என்னுடைய பழைய கட்டுரையில் சொல்லியதுபோல் ஞாநி மேல் எனக்கு மதிப்புண்டு. வெகுஜன தளத்தில் அவருடைய சில மாற்றுச் செயல்பாடுகள் பாராட்டப்பட வேண்டியவை (இதே அடிப்படையில் பாமரனின் செயல்பாடுகளும்). என்னுடைய இவ்வெண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது அவரது இவ்வார குமுதம் பத்திரிகையில் வெளியான 'மதிகெட்ட மாமன்னன் மன்மோகனன்' என்ற கட்டுரை.
இக்கட்டுரையில் அவர் இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்திருக்கிறார் என்பதற்காக அல்ல என் மகிழ்ச்சி; ஒட்டு மொத்தமாக அணுசக்தி எனச் சொல்லப்படும் பேரழிவுச் சாத்தானையும் ஒப்புக் கொள்ளாததால்தான்.
நான் அறிவியல் மாணவனோ அல்லது ஆராய்ச்சியாளனோ அல்ல. ஆனால் என்னாலேயே அதன் படுபாதகமான பின்விளைவுகளை உணர முடிகிறதெனில், நிச்சயம் விஞ்ஞானிகள் இதைப் பற்றி இன்னமும் தெளிவாக விளக்க முடியும். இது அவர்கள் முன்னிருக்கும் வரலாற்றுக் கடமையும்கூட!
டி.அருள் எழிலன் ஒரு குறிப்பிடத்தகுந்த கட்டுரையொன்றை எழுதியிருந்தார் இந்த 123 ஒப்பந்த்தில் உள்ள பாதகமான அம்சங்களைப் பற்றி (பின்ன அமெரிக்காவுடனான ஒப்பந்தம் வேறு எப்படி இருக்கும்!). அதில் அணுசக்தி தேவையா என்ற அடிப்படையான கேள்வியை எழுப்பியாக வேண்டும் என பின்னூட்டமிட்டிருந்தேன்.
இனி, ஞாநியின் கட்டுரையிலிருந்து :
/நான் அணுகுண்டை மட்டுமல்ல, அணுசக்தியையும் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பமும் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழிநுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக்குப் பின்பற்றும் வழிகள் மிகப் பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன./
நன்றி, ஞாநி.
நான் தொடர்ந்து கற்றுவரும் நாகார்ஜூனனும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். http://nagarjunan.blogspot.com என்ற முகவரியில் அணுகுண்டு / அணுசக்தி போன்ற விஷயங்களில் அவரது கருத்துகளை அறியலாம்.
இது போன்ற ஒப்பந்தங்கள் அல்லது இப்படியான ஒரு முக்கியமான அரசியல் - சமூக நிகழ்வின்போது அதன் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பலர் சாதகாமகவோ அல்லது பாதகமாகவோ விமர்சிக்கலாம். ஆனால், அடிப்படையான கேள்விகளை எழுப்புபவர்கள் முக்கியமானவர்கள். அவ்விதத்தில் எனக்கு ஞாநி முக்கியமானவராகத் தெரிகிறார்.
இப்படித் தொடர்ந்து ஞாநிக்கு ஓ போட முடிந்தால் மிகவும் மகிழ்வேன் :)
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
30 comments:
nandri nanba. koodankulam aalaikku ethirppaaga 90galil nadathiya iyakkathai naan naagarjunan, ravi srinivas, panneerselvan aagiyordhaan serndhu nadathinom endra thagaval ungkalukkuththerindhirukkalaam. kalpakkam aalai aabathu patri naan 1986lirundhu ezhuthi varukiren enpathu innoru thagaval.
enakku innum blog commentai eppadi thamizhil ezhuduvadhu enpathu theriyaadhadhaal indha abathamaana vazhiyil ezudhiyirukkiren. mannikkavum. anbudan gnani
அணுக்கழிவை எப்படி 1000வருடங்களுக்கு பாதுகாப்பது என கண்டுபிடிக்கவில்லை!
சரி, அதை நாளை இல்லை 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று ஞாநிக்கு எப்படி உறுதியாகத்தெரிகிறது.
