காமக் கதைகள் 45 (9)

அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களை அழைத்து கடனட்டை சேவையை விற்கும் டெலி மார்கெட்டிங் வேலை ரேவதிக்கு. அதீதனுக்கு வரும் அழைப்புகளில் பெண் குரல் கேட்டால் விடமாட்டான், பேசிக் கொண்டே இருப்பான்; ராங் நம்பரென்றால் கூட பெண் குரலென்றால் பேச ஆரம்பித்து விடுவான்.

அவனது வழக்கமான அறிமுகம்..

'எனக்கு வயசு 27ங்க. ஒரு ஷிப்பிங் கம்பெனில மேனேஜரா இருக்கேன்..' எனத் துவங்கும். முதலில் எதிர் பார்ட்டியின் விவரங்களைக் கேட்கவே மாட்டான். 'அவங்களாத் தருவாங்கடா...'. பிறகு, மெதுவாக அவர்களுக்குப் பிடித்தமானது, பொழுது போக்கு எனக் கேட்டுக் கொள்வான். அந்தப் பெண் தப்பித் தவறி, உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எதுவெனக் கேட்டால் போதும், உடனே சுஜாதா கதையிலிருந்து எடுத்து விடுவான் ‘ஐ லைக் ஆல் பால் கேம்ஸ்' என்று (பாருங்க கதை படிப்பது எதுக்கெல்லாம் உபயோகமா இருக்குன்னு!).

அந்தப் பெண் கெக்கே பிக்கே எனச் சிரிக்கும்...

'எப்படிடா இவ்வளவு நிச்சயமா சொல்றே.. கோவம் வராது அவங்களுக்கு' என்றேன் நான்.

‘கோபப் படறவங்க முதல்ல இவ்வளவு தூரம் என்கிட்ட பேசியே இருக்க மாட்டாங்க..'

அப்படித்தான் ரேவதியுடனும் நடந்தது. அடுத்து ஸ்டாக்கில் இருக்கும் ஒன்றிரண்டு ஜோக்குகளை அள்ளி விட்டான். சாம்பிளுக்கு :

மனைவிக்கு புருசன் மேல ரொம்ப கோபமாம், தன்னை கவனிக்கறதே இல்லைன்னு. அதனால அவன வெளியே தள்ளிக் கதவ சாத்திட்டாளாம். கொஞ்ச நேரத்துல டொக்கு டொக்குன்னு கதவ தட்டினானாம். அவ நீங்க தானே கதவ திறக்க மாட்டேன்னுட்டாளாம். நான் இப்போ எதால கதவ தட்டறேன்னு தெரிஞ்சா நீ சந்தோஷப் படுவேன்னான் அவன். அவளுக்கு சுருசுருன்னு ஆகிடுச்சாம். அப்படியா அதை இன்னைக்கு ராத்திரி எனக்கே கொடுத்திடுவீங்களான்னா. அவனும் சரின்னான். அவ ஆசை ஆசையா கதவத் திறக்க, அவன் கையில புது டார்ச் லைட் இருந்துச்சாம்!

ரேவதியுடனான உறவு தொடரும் என நினைத்தவனுக்கு அதிர்ச்சி. கொஞ்ச நாட்களிலேயே அவனுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டாள்.

‘ஏண்டா' என்றேன்.

‘அவகிட்ட கிரெடிட் கார்ட் வாங்கிக்கறேன்னு சொல்லியிருந்தேன். டிமிக்கி கொடுத்துகிட்டே வந்தேன்.. ஒரு வேளை அதுகூட காரணமாயிருக்கலாம்' என்றான் அதீதன்.

காமக் கதைகள் 45 (8)

'வழுக்கைத் தலையர்களுக்கு காம உணர்ச்சி அதிகமாயிருக்கும் என நீங்கள் எழுதியிருந்தது பிடித்தது' என்றார் லக்கி லுக் அல்லது வேறு பெயருடைய ஒரு நண்பர்.

அப்போது நான் போதையில் இருந்ததால் யார் என்பது சரியாக நினைவிலில்லை.

'இல்லைங்க அதெல்லாம் வெறும் மித்' என்றேன். ‘இப்ப உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்குங்களேன், எனக்கு வழுக்கைதான். ஆனா காம உணர்ச்சி ரொம்பக் கம்மிதாங்க' என்றேன். 'ஆனா இந்த அதீதன் அப்படியில்லைங்க. எப்ப பார்த்தாலும் அதே நினைப்புதான் அவனுக்கு'

அவர் ஏற்றுக் கொண்டாரா எனத் தெரியவில்லை.

ஆனால் இப்போது அதீதனுக்கு வழுக்கை விழத் துவங்கி விட்டது. போலவே லக்கி லுக்கிற்கும் அல்லது வேறு பெயருடைய நண்பருக்கும்.

காமக் கதைகள் 45 (7)

காமத்திற்கும் காதலுக்குமான வித்தியாசம் மிக மெல்லியது இல்லை இரண்டும் ஒன்றுதான் டைல்ஸ் ஒட்டப்பட்ட குளிர்ச்சியான வெறுந் தரையில் படுப்பதும் யார் மேலாவது படுப்பதும் ஒன்றா கட்டிலா மெத்தையா மெத்தை எடுக்கப்பட்ட கட்டிலா இரண்டு தலையணைகளில் முகம் புதைத்து தூங்குவதா முத்தங்களைக் கால்களிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது நெற்றியிலிருந்து காது நுனிகளைக் கடிக்கலாமா நிலவில் தெரியும் உருவம் மூன்றா ஆண் பெண் மேல் கீழா கீழ் மேலா கேரளா

