காமக் கதைகள் 45 (13)

ரேவதி என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தாள் - ஒன்பதாவது கதையில் வந்திருந்த ரேவதி. அதீதனின் சொல்லியுள்ளது ஒருபக்கச் சார்ப்பானது, அவனுக்குச் சாதகமானவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறான் என்றாள். அவள் பக்கத்தையும் கேட்டு எழுதச் சொன்னாள்.

கேட்டுக் கொண்டேன்.

ரேவதியும் நந்தினியும் தோழிகள்; ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். நந்தினியை அறிமுகப் படுத்திவைத்திருக்கிறாள். திடீரென ஒரு நாள் நந்தினி அதீதனைக் காதலிப்பதாய்ச் சொல்லியிருக்கிறாள். நந்தினியும் அதீதனும் பேசிக் கொள்வது, வெளியில் சுற்றுவது என அனைத்தையும் சொல்லியிருக்கிறாள்.

நந்தினியைக் காதலிப்பதில்லை பிரச்சனை. ஆனால் அவன் என்னிடம் சொல்லியே அதே ஜோக்குகளையும் வசனங்களையும் அவளிடமும் சொல்லியுள்ளான்... அவன் தன்னுடைய காதலி விரிவாக்கத்திற்கு என்னை உபயோகித்துக் கொண்டுள்ளான்.

கடனட்டை வாங்காதது பெரிய விஷயமே அல்ல, இதுவரை பலர் கடனட்டை வாங்கியிருக்கிறார்கள் என் மூலம், அவர்களுடன் நான் படுத்துக் கொண்டா இருக்கிறேன் எனக் கோபப் பட்டாள். அடிப்படையில் அதீதன் ஒரு பொய்யன், ஏமாற்றுக்காரன் என்பதாலேயே அவனுடன் பழகியதை நிறுத்தினேன் என்றாள் ரேவதி.

ரேவதியுடன் பேசியதும் அவள் சொல்வதுதான் உண்மையாயிருக்க முடியுமென்று தோன்றுகிறது. அதனால் நீங்கள் ரேவதி சொல்லியதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

அதீதா, கதையில் வரும் பாத்திரங்கள் தங்களை அடையாளம் கண்டுகொண்டு என்னுடன் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது என்றேன். அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு சொன்னான். கதையில் வரும் ஆண் பாத்திரங்களின் பெயர்கள் கடைசி இரண்டு எழுத்துகள் மட்டுமே எழுதப் படவேண்டும். பெண் பாத்திரங்களின் பெயர்கள் முதல் இரண்டு எழுத்து மட்டுமே. இதில் இன்னொரு உபவிதி உண்டு, என்னைவிடச் சிறு வயதுப் பெண்களின் முதல் எழுத்தை விட்டுவிட்டு அடுத்த இரண்டு எழுத்துகளே உபயோகிக்க வேண்டும்.

இப்போது உதா :

அங்கிதா - என்னைவிடச் சிறியவள். அதனால் ங்கி
நிருபமா - என்னைவிடப் பெரியவள். அதனால் நிரு
அதீதன் - தன்

வயதை வைத்து முடிவுசெய்வதைவிட, நீ அவர்களுடன் உறவு வைத்துள்ளதை வைத்து எழுத்துகளை மாற்றி எழுதலாமே. அதைவிட ஒவ்வொரு நிஜப்பெயருக்குப் பதில் ஒரு புனைவான பெயரை வைத்துக் கொள்ளலாம், அல்லது ஒற்றை எழுத்துகளாகவே பெயர்களை வைக்கலாம்.. இப்படி பல சாத்தியக்கூறுகள் இருக்க, நீ ஏன் அவற்றைச் சுருக்குகிறாய் என்றேன்.

'நினைவில் கொள், விளையாட்டு என்றால் விதிகளற்று இருக்கவே இயலாது' என்றான் அதீதன். 'நமக்கான விதிகளை நாமே இயற்றிக் கொள்வோம்.'

எழுத்தாளன் மண்டியிட கதைசொல்லி அவ்விடத்தைப் பிடித்துக் கொண்டான். இப்போது தன் முனைப்போடு கதைசொல்லத் துவங்கினான் தன்.

21 comments:

ஆடுமாடு said...

ம்ம்ம்... நல்லாயிருக்கு. அதீதனை மீட் பண்ண முடியுமா? சில கேள்விகள் கேட்கணும்.

குசும்பன் said...

சமீப காலமாக உங்கள் வலை பகுதியில் புரியும் படியும், ஆர்வத்தை “தூண்டும்” படியும் இருக்கும் ஒரே பகுதி இந்த **க் கதைகள் 45 தான்:)))

எங்கே தொடமாட்டீங்களோன்னு எல்லோரும் பயந்து இருந்த நேரத்தில் கரெட்டா எழுதிட்டீங்க.

குசும்பன் said...

//அங்கிதா - என்னைவிடச் சிறியவள். அதனால் ங்கி
நிருபமா - என்னைவிடப் பெரியவள். அதனால் நிரு
அதீதன் - தன்//

பெயர்களை வேண்டும் என்றால் சுருக்கி கொள்ளுங்க, வேறு எந்த வார்த்தையையும் சுருக்கிடாதீங்க!!!