200 ஆண்டுகளுக்கு முன் அணுசக்தி என்று ஒன்று உண்டு என்பதே தெரியாதே. விஞ்ஞானம் வளராது, அதை டிஸ்போஸ் பண்ண முடியாது என்று எப்படி உங்களுக்கு தெரியும்??
----------
வெள்ளைக்காரர்கள் நம்மை எப்படி ஆண்டார்கள்?
துப்பாக்கி அவர்களிடம் இருந்தது. நம்மிடம் வெறும் தத்துவமும் வேதாந்தமும் இருந்தன.
துப்பாக்கி உயிரைப்பறிக்கும்? நாம் எந்த உயிரையும் துண்பப்பட வைக்கக்கூடாது என்ற நல்லெண்ணம் எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கிறது.
ஆனால் என்ன ஆச்சு?
அதேபோல் வேதாந்தம் பேசுவது நல்லாத்தான் இருக்கிறது.
வீட்டில் தீயெரியும்போதுகூட இரக்கமில்லாமல் லூட் செய்யும் மனிதர்கள் என்ற கேவலமான உயிரினங்கள் வாழும் உலகம் இது.
வெள்ளைக்காரன் துப்பாக்கி வைத்து தாக்குவதை நம்மால் டிஃபெண்ட் பண்ண முடியவில்லை. அனுசக்தியையும் புறக்கணித்தால், அன்று துப்பாக்கி இல்லாமல் நாம் எதை எதை இழந்தோமோ, அதே போல் இன்று அனுசக்தி பவர் இல்லாமல் இழக்க மாட்டோமா?
சாதரண ஆர்கானிக் சால்வெண்ட்சை யே இன்னும் ஒழுங்காக நம் நாட்டில் டிஸ்போஸ் பண்ணவில்லை, ஒழுங்கான வழியும் அமல்ப்படுத்தவில்லை, அதனால், நம்முடைய மெடிசின்ஸ் தயார்பண்ணுவதை நிறுத்திவிட்டு, எல்லோரும் வியாதியை எல்லாம் ஆண்டவன் செய்த கோலம் என்று ஏற்றுக்கொண்டு சாவோமா?
இவ்விசயத்தில் பலரது கருத்தும் இதுதான்
நானும் ...அதனால் இந்த வாரம் மட்டும் ஞானிக்கு ஓஓஓஓஓஓஓ
//மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழிநுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.//
ஆமா! ஆமா! அணுசக்திக்கு எதிர்ப்பு!
//சரி, அதை நாளை இல்லை 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று ஞாநிக்கு எப்படி உறுதியாகத்தெரிகிறது.
//
ஆமா! ஆமா! அணுசக்திக்கு ஆதரவு!
அன்புடன்...
சரவணன்.
செர்னோபில் விபத்தை தவிர்த்து இதுவரை பெரிய அளவில் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. செர்னோபிலும் கம்யூனிச சர்வாதிகாரத்தின் பொறுப்பற்ற மேலான்மையின் விளைவுதான் என்று நிருபிக்கப்ட்டிறுக்கிறது.
ஃபரான்ஸ் பெருமளவில் அணு மின் உலைகளை கொண்டது.
இந்தியாவில் ஜனத்தொகை பெருகும் வேகத்திற்க்கு இணையாக மின்சார உற்பத்தி செய்ய முடியாமல் கடும் பற்றாக்குறை இப்போதே. எதிர்காலத்தில் இன்னும் மிக மோசமாகி, இனையத்தில் எழுத மினசாரம் இல்லாமல், மெழுகுவர்தி வெளிச்சத்திக் தினமும் பல் மணி நேரம் கழிக்கும் நிலை வரும் போது இந்த விவாத்தை தொடரலாம்.. :)))
பாதுகாப்பு, கழிவு பொருட்கள் அம்சங்களை விட பொருளாதார ரீதியான் சில் கேள்விகள் முக்கியாமக தெரிகின்றன.
de-commisioning price of reactors after their useful life of some 30 years are over are not factored in calculating the cost of producion, etc..
//நான் அறிவியல் மாணவனோ அல்லது ஆராய்ச்சியாளனோ அல்ல.//
அணுசக்தி துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற ஜெயபாரதன் தமிழினி வெளியீடாக அணுசக்தி என்ற நடுநிலையான புத்தகம் எழுதியிருக்கிறார். விரும்பினால் நீங்களும் படித்து மேலும் தெளிவு பெறலாம்.