மாநிலத்தில் பெண்கள் உடை மதிய வெயிலில் மெரினாவில் கட்டிப் பிடித்துக் கொண்டு காதலர்கள் மாலை வேளைகளில் மடியில் படுத்தபடி ஆண் மடியில் பெண் போலீஸ் பணப்பறிப்பு தினசரிச் செய்தி எல்ஃபிரட் ஜெலனிக் பியானோ டீச்சர் டி சேட் சேடிஸம் ஆர்ஃபிசம் கியூபிசம் ஃபாவிசம் ஷேவ் பண்ணிய முகத்துடன் முத்தமிடுவது லேசான மீசை முளைத்த பெண் மார்பு நடுவில் முடி முளைத்த பெண் காம இச்சை கூடுதலாயிருக்கும் வழுக்கைத் தலையர்களுக்கு செக்ஸ் ஆர்வம் கூடுதலாயிருக்கும் கைகளிலும் மார்பிலும் ரோமம் அதிகமாயிருக்கும் ஆண் கவர்ச்சியானவன் தமிழ்

நாட்டின் கலாச்சாரம் வேறு கால்மெட்டி பார்த்தபடி நடக்கும் பெண்கள் இடித்துச் செல்லும் பொறுக்கிகள் பேருந்து நிலையத்தில் குறி காண்பித்தபடி தூங்கும் பைத்தியக்காரன் ரயிலில் எதிர் பெர்த்தில் படுத்திருப்பவனை எப்படி எழுப்புவது கழிவறைகளில் துர்நாற்றம் தாங்க முடியாததாய் இருக்குமே தொலைதூரப் பேருந்தில் முன் இருக்கைப் பெண்ணின் முலைவருடுவது எப்படி காலைச்சுரண்டினால் விழித்துக் கொள்வாளா கடந்து போகும் லாரியின் டிரைவர் எவ்வளவு நாள் மனைவியைப் பிரிந்திருப்பான் பஞ்சாப்

கோதுமை நிறத்தில் பெண்கள் துப்பட்டா கழற்றி போடும் ஆட்டம் கொண்டாட்டம் தமிழ் சினிமாவில் வரும் அருவருப்பான அங்க சேஷ்டைகள் நாடகங்களில் இல்லை ஒம்பதாம் நம்பர் மட்டும் இங்கே சேராதம்மா எதுவும் கேளு சும்மா உறங்கும் பெண்மணியின் விலகிய மார்பை வெறித்துப் பார்ப்பது விலக்கப்பட்டவற்றின் எச்சங்கள் பம்ப் செட்களில் வழிகிறது கையில்லா ரவிக்கை ரவிக்கையில்லா முதுகு இழுத்துச் சொறுகிய புடவை ஏற்றிக் கட்டிய கொண்டை

வளைவுகள் கொண்ட திருப்பதியில் சதை வியாபாரம் காம லீலைகள் சரோஜாதேவி புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை இணையத்தில் படிக்கத் துவங்கி விட்டார்கள் தொலைக்காட்சியில் டென்னிஸ் இடத்தை பெண்கள் WWF பிடித்துக் கொண்டது பார்க்கிறான் பார்க்கிறாள் பார்க்கிறாள் பார்க்கிறான் பார்க்கிறான் பார்க்கிறாள் பார்க்கிறாள் பார்க்கிறான் நடன ஆடை நெய்கிறான் நாக்கில் எச்சில் ஊறியபடி ஆடைகளைத் தடவிப் பார்த்து உச்சமடைகிறான் விடலைப் பையன் தனிமை உருகி வழிந்தோட காமம் சுற்றிக் கொண்டிருக்கிறது மின்னஞ்சல்களில் நயாக்ரா

ஃபால்ஸ் வயாக்ரா ரைசஸ்

காமக் கதைகள் 45 (6)

'காரில் புணர்வது பற்றி என்ன நினைக்கிறாய் நீ' என்றான் அதீதன்

‘உன் அனுபவத்தைச் சொல்லு'

‘சிலர் காரிலேயே பாதிப் புணர்ச்சியை முடித்துவிடுகிறார்கள்'.

‘எங்கே எங்கே' என்றேன் ஆர்வத்துடன் நான்.

‘மெரினாவில் காந்தி சிலை தாண்டி லைட் ஹவுஸ் முன்பு வரிசையா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களின் முன் / பின் இருக்கைகளில் இதுதான் நடக்கிறது'

‘உன் கதையைச் சொல்லு' என்றேன்

‘சுமோவோ அல்லது அதுபோன்ற கார்களோ இருந்தால் பெசண்ட் நகர் அருகில் சாலையோரத்தில் காரின் பின் இருக்கைகளை உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் என்னிடம் இருப்பது அப்படிப்பட்ட கார் இல்லையே..' என வருத்தப்பட்டான் ஆதீதன்.

அவனது பதினெட்டாவது காதலியான கீதாவுடனான உறவு 4 மாதம் 5 நாட்களில் முறிந்து போனது குறித்து எழுதலாமா என யோசிக்கிறேன். வேண்டாம், அது அவ்வளவு சுவையாயிராது. மாறாக சமீபத்திய காதல் கதையைச் சொன்னான்.

அவன் தெருவில் இருக்கும் வனஜாவிற்கு திருமணமாகி குழந்தையுண்டு. வயது 27; அழகாக இருப்பாள். கணவன் சம்பாதிப்பது போதவில்லை போல. அதற்காக பிராத்தல் செய்யவும் விருப்பமில்லை. யாராவது ஒருவர் அவளை வைத்துக் கொள்வது போல் இருந்தால் பரவாயில்லை என நினைத்திருக்கிறாள்.

இது எதுவும் அறியாத அதீதன் அவளைக் காதலித்திருக்கிறான். காதலித்தால் மிகத் தீவிரமாகக் காதலிப்பான் - வனஜாவிற்காக உருகியிருக்கிறான். முதல் மாதம் அத்தை மகன் மருத்துவச் செலவுக்கென்று பணம் கேட்டிருக்கிறாள். அடுத்த மாதம் உறவினர் திருமணம்; நகை அடகில் இருக்கிறது, எடுக்கவென பணம் கொடுத்திருக்கிறான். அதற்கடுத்த மாதம் குழந்தையின் பள்ளிச் செலவிற்கென கேட்டு வாங்கியிருக்கிறாள்.

அதீதன் கணக்குப் போட்டுப் பார்த்தான். மாதத்திற்கு 14,400 ஆகியிருக்கிறது.