இராம்/Raam said...

//எழுத்தாளன் மண்டியிட கதைசொல்லி அவ்விடத்தைப் பிடித்துக் கொண்டான். இப்போது தன் முனைப்போடு கதைசொல்லத் துவங்கினான் தன்.//

ரைட்டு..... :))

Athisha said...

நல்லாருக்குங்க ...

லக்கிலுக் said...

//'நினைவில் கொள், விளையாட்டு என்றால் விதிகளற்று இருக்கவே இயலாது' என்றான் அதீதன். 'நமக்கான விதிகளை நாமே இயற்றிக் கொள்வோம்.'//

அருமை. காலத்துக்கேற்ற கலக்கலான பஞ்ச் டயலாக்!!!


//வேறு எந்த வார்த்தையையும் சுருக்கிடாதீங்க!!!//

”வேறு எதையும் சுருக்கிடாதீங்க!” என்று இதை வாசிக்க வேண்டும்.

கே.என்.சிவராமன் said...

//எழுத்தாளன் மண்டியிட கதைசொல்லி அவ்விடத்தைப் பிடித்துக் கொண்டான். இப்போது தன் முனைப்போடு கதைசொல்லத் துவங்கினான் தன்.//

:)

தொடருங்கள் சுந்தர்..

anujanya said...

இக்கதைகளை முதலில் அணுகத் தயங்கிய 'விளக்கெண்ணைகளில்' நானும் அடக்கம். நல்லா வருது சுந்தர். தொடருங்கள்.

அனுஜன்யா

manikandan said...

அருமையாக எழுதுகிறீர்கள். எனது வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

கதையின் முக்கியமான திருப்பத்தை அடைந்ததை போல் தோன்றுகிறது.
இனியாவது ஜெட் வேகத்தில் கதை பயணிக்குமா

வால்பையன்

King... said...

///'நினைவில் கொள், விளையாட்டு என்றால் விதிகளற்று இருக்கவே இயலாது' என்றான் அதீதன். 'நமக்கான விதிகளை நாமே இயற்றிக் கொள்வோம்.'///


சரியான டைமிங் சுந்தர் அண்ணன்!

மொழி விளையாடட்டும்...

King... said...

///எழுத்தாளன் மண்டியிட கதைசொல்லி அவ்விடத்தைப் பிடித்துக் கொண்டான். இப்போது தன் முனைப்போடு கதைசொல்லத் துவங்கினான் தன்.///

இது முடிவு...

எழுதுங்க அண்ணன்...

Ramesh said...

A writer is one who does not fear others.

The concept may not be digestible by certain factors/characters. But you are writing good.

My mother tongue is not Tamil, but I have learnt and improved of the last 18 years, with my association of Chennai (well it started with the four letter word equivalent).

Do you know one thing? Anyone learns a new language fast, only with the sizzling things associated with it.

Regards
Ramesh

Anonymous said...

அஷ்டாங்க யோகம் படித்து மனத்தை திடம் செய்யவும்!

அருமையாக எழுதுகிறீர்கள்.

தொடருங்கள் சிலர் மலம் என்றாலும்.

எனது வாழ்த்துக்கள்.

-குகன்

வெண்பூ said...

பதிமூன்றாவது கதைக்கு வருகை பதிவிடுகிறேன்... "உள்ளேன் ஐயா"

Anonymous said...

/விளையாட்டு என்றால் விதிகளற்று இருக்கவே இயலாது/

நன்று! விதிகள் இல்லாமல் விளையாட்டு (வேடிக்கை என்கிற பொருளில்) இருக்கவே முடியாதுதான். விதிகள்தான் தப்பாட்டம் ஆடவைக்கிறது, அப்புறம் மூன்றாம் நடுவர் எல்லாம்... விளையாட்டு வேடிக்கைதான்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆடுமாடு, குசும்பன், இராம், அதிஷா, லக்கி லுக், பைத்தியக்காரன், அனுஜன்யா, அவனும் அவளும், வால்பையன், கிங், ரமேஷ், குகன், வெண்பூ, சுந்தரேஸ்வரன்... நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

சுந்தர் நடையும் கதைத்தொகுப்பும் பிரமாதம். தொடருங்கள்.
"எழுத்தாளன் மண்டியிட கதைசொல்லி அவ்விடத்தைப் பிடித்துக் கொண்டான" படிக்கும்போதே விஷுவலா இருக்கு... வாழ்த்துக்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா.

வசந்த் said...

இந்த பதிவும் சூப்பர்.

//'நினைவில் கொள், விளையாட்டு என்றால் விதிகளற்று இருக்கவே இயலாது' என்றான் அதீதன். 'நமக்கான விதிகளை நாமே இயற்றிக் கொள்வோம்.'

எழுத்தாளன் மண்டியிட கதைசொல்லி அவ்விடத்தைப் பிடித்துக் கொண்டான். இப்போது தன் முனைப்போடு கதைசொல்லத் துவங்கினான் தன்.

//

நன்றாக உள்ளது.


வசந்த்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வசந்த்.