யாராவது ஞானியின் கணினியில் இ-கலப்பையை இண்ஸ்டால் செய்யுங்களேன் மக்கா !!!!!!!!!
நானும் ஞாநியின் வாசகன். பல விசயங்களில் அவருடைய கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் சமீப காலங்களில் வெறும் குறைகளை மட்டுமே சொல்லி வருகிறார் (முக்கியமாக குமுதத்தில் எழுத ஆரம்பித்த பிறகு) இது யோசிக்க தூண்டுவதை விட எரிச்சலையே தூண்டுகிறது.
உதாரணம் சென்ற வாரம் வந்த அப்துல் கலாம் பற்றியது. அதைப்படித்தவுடன் எனக்கு ஞாநி மேல் எரிச்சல் வந்ததே தவிர யோசிக்க தூண்டவில்லை. ஞாநி ஒரு தலைசிறந்த பத்திரிக்கையாளர் ஆனால் கலாம் நாட்டுக்காக செய்ததை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட மாமனிதரை கிண்டல் செய்ய தேவையில்லை. Neutrino திட்டத்தை மட்டும் பற்றி பேசியிருக்கலாம்.
ரிப்பீட்டு...
ஒன்று நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் சந்திக்கும் தொழில்முறை பொட்டி 100 மீட்டர் ஓட்டத்தை போன்றது யோசிக்க இங்கே நேரம் இல்லை.
How many people know that few American companies have already started moving jobs out of India to countries like Philipines ??
We are losing our Competitive advantage faster.
அணுசக்தி என்பது Disaster உருவாக்கும் Risk இருந்தாலும் மின்சார உற்பத்திக்கு உகந்ததே. Let us be realistic.
Solar - Chips உற்பத்தி செய்ய தேவைபடும் மின்சாரத்தை விட அதனுடைய வாழ்நாளில் பெரிதாக Power Generation செய்வதில்லை.
Narmada Sardhar Sarovar - குஜராத்தில் படும்பாடு அறிந்ததே.
எந்த திட்டம் வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்க ஒரு கூட்டம் தயாராக உள்ளது. (ஞாநி இதில் Latest member).
எப்படி முன்னேற்றம் வரும் ??
I think we need to have alternate options available always. 123 Agreement is one among them to have Nuclear power as an Option. In future if we could develop other power sources, we can anytime shut-down these plants. Yes, there may be radio active wastes which we need to dispose. But nothing comes without a risk.
வருணின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். அணுசக்தியை ஏன் பேரழிவு சாத்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்? அனைத்து மருத்துவ/விஞ்ஞான கண்டுபிடிப்புகளையுமே ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். ஒரு கண்டுபிடிப்பின் அழிவை மட்டுமே கருத்தில் கொண்டு அதை வேண்டாம் என்பது தவறு. இதில் ஞானியை எதிர்க்கிறேன்.
வழிப்போக்கன்,
அப்துல் கலாமும் மனிதர் தான். அவரை மட்டும் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது? ஹீரோ வொர்ஷிப்பை நமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகிறேன். நாகரீகமாக இருக்கும் வரை, விமர்சனம் செய்வதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. இதில் ஞானியை ஆதரிக்கிறேன்.
CO2 emission cut pannanumna, 123 venum.
To safegaurd, plutonium, Anil Kakodkar, has given enough comforts from the days of Vajpayee.
A gun owner gets shot once in 10 times, while cleaning. So ban gun?
What else?
Gnani, Pamaran ellam chilling factor of Fourth estate padi ezuthurango.
தோணி விளம்பரம் ஞாபகம் வருதே! மயண்ட் இட்!
-Ram
உக்காந்து யோசிப்பாங்களோ!
Gnani thinks that he is too much of an intelligent cadre!
The day I read about him leaving his wife, says it all!
You blog is good, and comments are fun!
Regards
வருண் கயல்விழி ஒ!
I agree with Varun and Kayal..
அடுப்ப பத்த வைக்கும் பொது கைய சுட்டாலும் சுட்டுடும்னு சமையல் பண்ணாம இருக்க முடியுமா...