அடுத்த மாதம் அவள் பணம் கேட்டபோது தயங்கியபடி இவ்வளவுதான் முடியும் என குறைவான தொகையைச் சொன்னானாம். வனஜா, ஐயோ போதாதே என இழுத்திருக்கிறாள். அதீதன் இல்லை, இவ்வளவுதான் முடியுமென தீர்மானமாகச் சொல்ல ‘என்ன ஓக்கும் போது கணக்காடா போட்டே' என்றிருக்கிறாள். இவனும் விடாமல் ‘அதுக்குன்னு, நான் வர்ரதே மாசத்துக்கு ரெண்டு நாள்தான். உனக்கு தங்கத்துலயா செஞ்சிருக்கு, அவ்வளவு கொடுக்க' என சண்டை போட்டிருக்கிறான். வனஜா அதீதனை விரட்டி விட்டாள்.

வாய்விட்டுச் சிரித்தேன். தெய்வீகக் காதலில்லையா ?

‘கேளுடா இன்னும் கதை முடியல' என்றான்.

அடித்து விரட்டிய வனஜா இவனை மறுபடியும் தொடர்ந்து அலைபேசியில் அழைத்து வரச் சொல்லியிருக்கிறாள். அதீதனும் சென்றிருக்கிறான். பேரம் பேசி மடிந்து.... இப்போது மறுபடியும் உறவு மலர்ந்துவிட்டது.

‘அவ முதல்லயே சொல்லியிருக்கலாம் இவ்வளவு பணம் வேணும்னு...' என்றான் அதீதன்.

காமக் கதைகள் 45 (5)

இப்போதெல்லாம் எதைப் பார்த்தாலும் பயமாயிருக்கிறது.

இக்கதைகள் வெறும் உணர்ச்சிகளைக் கிளறும் கதைகளாகச் சிலர் பார்ப்பார்களோ என்ற பயம். என் உறவினர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம்; அப்படி நடந்தால் என்னுடைய பிம்பம் என்ன ஆகுமோ என்ற பயம். கோபம் கொண்ட பெண் வாசகிகள் யாராவது நான் தனியாகச் செல்கையில் குத்திக் கொன்றுவிடுவார்களோ என்ற பயம். எனக்கு ஓடத் தெரியும்; ஆனால் அவர்கள் குழுவாகவோ அல்லது வாகனத்திலோ வந்தால் என்ன செய்வது என்ற பயம். அவ்வளவு விரைவாக உன்னால் ஓட முடியாது; அதற்குத்தான் சிகரெட் பிடிக்கக் கூடாது என யாராவது அறிவுரை சொல்வார்களோ என்ற பயம். சிகரெட் விலை ஏறிக் கொண்டேயிருக்க என்னுடைய காதலியும் சிகரெட் பிடிக்கத் துவங்கிவிட்டால் செலவைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற பயம்.

காதலியுடன் விடுதி படுக்கையறையில் ஒன்றாக இருக்கும்போது போலீஸ் வந்துவிட்டால் என்ன செய்வது? இல்லாத தாலியை காட்டாததால் எங்களைக் கைதுசெய்துவிடுவார்களோ. அதுகூடப் பரவாயில்லை, அடுத்த நாள் செய்தித்தாள்களில் அழகியுடன் வாலிபன் கைது என படத்துடன் செய்திவந்துவிடுமோ என பயமாயிருக்கிறது.

அப்படி எதுவும் ஆகாவிட்டாலும், காதலி மாத்திரை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். கர்ப்பமானதை உடனடியாகக் கவனியாமல் 9 வாரங்கள் கழித்து கவனித்து, சிகிச்சையில் மரணமடைந்தால் என்ன செய்வது? காவல்துறை கைது செய்தால் என்னை அடிப்பார்களா.? செல்லில் வெறும் ஜட்டியுடன் நிற்கை வைத்து லத்தியால் பிளப்பார்கள் எனக் கேள்விப் பட்டதிலிருந்து பயமாயிருக்கிறது. சிறைச்சாலையில் உடனிருக்கும் கைதிகள் என்னை ஒருபாலுறவிற்குக் கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது. என்னுடைய குதம் அவர்களது குறிகளைத் தாங்குமா என பயமாயிருக்கிறது.

போலீஸ் பிடிக்காவிட்டாலும், அவளுக்கு ஏதாவது நோயிருந்து அது என்னையும் தொற்றிக் கொண்டால் என்ன செய்வது என பயமாயிருக்கிறது. பால்வினை நோய் வந்தால் குறியின் முனை சிறு சிகப்பு மலரைப் போல் வீங்கிச் சீழ் வடிந்து சிறுநீர் பிரியவே சிரமப் படுவேனோ என பயமாயிருக்கிறது (உடனே காமத்தை மலருடனும் சீழ் வடிதலுடனும் குறியீட்டு ரீதியாக ஒப்பிடுகிறேன் என யாராவது சொல்லிவிடுவார்களோ என பயமாயிருக்கிறது).

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர் வேதம் தந்த பூமி இது என்றான் ஒருவன். ஒருவன் பலரைக் காதலிப்பதை எழுதும் நீ ஒருத்தி பலரைக் காதலிப்பதை எழுது முடியாமா என்கிறான் இன்னொருவன். இந்தக் கதைகள் உனக்கு நடந்த கதைகளா எனக் கேட்கிறான் வேறொருவன்.

காமக் கதைகள் எனத் தலைப்பு வைத்துவிட்டு காமத்தை எழுத ஏன் பயப்படுகிறாய் என்கிறான் என் நண்பன். உடலுறவு கொள்வதை அப்படியே அங்குலம் அங்குலமாக விவரித்தால் நன்றாயிருக்குமாம்; கூடவே படங்களும் இருந்தால் தேவலையாம். அவனிடம் மேலே கூறிய பயங்களைச் சொன்னேன்.

பயமில்லையென்றால் நானும் அதீதனைப் போல் பலரைக் காதலித்திருக்க மாட்டேனா...???

