வந்தனாவை அழைத்துக் கொண்டு பங்களூர் சென்றிருந்தான் அதீதன். இரண்டாம் வகுப்பில் பெர்த் கிடைக்காமல் பக்கவாட்டு இருக்கைகள் மட்டுமே இருவருக்கும் கிடைத்தது.
எதிரெதிரில் படுத்தபடி பயணம் செய்தார்கள். இரவில் விளக்குகள் அணைந்ததும், அடர்ந்த இருட்டில் லேசாக அவளைச் சீண்டினான். அவளும் முனகியபடி திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தாள். சீண்டல்களில் கழிந்தது இரவு நேரப் பயணம்.
முன்கூட்டியே பதிவு செய்யாததுகூட நல்லதுதான் என நினைத்துக் கொண்டான்..
பங்களூரில் காவேரி காண்டினெண்டல் ஹோட்டலில் விஸ்தாரமான அறை. கணவன் மனைவியென்றே பதிவு செய்திருந்தார்கள். அறையை அடைந்ததும், ரூம் பாயிடம் பிரிந்திருந்த இரண்டு கட்டில்களையும் ஒன்று சேர்த்து போடச் சொன்னாள் வந்தனா. அதீதனுக்கு லஜ்ஜையாக இருந்தது. ரூம் பாய் சென்றவுடன், 'நாமே இழுத்துப் போட்டிருக்கலாமே.' என்றான்.
இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள் பங்களூரில். லால்பாக் பார்க்க வேண்டுமெனச் சொல்லிருந்தாள். ஆனால், ஊர் சுற்றிப் பார்க்கக் கூட வெளியில் செல்லாமல் பகல் முழுதும் அறையிலேயே அடைந்து கிடந்தார்கள் இருவரும். இரவுக் குளிரில் இடுப்பை அணைத்தபடி நடந்தனர் சாலைகளில்.
சொர்க்கமா இருந்ததுடா அந்த ரெண்டு நாட்களும் என்றான் அதீதன்.
திரும்பி வரும்போது வந்தனாவிடம் வருத்ததுடன் கேட்டான் அதீதன்.. ‘நாம் நேத்து செய்யும்போது நீ ஃபேக் தானே பண்ணினே...' வந்தனா, ‘உன்கூட இருக்கும்போது இப்பல்லாம் எது ஃபேக் எது நிஜம்னு எனக்கே தெரியறது இல்லைடா...' என்றாள்.
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
22 comments:
//திரும்பி வரும்போது வந்தனாவிடம் வருத்ததுடன் கேட்டான் அதீதன்.. ‘நாம் நேத்து செய்யும்போது நீ ஃபேக் தானே பண்ணினே...' வந்தனா, ‘உன்கூட இருக்கும்போது இப்பல்லாம் எது ஃபேக் எது நிஜம்னு எனக்கே தெரியறது இல்லைடா...' என்றாள்.//
புரியலை :-(
தயவுசெய்து தனிமடலிலாவது ஃபேக் என்றால் என்னவென்று சொல்லவும்
லக்கிலுகிற்கு உதவியாக
http://en.wikipedia.org/wiki/Fake_orgasm
இந்த கதை சத்தியமா நல்லால்ல
மத்த கதைல இருந்த ஏதோ ஒன்னு
இந்த கதைல இல்ல
மன்னிக்கவும்
மிகவும் தவறான உதாரணங்களுடனே அறிமுகமாகும் Faking போன்ற விஷயத்தைப் பற்றி இன்னும் பேசியிருக்கலாம். ஆனால் இது போன்ற விஷயங்கள் நல்ல முறையில் அறிமுகம் ஆவதுமே கூட போதும். அந்த வகையில் ஓக்கே!
எனக்கு இந்த விஷயத்தில் தி.ஜானகிராமனை ரொம்பவும் பிடிக்கும், 'பெண் ஒருத்தியின் திருப்தி' என்பதை மையக்கருவாக வைத்து முழு நாவலை எழுதியிருப்பார். ஆனால் அதில் நிறைய ஆணாதிக்கக்கூறு இருப்பதாக பெண்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் நாவல் 'சரியான க்ளாஸ்' படிச்சிருக்கீங்களா?
இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நாவல் பெயரை விட்டுட்டனே - மரப்பசு தான் அந்த நாவல்.
இன்னும் தேவைன்னு கேட்க வைக்கிற கதை
அதுதான் உங்க வெற்றி கலக்குங்க
லக்கிக்கு தனிமடல் போடாதீங்க
//மதுவர்மன் said...
லக்கிலுகிற்கு உதவியாக
http://en.wikipedia.org/wiki/Fake_orgasm
//
நன்றி மதுவர்மன்.
இப்போது தமிழில் முன்னணியாக இருக்கும் நடிகை இந்த விஷயத்தில் கில்லாடியாம். ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களிலேயே முழுத்திருப்தி அடைந்து விட்டது போன்ற ரியாக்ஷன் கொடுப்பாராம் :-)
யாரந்த நடிகை என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எனது ஜட்டிக் கதைகளுக்கு பின்னூட்டம் போடவும்!!
:)
நன்றி, லக்கி லுக்.
நன்றி, மதுவர்மன்.
நன்றி, அதிஷா. உங்களுக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்றீங்க. இது மகிழ்ச்சியான விஷயம்தாங்க.
நன்றி, மோகன் தாஸ். மரப்பசு படித்திருக்கிறேன்.
கதைகள் (பெரும்பாலும்) நல்லாயிருக்கு. ஆனா ரொம்ப கம்மியா பத்து அல்லது இருவது வரிதான் எழுதுறீங்க. இன்னும் அதிகப்படுத்தலாம்.
ஒரு புதிய விஷயத்தை தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி!
வால்பையன்
இது புதுசா இருக்கே...:)
லக்கிலுக் சொன்னது...
///நன்றி மதுவர்மன்.
இப்போது தமிழில் முன்னணியாக இருக்கும் நடிகை இந்த விஷயத்தில் கில்லாடியாம். ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களிலேயே முழுத்திருப்தி அடைந்து விட்டது போன்ற ரியாக்ஷன் கொடுப்பாராம் :-)
யாரந்த நடிகை என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எனது ஜட்டிக் கதைகளுக்கு பின்னூட்டம் போடவும்!!///
///????/// :))
அடப்பாவி மனுஷா...
:-) நல்லா இருக்கு.
இர்விங் வாலஸின் 'The second lady'ல் இதைப் பத்தி மிக விரிவாக எழுதியிருப்பார். எப்பொழுதோ படித்த ஞாபகம்.
நன்றி, கென்.
நன்றி, இராம்.
நன்றி, வெண்பூ. இதையெல்லாம் சின்னதாத்தான் எழுதணும் :)
நன்றி, வால்பையன்.
நன்றி, தமிழன்.
நன்றி, ஸ்ரீதர் நாராயணன். நானும் அப்புத்தகத்தை வாசித்திருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு. அதில் first ladyக்கும் ஒரு இடத்தில் இந்த சந்தேகம் வரும் :)
ஒரே குஜாலா க்கீதுப்பா...
//திரும்பி வரும்போது வந்தனாவிடம் வருத்ததுடன் கேட்டான் அதீதன்.. ‘நாம் நேத்து செய்யும்போது நீ ஃபேக் தானே பண்ணினே...' வந்தனா, ‘உன்கூட இருக்கும்போது இப்பல்லாம் எது ஃபேக் எது நிஜம்னு எனக்கே தெரியறது இல்லைடா...' என்றாள்.//
ஃபேக், ரியல் என்பதற்கான வித்தியாசங்களை எப்படி உணர முடியும்..?
ஃபேக்கின் அவசியம் இருக்கிறதா...?
ஃபேக்கின் அவசியம் எந்த அளவுக்கு இருக்கிறது, அதன் காரணங்கள் விளைவுகள் பற்றி பேச முடியுமா...?
அம்முவாகியநான் படம் நினைவுக்கு வந்து போனது...
இந்த இடத்திற்கும் அந்த படத்துக்கும் இருக்கிற சம்பந்தம் பற்றி சொல்ல முடியுமா...
Ungal kamma kathaigal superb... thoda sorry thodurungal...
நன்றி, கிங், ஈர வெங்காயம் & அஷோக் (சொல்ல மறந்து போனது, மன்னிக்கவும்).
Post a Comment