திரு ஞானி அவர்களுக்கு, கீழே உள்ள வலைதளத்தை உபயோக படுத்தி தமிழில் பிண்ணூட்டம் போடலாம்..
http://www.google.com/transliterate/indic/Tamil
From Gnani's article:
அடுத்த 20 வருடங்களில் அணு மின்சார அளவை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். இப்போது சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான். (இவை எல்லாமே அரசின் புள்ளிவிவரங்கள்தான்.)
If we get more Power with less money, why should we go for risky nuclear technology?
//இப்போது சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. //
இது Power Plant Investment கிடையாது. R&D மற்றும் Demonstation Incentives.
IREDA acts as a nodal agency to promote renewable enerygy by facilitating Bank Loans. அணுசக்தி இன்னும் 100% அரசாங்க நிதியில் நடக்கிறது.
நன்றி:
http://indiabudget.nic.in/ub2008-09/eb/sbe67.pdf
//இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான். (இவை எல்லாமே அரசின் புள்ளிவிவரங்கள்தான்.)//
மொத்த உற்பத்தி பற்றி சொல்லும்போது இதுவரை செய்த முதலீட்டை வைத்தே ஒப்பிட முடியும். இந்த வருட ஒதுக்கீட்டை வைத்து 3 சதவிகிதம் 5 சதவிகிதம் என்று ஒப்பீடு செய்வது எப்படி சரியாகும்??
//வழிப்போக்கன்,
ஹீரோ வொர்ஷிப்பை நமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகிறேன். //
கயல்,
நான் சொன்னதுல எங்கங்க ஹீரோ வொர்ஷிப் வந்தது??.
கலாம் மாமனிதர்னு சொன்னதா ??
ஞாநி செய்தது கலாமின் கனவை பற்றிய கிண்டல்.ஆக்கபூர்வமான விமர்சனமில்லை என்பது என் கருத்து.
இந்த திட்டதிற்கு தற்போது எந்த வகையிலும் தொடர்பில்லாத கலாமை ஏன் இழுக்கணும்??
என்பதே என் ஆதங்கம்.
நாளை ஆராய்ச்சி என்ற பெயரால் நடக்கும் அனைத்து கொடுமைக்கும் கலாம் எப்படி பொறுப்பாக முடியும். ???
நீங்க ஏன் இந்த மிகப்பெரிய பிரச்சினை பற்றி ஒரு பதிவு போட கூடாது ?? atleast எனக்காவது அறிவு வளருமே ??
(இருந்தாத்தானே வளரும்னு கேட்க கூடாது)
ஞானியின் வாதங்களைக் கேட்கும் பொது நியாயம் இருப்பதை போலவே தோன்றும். (நான் இந்த ஒரு கட்டுரையை மட்டுமே குறிப்பிடவில்லை). மயக்கும் வாதம் அவருடையது. ஆனால் அது தான் நினைப்பதை நிலைநிறுத்த விரும்பும், வெற்றியடைய விரும்பும் ஒரு சிறந்த வழக்கறிஞரின் வாதம் போன்றது.
வழிப்போக்கன்,
நீங்கள் ஹீரோ வொர்ஷிப் பண்ணுகிறீர்கள் என்று சொல்லவில்லை. ஏதோ சில காரணத்தால் தமிழகத்தில் சிலர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். அதை குறித்த விமர்சனம் தான் நான் முன்பு எழுதியது. உங்களுக்காக புது பதிவு எழுதி இருக்கிறேன்.
http://timeforsomelove.blogspot.com/2008/07/blog-post_15.html
Kayal/Varun
You have written good. Including your other post.
I have analysed astrologically, and this is the best deal India gets, to have inclusion.
I will be writing an article in my blog on this.
Regards
Ramesh
ஞானி, வருண், அதிஷா, சரவணன், அதியமான், ஸ்ரீதர் நாராயணன், செந்தழல் ரவி, வழிப்போக்கன், தமிழன், கயல்விழி, ரமேஷ், சுகு, அனானி, ஸ்யாம், மாதேஷ், தாமிரா... அனைவருக்கும் நன்றி.
ஞானி எழுப்பியிருக்கும் கேள்விகள் பொருள் பொதிந்தவே என்றே நினைக்கிறேன்...
ஏன் அவற்றிற்கு விடை அளிக்க அரசோ,மற்றவர்களோ முயற்சிக்கக் கூடாது?
