நண்பனும் தனிமையும்

எப்போதாவது வரும் நண்பன்
இப்போதும் வந்து விட்டான்
திரைச்சீலை ஆடுவதிலிருந்து
காற்றை உணர முடிகிறது என்றான்
ஒளிக் கற்றைகள் விழமுடியாத
பிரதேசத்தில் வசிக்கிறாய்
வெளிச்சத்தின் முக்கியத்துவத்தை
உணரவில்லை நீ
எனக் குற்றம் சாட்டினான்
கவிதை எழுத முயலாதே
காற்றைப் படி என்று
அவன் கிழித்தெறிந்த தாள்கள்
காற்றில் அசைந்தசைந்து
வெளியில் கலக்கின்றன
நண்பர்களில்லாத நான்
கவிதைகளோடு வசித்துக் கொண்டிருக்கிறேன்

(கவிதா சரன் செப்டம்பர் 1996ல் வெளியானது)

4 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

சொல்லவே இல்ல.நீங்களும் ப்ளாக் ஜோதியிலே ஐக்கியமாயிட்டீங்கபோல.வாழ்த்துகள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சிவா. நீங்கள் தானே என்னுடன் ஒருமுறை தொலைபேசியில் பேசினீர்கள்... நினைவிருக்கிறது...

ஜீவி said...

புரியும் படியான புதுக்கவிதை என்று நினைக்கையிலேயே அதன் சிறப்பு தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜீவி.

எல்லாக் கவிதைகளும் எல்லாருக்கும் புரிந்து விடாது என்பதையும் நினைவில் கொள்வோம்...