நகுலன்

புரியாத புனைவெழுதி எழுதி
நாசமாய்ப் போனான் நகுலன்
அவன் வாழ்ந்த
சிதிலமடைந்த வீட்டில்
இப்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது
அவனது நாற்றமெடுக்கும் உடலும்
வெள்ளை-மஞ்சள் நிறப் பூனையும்
கேசவனும் மாதவனும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்
ஒரு வாய் பிஜாய்ஸ் பிராந்திக்கு
வந்த வழி கண்ட காக்ஷி
நகுலன் எழுத்துகளில்
சிதறுண்டு கொண்டிருக்கிறான் நவீனன்

காமக் கதைகள் 45 (4)

திறந்த வான்நோக்கிய கூட்ஸ் ரயில் பெட்டியில் புணர்வதற்கும் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டியில் நடக்கும் சம்போகத்திற்குமான வித்தியாசத்தை நீ உணர்வாயா பெண்களும் ஆண்களும் கூட்டமாக இடுப்பை முன் பின்னாக அசைத்து ஆடுவது உன் வரவேற்பரையில் நடக்கிறதா இல்லையா அதை ரசிக்கும் நீ அப்பெண்கள் ஆடை மாற்ற படும் சிரமங்களைப் பற்றி என்றாவது யோசித்ததுண்டா சி மணியின் பச்சையம் படித்திருக்கிறாயா ரமேஷ் பிரேமின் கவிதைகளுக்கும் விக்ரமாதித்யன் கவிதைகளுக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறாயா என்றாவது லைவ் ஷோவில் வெட்கத்தைத் துறந்து கலந்து கொள்ள முடிந்திருக்கிறதா பாலியல் கதைகளுக்கும் பாலியல் துணுக்குகளுக்குமுள்ள ஒன்பது வித்தியாசங்களை உன்னால் பட்டியல் போட முடியுமா

நீலப் படங்களில் நிர்வானப் பெண்கள் ஏன் காலணிகளோடு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா ஏன் அப்படங்களில் ஒரு இயந்திரத்தைப் போலவே ஆண்கள் இயங்குகிறார்கள் என என்றாவது யோசித்ததுண்டா காமம் சுயவாதையும் கூட என்பதை ஒப்புக் கொள்வாயா முலை தொங்கிய விலைமகளிர் புணர்ச்சியை எப்படி எதிர்கொள்வார்கள் உன்னைப் போல் மட்டமான சரக்கைக் குடித்துவிட்டு மனைவியைக் கலவிக்குக் கூப்பிட்டு அடிப்பவர்களைப் பற்றி நீ கேள்விப் பட்டதில்லையா அழகான பெண் உடனிருக்க உச்ச போதையில் குறிசுருங்கிப் படுத்து உறங்கியிருக்கிறாயா

மனைவிகளையும் காதலிகளையும் மாற்றிக் கொள்ளும் பார்ட்டி கொண்டாட்டங்களைப் பற்றி நண்பன் விவரிக்கையில் முகம் சுளிக்கவில்லையா நீ ஆண்களுக்கிடையிலான ஓரினப் புணர்ச்சி பற்றிய உன் கருத்துகளை எங்காவது பதிந்திருக்கிறாயா ஆண் ஓரினப் புணர்ச்சிக் கதைகளையோ அல்லது படங்களையோ விரும்பிப் பார்த்திருக்கிறாயா நீ சிகப்புத் தோலே உன்னை வசீகரித்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வாயா

ஏன் இந்தக் கதைத் தொடரில் எல்லா எண்களின் கூட்டுத் தொகையும் ஒன்பதாக வருகிறது என்பதை நீ விளக்க முடியுமா உனக்கு எண் கணிதம் ஜாதகம் தெரியுமா

குளங்களில் பெண்கள் குளிப்பதை வெறித்துப் பார்க்காமல் இருக்க முடிந்திருக்கிறதா உன்னால் டாஸ்மாக் கடைகளுக்கு ஏன் பெண்கள் குடிக்க வருவதில்லை என உணர்ந்திருக்கிறாயா தெருவோர குடும்பங்கள் எந்நேரத்தில் எப்படி உடலுறவு கொள்வார்கள் என்பதற்காய் வருத்தப்பட்டதுண்டா தாய்லாந்தில் இருக்கும் பாலியல் தொழிலாளியுடன் செல்வதைப் பெருமையாகக் கருதும் நீ சென்னை மெரினாவில் உன்கை பிடித்திழுக்கும் பெண்களை உதறித்தள்ளுவது ஏன்

காதலியுடன் படுக்கச் சென்ற பின் ஆணுறை இல்லாததைக் கவனித்திருக்கிறாயா அசந்தர்ப்பமாகக் காதலி கருவுற்று அதை கலைக்கவென மருத்துவமனைகள் ஏறி இறங்குவது பற்றி என்ன நினைக்கிறாய் காதலில்லா காமம் உனக்கு சாத்தியமா இப்படிப் பல கேள்விகளை கேட்க முடியுமென தெரிந்திருக்கிறாயா நீ

ஞாநி ஏன் இப்படி ஆனார்

ஞாநி மேல் எனக்கு மதிப்புண்டு. அதற்குப் பல காரணங்கள்.

பாதல் சார்க்காரின் நாடகத்தை மொழிபெயர்த்து 'பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான்' என்ற நாடகத்தை பரிக்‌ஷா குழுவின் மூலம் ஞாநி அரங்கேற்றினார். இதைப் படித்ததன் மூலமே இவரை முதலில் தெரிந்து கொண்டேன். தன்-சாதி மறுப்பாளர் என அறிய வந்ததும் மதிப்பு மேலும் கூடிற்று. 1990களிலிருந்து தொடர்ந்து இவரை வாசித்து வருகிறேன். இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு எதிராக இவர் வழக்கு தொடுத்து ஜெயித்தது, தீம்தரிகிட இதழ்களில் இவரது எழுத்துகள், ஒரு முறை தொலைக்காட்சி சீரியலின்போது மொட்டை போட்டுக் கொண்டு வந்தது... இப்படிப் பல...

இவரது சமீபத்திய குமுதம் கட்டுரை படித்தபோது, வெகுஜன ஊடகங்களுக்குச் செல்லும் பலர் ஏன் இப்படி ஆகிறார்கள் என வருத்தமேற்பட்டது. பெட்ரோல் / டீசல் விலை ஏற்றத்திற்கு மாற்றாக இவர் முன் வைக்கும் சில முக்கிய தீர்வுகள் :

1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை : ரூ 100. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் என்ஜின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.

