சோடியம் வேப்பர் வெளிச்சத்தில்
சாலையைப் பார்க்க
முன்னிரவில் காத்திருந்தேன்
பளீரென்றிருக்கிறது சாலை
தன் நிழலையே மிதித்த படி
தள்ளாடிக் கொண்டிருக்கிறான் குடிகாரன்
புணரக் காத்திருக்கும் மனைவியை
அடைய விரைகிறார்கள் குமாஸ்தாக்கள்
பேருந்தை நிறுத்தி விட்டு
கெட்ட வார்த்தைகளுடன் போகிறார்கள் டிரைவர்கள்
வேடிக்கை பார்க்கும் விடலைப் பையன்களுக்காக
பாதி ஆடை கிழிந்த பைத்தியக்காரி
ஆடிக் கொண்டிருக்கிறாள்
பொதுக் கழிப்பிடத்தில் இருந்து
காசு தராமல் மதர்ப்புடன் போகிறான்
அடித்தொடை தெரிய மடித்துக் கட்டிய
லுங்கியுடன் ஒருவன்
மெடிக்கல் ஸ்டோரில் தயங்கித் தயங்கி
வாங்குகிறாள் நிரோத்தை முகம் தெரியாத ஒருத்தி
எதையோ செய்யப்போய்
எதையோ செய்துகொண்டிருக்கிறேன்
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
30 comments:
//எதையோ செய்யப்போய்
எதையோ செய்துகொண்டிருக்கிறேன்//
எல்லாருந்தானே.
எதையோ செய்யப்போய்
எதையோ செய்துகொண்டிருக்கிறேன்
:)
காட்சிகள் கண்முன் விரிகின்றன இதைப்படிக்கையில்.
சுந்தர்,
உங்கள் 100வது பதிவு உங்களைப் போலவே கவிதையாக அமைந்துவிட்டது பார்த்தீர்களா? நான் 100வது பதிவில் 3 ஸ்டார்களுடன் அதீதன் வருவான் என்று நினைத்தேன் :)
100வது பதிவுக்கு வாழ்த்துகள் நண்பா...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
100வது பதிவுக்கு வாழ்த்துகள் \சுந்தர் :)
அசத்தலான கவிதை...
100க்கு வாழ்த்துக்கள்.....
என்ன செய்ய போனீங்க.......
100வது பதிவுக்கு வாழ்த்துகள்.
இதுக்கு கொண்டாட்டம் உண்டா? அதீதன் வருவாரா? :-))
//மெடிக்கல் ஸ்டோரில் தயங்கித் தயங்கி
வாங்குகிறாள் நிரோத்தை முகம் தெரியாத ஒருத்தி
எதையோ செய்யப்போய்
எதையோ செய்துகொண்டிருக்கிறேன்//
இந்த இடைவெளி ஏதோ சொல்கிற மாதிரி இருக்கிறது. :-)
நாங்கள் மனிதர்கள், முரண்களூடாகவே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.
நல்லாயிருக்கு பதிவு.
மதுவதனன் மௌ.
மிகவும் அருமையாக இருக்கிறது இந்த கவிதை நண்பரே!
சுந்தர்,
நல்லா இருக்கு. நகரின் முன்னிரவுக் காட்சி மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. நூறாவது பதிவுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள். இரு அழகான விடயங்கள், நீங்களே அதைக் குறிப்பிடாததும் நண்பர் பை.கா. அதனைக் கண்டு முதலில் வாழ்த்தியதும்.
அனுஜன்யா
////எதையோ செய்யப்போய்
எதையோ செய்துகொண்டிருக்கிறேன்//
இரவையும், 'இவர்களையும்' பிரிக்க முடியாது!
100 வது பதிவுக்கு உங்கள் வாசகர்களின் ஒரு சிறப்பு பரிசு இங்கே
அன்பு வாசகி
நறுமுகய்
தமிழ்மானம் வலைச்சிற்றிதழ்
அருமை..அருமை...நண்பரே..!
மொழி விளையாட்டை தொடர வாழ்த்துக்கள் !
A video about S/w Engineers Life
Enjoy
TamilNenjam
நன்றாகவிருக்கிறது சுந்தர்.
நல்லாயிருக்கு...
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணன்...:)
arumai...