நண்பர்களே,
அணு சக்தி ஒப்பந்ததை பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மின் பற்றாகுறையை சமாளிக்க அணுசக்தி வேண்டும் எனபது அரசின் வாதம். அதற்காக அமெரிக்கா வுடன் செய்ய விருக்கும் ஒப்பந்தம் நாட்டின் வெளியுறவு கொள்கையை பாதிக்கும் எனபது இடதுசாரிகளின் கவலை.
ஆனால் ஞானி யின் வாதம் அணுசக்தி யிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் சதவிகிதம் மிகவும் குறைவு மற்றும் அதற்கான செலவு அதிகம் என்பதிலிருந்து அணு உலைகளின் பாதுகாப்பு வரை இருக்கிறது.
இவ்வாறு குடிமக்கள் இரு வேறு கருத்துகளினால் குழம்பி இருக்கும் பொது அரசு என்ன செய்ய வேண்டும்? இந்த ஒப்பந்தத்தில் உள்ள நன்மை தீமைகளை மக்களுக்கும், எதிர் கட்சிகளுக்கும் விளக்கி convince செய்ய வேண்டும். ஆனால், மாமன்னன் மன்மோகன் அவர்கள் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், இது நாட்டுக்கு நல்லது அதனால் நிறை வேற்றுகிறோம் என்று ஒற்றை வரியில் முடித்து கொள்கிறார். எது எப்படியோ, ஆனால், இதனால் வரும் நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டியவர்கள் நமதாம்.
( அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து மூத்த அணு விஞ்யானிகள் எழுதியுள்ள கட்டுரை http://keetru.com/literature/essays/manmohan.php )
1.http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/
(கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள்)
2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40305042&format=html
(ஞாநியின் 'கான்சர் கல்பாக்கம் ' கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்)
3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309252&format=html
(மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்)
4. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310161&format=html
(கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்)
5. http://www.thinnai.com/?module=displaystory&story_id=203041912&format=html
(கேன்சர் கல்பாக்கம்: முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்)
S. Jayabarathan
http://jayabarathan.wordpress.com/
jayabarathans@gmail.com
“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”
முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.
“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”
டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.
+++++++++++++
திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துகளுக்குப் பிறகு உலகிலே பழைய அணுமின் நிலையங்கள் எல்லாம் சீர்மை செய்யப்பட்டுள்ளன. இந்தியா முதல் அநேக நாடுகளில் புதிய அணுமின் நிலையங்கள் தோன்றி பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.
அணுப்பிணைவு நிலையங்கள் வர்த்தக ரீதியாக வருவது வரை அணுப்பிளவு நிலையங்கள்தான் உலகில் பேரளவு மின்சக்தி அளிக்கும். ஜப்பான், பிரான்ஸ் அதற்கு உதாரணங்கள்.
இப்போது அமெரிக்காவும், கனடாவும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போகின்றன.
அணுமின் நிலையங்களை விட அனுதினம் பறக்கும் ஆகாய விமானங்கள் பயங்கர மானவை. பல்லாயிரம் உயிர்களைக் குடித்துள்ளன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும். அதுவும் இப்போது பெண்கள் அவற்றை இயக்கி வருகிறார். ஆகாய விமானத்தில் விபத்துக்கள் இருப்பினும் மக்கள் பயமின்றி அவற்றில் தினமும் பயணம் செய்கிறார்.
அணுமின் நிலையங்களில் நிகழும் யந்திரப் பழுதுகளை மனிதத் தவறுகளைக் குறைப்பதற்கும், அவற்றைக் கண்காணிக்கவும் அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (IAEA) வியன்னாவில் சிறந்த பணி செய்கிறது.
பொதுடமை ரஷ்ய விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் IAEA வற்புறுத்திய அணு உலை அரண் போன்ற பாதுகாப்பு முறைகளைச் செர்நோபில் உலையில் கையாள வில்லை.
கூடங்குளத்து ரஷ்ய அணு உலைகளில் இப்போது IAEA வற்புறுத்திய அத்தனை பாதுகாப்பு முறைகளும் உள்ளன.