2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸூக்கும் நல்லது.

3. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4. எந்த நகரிலும் எந்தச் சாலையுலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகள் கட்டக் கூடாது.

5. ஒரு காரில் ஒருவர் / இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.

எண்ணை நிறுவனங்கள் கூட லிட்டர் விலை நூறு ரூபாய்க்கு விற்க வேண்டுமெனச் சொல்லாதபோது இவர், அதைப் பரிந்துரைக்கிறார். என்ன காரணத்தினாலோ ஆட்டோக்களை இந்த அதிக விலையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்கிறார்.

தசாவதாரம் பட விமர்சனத்தை எடுத்து மீள் பிரசுரம் செய்யும் யாரும் இந்தக் கட்டுரையிலுள்ள ஆபத்தை உணர்ந்தார்களா எனத் தெரியவில்லை. ஏற்கனவே மாணவர்களை ஒடுக்கும் பெற்றோர்கள் இருக்கும் நாட்டில் இனி வேறொருவர் சைக்கிள் உதிரிப்பாகங்களின் விலை உயர்ந்து விட்டது, நடந்து செல்வதே உடலுக்கு அதிக வலுவூட்டக் கூடியது எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஜனநாயகம் குறித்து தங்கள் கவனத்தைக் குவிப்பவர்கள் இப்படியெல்லாம்கூட அராஜகமாக எழுத முடியுமா என ஆச்சரியமாக இருக்கிறது ! ஸ்பாட் ஃபைன் போடச் சொல்லும் இவரைப் போன்றவர்களிடம் ஆட்சியிருந்தால், சிறையில்கூட அடைக்கச் சொல்வார்கள்!

நல்லவேளை இவர் ஆட்சியிலில்லை :)

ஸ்மைலி போட்டிருக்கிறேனே ஒழிய, அறியப்பட்ட ஓரிரு அறிவுஜீவிகளும் இப்படி ஆகிப்போவது சோகமானதுதான்.

காமக் கதைகள் 45 (3)

'உன் வேகம் எனக்குப் பிடித்திருக்கிறது' என்றாள் நிருபமா. ஆனால் 'வேகம் மட்டுமே போதாது' என்றாள்.

அப்போது அவளது வீட்டிலிருந்தனர் இருவரும். அமைதியாய் இருந்தது வீடு. உறவினர்கள் யாருமில்லாத முன்னிரவு வேளை. ஏசியின் உறுமல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

இரவு ஆடையில் இருந்தவள் அவனை அணைத்தாள். தான் உள்ளாடை எதுவும் அணியாதிருப்பதை அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். ரத்தநாளங்கள் சூடேற அதீதன் பாய்ந்தான் அவள்மீது.

'மெல்ல, மெல்ல' என்றாள்...

45 வயதென்றதும் கிழவியைப் போல் இருப்பாள் என நினைத்துக் கொள்ளாதே; இதோ இந்தப் படங்களில் உள்ளவளைப் போல்தான் இருப்பாள் எனச் சில படங்களைக் கொடுத்தான். செந்நிற ஆடைகள் ஒவ்வொன்றாய் கழட்டுகிறாள் வடிவான பெண்ணொருத்தி. கடைசிச் சில படங்களில் நிர்வாணமாய் போஸ் கொடுக்கிறாள் - முழு நிர்வாணம் எனச் சொல்ல முடியாது; ஏனெனில் கால்களை மறைக்க ஹைஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தாள்!

இப்படங்களையும் கதைகளுடன் சேர்த்து பிரசுரிக்க முடியுமா என்றான்.

முடியாதென மறுத்தேன். காரணங்கள் :

1. இது போர்னோகிராஃபி கிடையாது. இலக்கியம். (உடனே போர்னோ இலக்கியம் ஆகாதா என லந்து பண்ண கிளம்பாதீர்கள்)
2. போர்னோ என்றாலும், படத்துடன் கூடிய கதைக்கும், வெறும் கதைக்கும் மதிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ப.கூடிய கதைப் புத்தகத்திற்கு பணம் அதிகம் கொடுத்தாக வேண்டும் !
3. அப்படங்கள் ஆண் நோக்குப் பார்வையில் மட்டுமே எடுக்கப் பட்டவை; ஆணின் உணர்வுகளைக் கிளறி விடும் பணியை மட்டுமே அவை செய்ய முடியும். என் கதைகள் இரு பாலருக்குமானது.

மூன்றாவது காரணத்தைச் சொல்லவில்லை. உடனே ஆண்-பெண் உடலுறவு கொள்ளும் படத்தை இணையத்தில் டவுன்லோட் செய்து கொடுத்து விடுவான் என்ற பயம்.

எதைப் பார்த்தாலும் பயமாயிருக்கிறது இப்போதெல்லாம்... காமமும் பயமூட்டக் கூடியதுதான் என்றான் அதீதன்.

காமக் கதைகள் 45 (2)

அது என்ன 69.? இது கதையல்ல நிலை என நிறைய பேர் சொல்லியிருந்தார்கள். காரணம் இருக்கிறது.

அதீதனும் நம் எல்லோரையும் போல் தான் 23 வயது வரை இருந்தான். கடுமையான பாலியல் வறட்சி. அதுவும் இந்த 18 வயதிலிருந்து படும் கஷ்டம் இருக்கிறதே.. மற்றதெல்லாம் வழிந்து போய் மூளையெங்கும் காமமே நிறைந்திருக்கும். நாளெல்லாம் காமச் சிந்தனைகளே. கண்ணில் படும் பெண்களை இழுத்துப் போட்டுப் படுக்கலாமா என இருக்கும்.

நடப்பில் இல்லாத போது நினைப்பில்.

அவனுக்கு மனதிற்குள் காமத்தை அசை போட பிடித்த நிலை 69.

