மக்களே உண்மை உரைப்பேன், கேளுங்கள்.
1. நம்முடைய பண்பாடு கலாச்சாரம் மேன்மையானது. அவை நம்மிரு கண்களைப் போன்றது. அதைக் கட்டிக் காப்போம்.
2. பிரம்மச்சரியமே உயர்ந்தது. சன்னியாச வாழ்க்கையே ஆண்டவனுக்கு நெருக்கமானது.
3. அது முடியாவிடில், திருமணம் செய்துகொள்வீர். பெற்றோரின் மனம்கோணாமல் அவர்கள் நிச்சயிக்கும் வரனையே மணமுடிப்பீர்களாக.
4. கணவன் மனைவி இருவரும் வஞ்சித்துக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருங்கள். உங்கள் இருவருக்குள் சிறு சந்தேகமும் வராமல் நடந்துகொள்வீர்.
5. முறையற்ற உறவைத் தவிர்ப்பீர். உங்களுக்குச் சொர்க்கம் சாசுவதமாகும்.
5.அ. மனைவியின் உடல் அவளுக்குச் சொந்தமானதல்ல. கணவனின் அதிகாரதிற்குட்பட்டதே அது.
5.ஆ. கணவன் வேறுமகளிருடன் உறவுவைத்திருந்து, அது தெரியவந்தாலும், மனைவி பொறுத்துக் கொண்டு அவனுடன் வாழ்ந்து பணிவிடை செய்தால் அவளுக்குச் சுமங்கலி யோகம் நிச்சயமுண்டாகும்.
6. குடும்பம் / திருமண உறவுகள் புனிதமானவை. அதைக் காப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்வீர்களாக.
7. கணவன் மனைவி இருவரும் நோன்புகள் பல இருந்து தங்கள் உடல் இச்சைகளைக் குறைத்துக் கொள்ளட்டும். ஆட்டம் பாட்டம் போன்ற கேளிக்கைகளை தவிர்ப்பீர்.
8. திருமணமாகும்வரை பொறுத்திருப்பீர். குறைந்தபட்சம் திருமணமாகும்வரை ஆண் பெண் இருவரும் தொடாமலிருப்பதே நல்லது.
9. விதவைகள் உண்ணா நோன்பு போன்ற கடுமையான விரதங்கள் இருந்து தங்கள் இச்சைகளை அடக்கிக் கொள்வார்களாக. அவர்கள் உணவில் வெங்காயம், பூண்டு, முருங்கை, மாமிசம் போன்றவற்றைத் தவிர்ப்பார்களாக.
இவ்வளவையும் கேட்டதும் அதீதன் தன் இடக்கை நடுவிரலை உயர்த்திக் காட்டினான்.
இனி, கேள்வி பதில் பகுதி :
1. காமக் கவிதைக்கும் காமக் கதைக்குமான வித்தியாசத்தை கூறுக
2. வர்ஷாவுடனான அதீதனின் உறவு ஏன் முறிந்தது
3. அதீதன் கதாபாத்திரம் குறித்து சிறுகுறிப்பு வரைக
4. பள்ளிகளில் செக்ஸ் கல்வி தரலாமா என்பது பற்றிய உங்கள் பார்வை என்ன
5. உடலுறவு கொள்ள எந்த நிலை ஏற்றது ? ஏன் ?
கார்காலக் குறிப்புகள் - 59
3 days ago