவாயில்லை இதுவும் ஒருவகை அனுபவம் தானே,
ஏனென்றால் "திருட்டு மாங்காய் தான் இனிக்கும்"
வால்பையன்
கதை (20-4)-ல் முடிஞ்சிடுமா??
வால் பையன் சொல்றதும் யோசிக்ககூடியதே.
அப்ப கதை முடிஞ்சிடுச்சா !!!???
மங்களூர் சிவா said...
\
அண்ணே அதுல வர்ற பேரு யாரு யாருக்கு என்ன உறவுன்னு தெளியறதுக்கே ஒரெ கன்ஃபூஷனா இருந்ததுதான் அதனால மெகாசீரியல் மாதிரி இருக்குனு சொல்லிருப்பாங்க போல!
:)
\
ரிப்பீட்டு..:)
//இந்தக் கதையில் ஒரே கள்ள உறவாக இருக்கிறது; தொலைக்காட்சி தொடர்போல் இருக்கிறது; ஒழுங்கீனத்தின் எல்லையைத் தொடுகிறது எனப் பல விமர்சனங்கள்.//
கதையில் எனக்கிருந்த குழப்பம் அதுவல்ல, ஆண் - பெண் இரண்டுக்கும் குழப்பம் வருகிற மாதிரி பெயர்கள் இருந்தது(உதாரணம்: தரணி). மேலும் யார் யாரோடு தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்தால் தான் புரிகிறது.
வால்பையன் கருத்துக்கு ஒரு ரிப்பீட்டு
நன்றி, சஞ்செய்.
நன்றி, விஜய் ஆனந்த்.
நன்றி, அதிஷா.
நன்றி, மங்களூர் சிவா.
நன்றி, வால்பையன்.
சரவண குமார், தமிழன் & கயல்விழி... நன்றி.
ஒரு அனானியின் பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது.
I don't think Adheedhan & Ram are two different persons.
This is one of those posts, which make you wonder if this guy is trying to imitate Charu in every way possible!
Perhaps it's just that Charu has influenced him a lil too much?
Post a Comment