முதல் காதலைப் போல் முதல் காமமும் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது. அப்போது அவனுக்கு வயது 23. அவள் வயது 45. ஒரு சாதாரண வேலை, நியமம் போல் வாழ்க்கை என இருந்தவனின் உலகத்தைப் பூரிப்பாக்கினாள் அவள். நிருபமா. அவளைக் காதலித்தது சரியாக 6 மாதம் 3 நாட்கள். அவள் தான் காம ஆசிரியை அவனுக்கு.

முதல் அனுபவத்தின் போது தான் புரிந்துகொண்டான், பார்ப்பது, படிப்பது, நினைப்பது வேறு, நிஜத்தில் வேறு என்று. அவனுக்கு 69ல் சுவையே இல்லை !

நிருபமா தொலைகாட்சி நடிகை. ஒரு நாள் தொலைபேசியில் அவள் நடிப்பை நார் நாயாய்க் கிழித்து விமர்சித்தான். அவள் நேரில் வரச் சொன்னாள். சென்றான். அவள் நடித்திருந்ததில் அவளுக்குப் பிடித்த கேசட் ஒன்றைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள். ஆகச் சிறந்ததாக இருந்தது அவள் நடிப்பு அதில். நான்கு பக்க விமர்சனக் கடிதம் எழுதினான் அவளுக்கு. பிறகு... பேசிப் பழகினார்கள். அவள் வெளியூர் சென்றிருந்தபோது தொலைபேசியிலும் பேசினார்கள். பற்றிக் கொண்டது நெருப்பு. புரிந்துகொண்டான், அவளைக் காதலிப்பதாய். ஆனால் முதலில் காதலைச் சொன்னது அவள்தான்.

பெரும்பாலான காதலிகள் அவர்களாகவே முதலில் காதலைத் தெரிவித்திருக்கிறார்கள். போலவே, அவர்களாகவே செக்ஸ் வைத்துக் கொள்ள ஏற்பாடும் செய்திருக்கிறார்கள் - அதிசயம்தான் என நினைத்துக் கொண்டேன். அதீதனுக்கு எங்காவது மச்சமிருக்குமோ?

திருநெல்வேலியில் உயர்தர விடுதியொன்றில் நிறைவேறியது அவனது காம இச்சைகள். தொட்டுத் தடவி சூடேற்றி, ஆரம்பித்தவுடனேயே எல்லாம் முடிந்து போனது. ஏமாற்றம். மறுபடி மறுபடி முயல, இயலாமல் போனது அவனது உடல்.

சென்னை திரும்பியதும் ஏமாற்றம் தாளாமல் ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டு சாகப் போனான்.

இப்படி என் முதல் அனுபவமும் உன் இரண்டாவது கதையும் தோல்வியில் முடிவது சோகமானதுதான் என்றான் அதீதன்.

காமக் கதைகள் 45

தலைப்பைப் பார்த்ததும் அத்தனை கதைகளையும் இந்த ஒரு பதிவிலேயே எழுதப் போகிறேன் என பயப்பட வேண்டாம். ஒரு கதைதான் இப்பதிவில். திங்கள் முதல் சனி வரை நாளொன்றுக்கு ஒரு கதை வீதம் 45 கதைகள் எழுதலாமென்றிருக்கிறேன். அது ஏன் ஞாயிறு விடுமுறை என்கிறீர்களா.. அலுவலக மடிக் கணிணியை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி பெற வேண்டும் டாபர்மேன் மேனேஜனிடம். அவன் அனுமதி அளிக்கக் கூடும், ஆனால் கூடவே வேறு ஏதாவது வேலையும் கொடுத்து விடுவான்.

விடுமுறை நாட்களில் அலுவலக வேலை செய்வதைப் போல் கொடுமையானது வேறெதுவும் கிடையாது என்பது என் கொள்கை.

இதில் வரும் அத்தனைக் கதைகளும் உண்மையில் நடந்த அனுபவக் கதைகள். உடனே எனக்கு நடந்ததா எனக் கேட்க வேண்டாம். இக்கதைகளின் நாயகனான அதீதனுக்கு நடந்தது. அப்படியே சந்தில் சிந்து பாடுவது போல என்னுடைய அனுபவங்கள் நான்கைந்தையும் சேர்த்து விடலாமென்ற எண்ணம். எழுத்தாளன் புத்தி !

அதீதன் நாளொன்றுக்கு முழு போத்தல் ரம்மை குடிப்பவன் - அதுவும் காட்டமான ஓல்ட் மாங்க் ரம்! நிறைய காதலிகள் உண்டு; மனசாட்சி உறுத்தாத காதல்கள். அவன் காதலித்த 54 பெண்களில் 45 பேருடன் உடலுறவு வைத்திருக்கிறான். இக்கதைத் தொடரை முடிப்பதற்குள் அவனுக்கு வேறு சில பெண்களுடனும் காதல் வரலாம். அதனால் கதையின் எண்ணிக்கை கூடும் வாய்ப்புண்டு.

ஒவ்வொரு காதலும் அதிகபட்சம் போனால் ஆறு மாதம்தான். ஒன்று அவர்கள் சண்டை போட்டு பிரிந்து விடுவார்கள், அல்லது இவன் ஏதாவது காரணம் காட்டி வெட்டி விட்டு விடுவான்.

அவன் எனக்கு வாய் மொழியாகக் கூறிய கதைகளே இவை.

காமக் கதைகள் என்றதும் சிலர் முகம் சுழிக்கலாம். காமத்தை, உடலை, வாழ்க்கையைக் கொண்டாடத் தெரியாத விளக்கெண்ணைகளைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் சில கலாச்சாரக் காவலர்கள் தடியெட்டுக்கலாம். அவர்களிடமிருந்து தப்பிப்பதுதான் எப்படி எனத் தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் உதவலாமே...

காமம் போதை; காமம் கிரியா ஊக்கி. காமத்தைக் கொண்டாடுவோம் !

சரி.. இத்துடன் முன்னுரை போதும் என நினைக்கிறேன். இனி, முதல் சிறுகதை :

69

வித்தியாசமான கேள்வி - பதில்கள்

வெகு ஜன வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து கேள்வி பதில் பகுதி வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, நம் வலைப் பதிவர்களும் கேள்வி பதில் எழுதத் துவங்கி விட்டனர். சில பதிவுகளைப் பார்த்தேன் - வெறும் மொக்கையாக இருக்கிறது.