அவற்றை IAEA கண்காணிப்பது போல் மற்ற இரசாயனத் தொழிற் துறைகள் கண்காணிக்கப் படுவதில்லை.
போபால் விபத்து ஓர் உதாரணம்.
சி. ஜெயபாரதன், கனடா.
ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்பத் தீவுகளில் தற்போது 55 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 43,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங்களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.
1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.
ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.
இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.
மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.
வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.
செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை. பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.
செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !
சி. ஜெயபாரதன், கனடா.
எந்த யந்திரச்சாலையிலும் சாதனத் தவறுகள், மனிதத் தவறுகள் ஏற்படாவென்று யாரும் உத்தரவாதம் 100% தரமுடியாது.
அதன் இயக்கமுறைகளில் தவறுகள் நேர்ந்தால் எப்படிக் கையாளப் படவேண்டும் என்று இயக்க விதிகளில் அழுத்தமாக எழுதப் பட்டுள்ளன. அவை மேற்கொள்ளப் படும் என்னும் உத்திரவாதத்தில் காப்பீடுகள் தரப்படுகின்றன.
ஐந்து கட்டச் சோதிப்புகள் (Quality Controls) (Five Stage Quality Control Tests & Verifications as per Specifications) (Production, Construction, Commissioning, Operation, Maintenance)
(a) தயாரிப்பு நிலை :
அணு உலைச் சாதனங்களிலும், இயக்க முறைகளிலும் தவறுகளைக் குறைக்கும் "தரக் கட்டுப்பாடு" (Quality Controls) முறைப்பாடுகள் :
1. சில பாதுகாப்புச் சாதனங்கள், கருவிகள் தயாரிக்கப்படும் போது "பூஜியப் பழுதுகள்" (Zero Defects) என்னும் சல்லடையில் தேர்ந்தெடுக்கப் படும்.
2. சில பாதுகாப்புச் சாதனங்கள், கருவிகள் தயாரிக்கப்படும் போது "ஏற்றுக் கொள்ளும் பழுதுகள்" (Acceptable Flaws) என்னும் தரத்தில் ஒப்புக் கொள்ளப்படும். இவை தரக் கட்டுப்பாடு நிபுணரால் எழுத்து முறையில் ஒப்புக் கொள்ளப் பட வேண்டும்.
(b) கட்டுமான நிலை : (Construction & Commissioning)
ஒவ்வொரு கட்டத்திலும் சோதிப்பு செய்தல் (வெல்டிங் சோதிப்பு, சாதனங்கள் அழுத்த சோதனை Pressure Test) போன்றவை. பழுதுகள் இருந்தால் செப்பணிடப்படும்.
(c) Operation & Maitenace Stage
ஒவ்வொரு நாளும் இரவு ஷிப்டில் கட்டுப்பாடு, பாதுகாப்புக் கருவிகள் (Control & Safety Instrumentation) சோதிப்பு. பராமறிப்பு.
(d) இயக்குபவர், பராமறிப்பவர் தவறுகளைக் குறைக்க கையாளும், பின்பற்றும் முறைகள் எழுத்து மூலம் திட்டமிடப் பட்டு, கண்காணிக்கப் படுதல்.
(e) இவற்றையும் மீறி விபத்துக்கள் நேர்ந்தால் அணு உலை தானாக நிறுத்தம் அடையும். கதிரியக்க விளைவுகள் கோட்டை அரணுக்குள் கிடக்கும்.
இந்த உத்திரவாததில் இப்போது உலக அணு உலைகள் காப்பீடுகளுடன் இயங்கி வருகின்றன.
These are the reasons why the construction, commissioning of a Nuclear Power Reactor takes time, money & skilled manpower. The Nuclear Groups of the World are well knowledgeable because of IAEA, Vienna.
Visit NPCIL, India & IAEA Websites :
1. http://www.iaea.org/
2. http://en.wikipedia.org/wiki/International_Atomic_Energy_Agency
3. http://www.iaea.org/NewsCenter/News/2010/inpro010210.html
4. http://www.npcil.nic.in/ (Indian Nuclear Power)
5. http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India
6. http://www.candu.org/npcil.html (CANDU Owners Group COG)
7. http://www.world-nuclear-news.org/newsarticle.aspx?id=24663
சி. ஜெயபாரதன்
Post a Comment