மின் விசிறி

என் அறை மின்விசிறி அழகானது
என் விரல் முனை ஆணைக்குக் கட்டுப்பட்டு
சுற்றிக் கொண்டிருக்கிறது
சுழலும் வேகத்தில்
இறக்கைகளின் எண்ணிக்கை
மூன்றல்ல ஒன்றுதானென்ற
பிரமை தருகிறது
பார்த்துக் கொண்டிருந்த நான்
மின்விசிறியானேன்
காற்றை அனுப்பிக் கொடுத்தேன்
படுத்திருந்த மின்விசிறிக்கு
அதன் குறட்டை ஒலி எரிச்சலூட்ட
சுழன்று சுழன்று சுழன்று
வெளியே வேகமாய் விசிறியடிக்கப்பட்டேன்
மின்விசிறி அதன் இடத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறது

(கவிதா சரண் செப்டம்பர் 1996ல் வெளியானது)

4 comments:

ஜமாலன் said...

//பார்த்துக் கொண்டிருந்த நான்
மின்விசிறியானேன்//

உருமாற்றமா? சுயம் நசிப்பை எளிமையாகச் சொல்கிறது கவிதை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

G.Muthukumar said...

எண்ணத்தின் ஆழங்களில் அமிழ்தல்.. அல்லது எண்ணங்களை தொடர்ந்த மாயைகளில் கலத்தல் என்பதாக இந்த கவிதையை கொள்கிறேன்.. மிக நல்ல கருத்தாக்கம்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முத்துக்குமார்.