மீறல் இதழுக்காகப் பிரமிள் கேள்வி பதில் வெளியாக இருந்து, சில காரணங்களால் அப்பகுதி வரவில்லை. சில கேள்வி பதில்களை உயிர் எழுத்து ஏப்ரல் 2008 இதழில் பிரசுரித்திரிக்கிறார்கள். உயிர் எழுத்திற்கு நன்றியுடன், சிலவற்றை இங்கு பதிகிறேன். இப்படிப் பட்ட கேள்வி பதில்கள் வெளியிட்டால் படிக்க - குறைந்த பட்சம் - சுவாரசியமாகவாவது இருக்கும். பதிவர்கள் முயல்வார்களா ?

ரவி உதயன் : நிலையான ஒரு பெயரை வைத்துக் கொள்வதில் என்ன சிரமம் உங்களுக்கு ?
பிரமிள் : ‘பெயர் குறிப்பிடுவதே விமர்சனம்' என்று நினைப்போர் தரும் சிரமம் தான்.

ரவி : உங்களுக்குப் புரிந்த உங்களது கவிதை ஒன்றைச் சொல்லவும் ?
பிரமிள் : உங்கள் பெயரே ரவியை உதைக்கிறது, உங்களுக்கு நான் சொல்லலாமா ?


சாரு நிவேதிதா : சே குவாராவின் குசு அதிக வாசனையா ? அல்லது விசிறி சாமியாரின் குசு அதிக வாசனையா ?
பிரமிள் : உங்கள் எழுத்துக்களில் அடிக்கும் வாசத்தை எது தோழர் பீட் பண்ணும்!

சாரு : உங்களின் விந்து சக்தியை குண்டலினியாக மாற்றிக் கவிதை எழுதுகிறீர்களாமே, இது உண்மையா ?
பிரமிள் : என் கவிதைகளுக்கு சக்தி புத்தி. உங்கள் பேத்தல்களுக்கு பீத்திமிர்.

சாரு : குஷ்புவின் பின்னழகு - சுகன்யாவின் பின்னழகு ஒப்பிடுக.
பிரமிள் : ஒப்பிடுவது எப்படி ? பின்னழகு ஒப்பனைக்கு ஒப்பனை மாறுபடும் பிடரி மயிர் ஓய்!

சாரு : ஜெனெ - ஜே கே, இந்த இருவரில் தங்களை அதிகம் திருப்திப்படுத்தியவர் எவர் ? யாரிடம் அதிகபட்சம் உச்ச இன்பம் கிடைத்தது?
பிரமிள் : ஜெகன் மோஹினிப் பிரமையில் ஏதோ பேத்தி விட்டீர்கள். என் உச்ச இன்பம் எல்லாம் உங்கள் வாய்களைக் கிழிக்க அடிக்கும் போது தான்.


விக்ரமாதித்யன் : பாலிமிக்ஸ் நிற்குமா ? படைப்பு நிற்குமா ?
பிரமிள் : மிகப்பெரிய உலக இலக்கியங்கள் யாவும் பாலிமிக்ஸை உள்ளடக்கியவைதாம். வெறும் பாலிமிஸ் என்று பார்த்தால், காளமேகம், பிற்கால ஓளவை, கம்பன், திருவள்ளுவர் ஆகியோரின் தனிப் பாடல்கள் பாலிமிக்ஸாகவே இன்றும் நிற்கின்றன. வீர்யம் உள்ளவனின் குசுவும் படைப்பாகும். வீர்யமற்றவனின் படைப்பும் குசுவாகும்.

விக்ர : தேவதேவன் தவிர்த்து உங்கள் ஸ்கேலுக்குள் அடைபடும் பிற கவிஞர்கள் யார் யார் மிஸ்டர்?
பிரமிள் : நிச்சயமாக நீர் இல்லை, கவியாண்மையற்ற லிஸ்டர்!

விக்ர : நவீன கவிதையின் அனாவசியமான இயல்பற்ற இறுக்கம், கட்டமைப்பு, செறிவு, லொட்டு லொசுக்கையெல்லாம் உடைத்தெறிகிற கவிதைகளே நம் தமிழுக்கு வளம் சேர்க்கும் என்ற எண்ணத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுதான் என் சிந்தை!
பிரமிள் : உமக்குண்டு ஆமாம் போட ஒரு மந்தை!

விக்ர : சில்க் ஸ்மிதாவின் அழகு, கண்ணிலா, உடம்பிலா?
பிரமிள் : நிச்சயமாக, நீர் காணும் அழகு உமது கண்ணில்தான் என்பது அழகியல் தத்துவம்.


இரா நடராஜன் : தருமு சிவராமு செத்துப்போய் விட்டானா?
பிரமிள் : ஆம். இருப்பது பிரமிள்.

இது போன்ற கேள்விகளுக்கு நம் சக பதிவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என யோசிப்பதும் சுவாரசியாமாகத் தான் இருக்கிறது !

இரு கவிதைகள்

கூட வரும்
நண்பன்
வேறொருவனைப் பார்த்துப்
பேசிக் கொண்டிருப்பான்
வேறொருவன் ஏதோ சொல்வான்
நண்பன் சிரிப்பான்
நீளும் பேச்சு
இவன் பார்த்துக் கொண்டிருக்க
எதிரே ஓடும் விளக்கொளி

***

தூங்கி எழுந்து
வரிகளுக்கு யோசிக்கையில்
தப்பிப் போகும் பறவை
பறவையைப் பிடிக்கும் வார்த்தை
நழுவிப் போகும்
தூங்கிப் போனால் நல்லது

விக்ரமாதித்யன் கவிதைகள்

என் மனிதிற்கு நெருக்கமான கவிஞர்களுள் ஒருவர் விக்ரமாதித்யன். இவரது முதல் தொகுதி 1982ல் அன்னம் நவ கவிதை வரிசையில் வெளியானது (ஆகாசம் நீல நிறம்). தொடர்ந்து பல தொகுப்புகள் (ஒரு முழுத் தொகுதி உட்பட) வந்து கொண்டிருக்கின்றன.