ஆடுமாடு, கென், குரு, பைத்தியக்காரன், டிபிசிடி, அதிஷா, ஸ்ரீதர் நாராயணன், மதுவதனன் மௌ, குசும்பன், அனுஜன்யா, வீரசுந்தர், நறுமுகய், ஈர வெங்காயம், தமிழ்நெஞ்சம், டீஜே, கிங், நிலா முகிலன்... பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
அடடே 100-வது பதிவா? பிரமாதம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கவிதை அசத்தலாகவிருக்கிறது //புணரக் காத்திருக்கும் மனைவியை
அடைய விரைகிறார்கள் குமாஸ்தாக்கள்// இவ்வரியின் ஏதோ ஒன்று உறுத்துகிறது. என்னவென்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. காத்திருக்கும் மனைவி 'அதற்காக' மட்டுமே காத்திருப்பது போன்ற தொனி அவ்வரியில் வருகிறது - அது யதார்த்தமா என்று கேள்வி எழுகிறது. குமாஸ்தாக்கள் விரையும் பிற்பாதி சரி. அவர்கள் விரைவது அவர்களுக்கிருக்கும் பசி'யினால்தான். புணரக் காத்திருக்கும் மனைவி என்பதைவிட, 'மனைவியைப் புணர விரைகிறார்கள் குமாஸ்தாக்கள்' என்றிருந்தால்?
//மெடிக்கல் ஸ்டோரில் தயங்கித் தயங்கி
வாங்குகிறாள் நிரோத்தை முகம் தெரியாத ஒருத்தி//
அட.. அட.. அட... அசத்தல்!!!
செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் அடிச்சியே ஆடவும்! :-)
"புணரக் காத்திருக்கும் மனைவியை
அடைய விரைகிறார்கள் குமாஸ்தாக்கள்"
உங்கள் கவிதையின் அதிர்வுக்காக,
பாவம் குமாஸ்தாக்கள் , அவர்கள் மனைவிகளோடு
இணையவெளியில் படுத்து இருக்கிறார்கள்.
நன்றி, வற்றாயிருப்பு சுந்தர். யோசித்து எழுதிய வரிகளே அவை - குமாஸ்தாக்களின் பார்வையில் வருபவை அவ்வரிகள்.
நன்றி, லக்கிலுக்.
நன்றி, அனானி.
அற்புதமான கவிதை சுந்தர். வரிகளைப் படிக்கும்போது காட்சிகள் கண்முன் விரிகின்றன. வாழ்த்துக்கள்..
நன்றி, வெண்பூ.
//பார்க்காமல் காதலிப்பது, தொடாமலே காதலிப்பது, காதலுக்காக நாக்கு மற்றும் இன்னபிற உறுப்புகளை அறுத்துக் கொள்வது (ஏண்டா அதுக்குப் பதிலா குறியை அறுத்துகிட்டாலாவது பரவாயில்லை), காதல் ஒரே முறைதான் மலரும் என்பது (காதல்னாலே உடனேயே இந்தப் பூவைக் கொண்டுவந்துடறாங்கப்பா), காதலன் / காதலிக்காக வாழ்நாளெல்லாம் உருகிக் கொண்டேயிருப்பது....//
காமம் என்று சொல்ல முடியாத இந்திய சமுதாயத்தில் அனைத்தையும் "காதல்" என்ற வட்டத்தில் அடைப்பதைத்தவிர வேறு வழி இல்லை.
டெக்னிகலாக ஒரு ஆணுக்கோ/பெண்ணுக்கோ உலகத்தில் பல potential soul mates இருப்பார்கள். காதல் ஒரு முறை தான் மலரும் என்பது சினிமாவுக்கு, கவிதைக்கும் மட்டும் சரி.
மீண்டும் நல்ல படைப்பு திரு. ஜ்யோவராம் சுந்தர்.
நன்றி, கயல்விழி. ஆனால் பாருங்கள், காமக் கதைகள் 45 (14)க்குப் போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கே போட்டுவிட்டீர்கள் :(
ஆமாம் கவனித்தேன் மன்னிக்கவும்.
திரும்பவும் சரியான இடத்தில் இதை பதிக்க முயற்சிக்கிறேன்.
100வது பதிவுக்கு வாழ்த்துகள்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com
Post a Comment