வண்ண நிலவன், வண்ணதாசன், கலாப்ரியா காலகட்டத்தைச் சேர்ந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன். 1960களின் இறுதியிலிருந்து எழுதி வருகிறார். 'சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல்' என்பது இவரது கவிதைகளுக்குச் சாலப் பொருந்தும்.

போய்ச் சேர்ந்தான் புதுமைப் பித்தன்
வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்

என எழுதும் துணிவு இவருக்குத் தான் உண்டு !

இவரது தனிச்சிறப்பு குறுங்கவிதைகள். இவரின் பிரபலாமான சில குறுங்கவிதைகள் :

அண்ணி மேல் கொண்ட ஆசை
கொழுந்தனைக் குழப்ப
அந்நிய இடமாகும் வீடு
*
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
*
சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்
*
கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்
*
எஜமானனைவிட
ஊழியனுக்கு நல்லது
எஜமான விசுவாசம்
*
அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை
*
சாக்லெட்டே சாக்லெட்டே
குழந்தைகளுக்குப் பிரியமான சாக்லெட்டே
சிகரெட்டே சிகரெட்டே
நேரம்கெட்டநேரத்தில் தீர்ந்து போகும் சிகரெட்டே
*
கண்ணாடிப் பாத்திரங்களைக்
கையாள்கிற கஷ்டம்
*

கவிதை / கவிஞர்கள் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுகிறார். அதிலிருந்து சில :

கட்டில் செய்யலாம்
கப்பல் செய்யலாம்
கணக்கு செய்யலாம்
கவிதை செய்ய முடியுமா
*
நடுவழியே நல்லது
கலைஞர்கள் துருவசஞ்சாரிகள்
*
கலைஞர்களாவதற்கு
இல்லை குமாஸ்தாக்கள்
*
விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்
*

இனி, கொஞ்சம் பெரிய கவிதைகள். நேரடித் தன்மை வாய்ந்த கவிதைகள் இவருடையவை. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் :

கூண்டுப் புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்

மிகச் சொற்ப வார்த்தைகளில் ஒரு சித்திரத்தைத் தீட்டிக் காட்டி விடக் கூடிவை இவரது கவிதைகள். வேலை தேடி மனமின்றி வெளியூர் செல்லும் ஒரு நடுத்தர வயது மனிதனின் கவிதை. :

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள

நிறைய சுய புலம்பல் கவிதைகளும் இருக்கும். உதாரணத்திற்கு :

ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ
*

சில கதைக் கவிதைகளும் உண்டு :

அத்தனைபேர் இருந்த பேருந்தில்
அது நிகழ்ந்தது
அப்பாவைவிடவும் வயது கூட
அந்தப் பெரியவருக்கு
தளர்ந்துபோன உடம்பு
குச்சிகுச்சியான கையும் காலும்
எப்படித்தால் அந்தப் பாய்க்கட்டுகளை ஒத்தையில் சுமந்து வந்து
ஓட்டுநர் பக்கமாக ஏற்றி இறக்கி வைத்தாரோ
அந்த ஊரின் கடைசி நிறுத்தத்தில்
பயணச் சீட்டு கொடுக்கும் நேரத்தில்
வெடித்துக் கிளம்பிஅது தகராறு
சுமைக்குக் கட்டணமாக முழுச்சீட்டுப் போட
முஸ்லீம் முதியவர் அரைச்சீட்டுத்தான் என மறுதலிக்க
வழமையைச் சொல்லி வாதித்த
வயசாளியின் பக்கம் பாதிக்கூட்டம்
நடத்துநரின் நியாயத்துக்கு
லாலி பாடியது மீதிக் கூட்ட்ம்
இருக்கிற காசுக்குள்
வருகிற ஊரில்
இறக்கி விட்டார் நடத்துநர்
முழுக்கட்டணம்தான் பாய்ச்சுமைக்கு என்று
முதலிலேயே சொல்லியிருந்தாராம் அவர்
பாவப்பட்ட கிழவர் சபித்தார்
நொந்துகொண்டு அழுதார்
ஆதரவாக ஏந்திவைத்துக் கொள்ளும் உயிர்கள்
அனுப்பி வைத்திருக்கும் நிச்சயமாக ஊருக்கு
என்றபோதும் அன்றையதினம்
அவருக்கு உதவாமலிருந்தது
உறுத்துகிறது இந்த நிமிஷமும்
நண்பரிடம் வாங்கிவந்த யாசகக் காசில்
பத்து ரூபாய்க்கும் மேல் பையிலிருந்தது
வேலையற்ற
வீட்டிலிருந்தது நாலுநாளில் திரும்பிவந்து அலையவேண்டிய
வெங்கொடுமை நிலைக் குழப்பத்தில் சிக்கலில்
வறண்டு போயிற்றோ என் மன ஊற்று
விளங்கவில்லை இன்னமும்
எப்படிக் காய்ந்தது என் மனஈரம்
எவ்விதம் உலர்ந்தது என் பச்சையம்
எனக்கு நானே அந்நியமானதுதான் என் சோகம்
ஆழ்ந்து யோசித்தால்
அவர் ஸ்திதியல்ல பிரச்சனை
என் ஸ்திதிதான் எனக்குப் பிரச்சனை
*

இனி, வேறு சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு :

நான் யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை
வசந்தம் தவறிய போதும்
வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கையில்
வன்கொலைச் சாவுக்கு இடமில்லை
வெயில் காயும்
மழை புரட்டிப் போடும்
அல்பப்புழுக்களும் வாழ்ந்து
கொண்டிருக்காமல் இல்லை
நீ கலகக்காரன் இல்லை?
நல்லது நண்ப
நானும் கூடத்தான்
எனது இருபதுகளில்
*

நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு
***

விதம் விதமாய் நவ நவமாய் எழுதியவர் விக்ரமாதித்யன். இன்னும் பல கவிதைகள் இருக்கினறன. எழுதி மாளாது.!