வித்தியாசமான கேள்வி - பதில்கள்

வெகு ஜன வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து கேள்வி பதில் பகுதி வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, நம் வலைப் பதிவர்களும் கேள்வி பதில் எழுதத் துவங்கி விட்டனர். சில பதிவுகளைப் பார்த்தேன் - வெறும் மொக்கையாக இருக்கிறது.

மீறல் இதழுக்காகப் பிரமிள் கேள்வி பதில் வெளியாக இருந்து, சில காரணங்களால் அப்பகுதி வரவில்லை. சில கேள்வி பதில்களை உயிர் எழுத்து ஏப்ரல் 2008 இதழில் பிரசுரித்திரிக்கிறார்கள். உயிர் எழுத்திற்கு நன்றியுடன், சிலவற்றை இங்கு பதிகிறேன். இப்படிப் பட்ட கேள்வி பதில்கள் வெளியிட்டால் படிக்க - குறைந்த பட்சம் - சுவாரசியமாகவாவது இருக்கும். பதிவர்கள் முயல்வார்களா ?

ரவி உதயன் : நிலையான ஒரு பெயரை வைத்துக் கொள்வதில் என்ன சிரமம் உங்களுக்கு ?
பிரமிள் : ‘பெயர் குறிப்பிடுவதே விமர்சனம்' என்று நினைப்போர் தரும் சிரமம் தான்.

ரவி : உங்களுக்குப் புரிந்த உங்களது கவிதை ஒன்றைச் சொல்லவும் ?
பிரமிள் : உங்கள் பெயரே ரவியை உதைக்கிறது, உங்களுக்கு நான் சொல்லலாமா ?


சாரு நிவேதிதா : சே குவாராவின் குசு அதிக வாசனையா ? அல்லது விசிறி சாமியாரின் குசு அதிக வாசனையா ?
பிரமிள் : உங்கள் எழுத்துக்களில் அடிக்கும் வாசத்தை எது தோழர் பீட் பண்ணும்!

சாரு : உங்களின் விந்து சக்தியை குண்டலினியாக மாற்றிக் கவிதை எழுதுகிறீர்களாமே, இது உண்மையா ?
பிரமிள் : என் கவிதைகளுக்கு சக்தி புத்தி. உங்கள் பேத்தல்களுக்கு பீத்திமிர்.

சாரு : குஷ்புவின் பின்னழகு - சுகன்யாவின் பின்னழகு ஒப்பிடுக.
பிரமிள் : ஒப்பிடுவது எப்படி ? பின்னழகு ஒப்பனைக்கு ஒப்பனை மாறுபடும் பிடரி மயிர் ஓய்!

சாரு : ஜெனெ - ஜே கே, இந்த இருவரில் தங்களை அதிகம் திருப்திப்படுத்தியவர் எவர் ? யாரிடம் அதிகபட்சம் உச்ச இன்பம் கிடைத்தது?
பிரமிள் : ஜெகன் மோஹினிப் பிரமையில் ஏதோ பேத்தி விட்டீர்கள். என் உச்ச இன்பம் எல்லாம் உங்கள் வாய்களைக் கிழிக்க அடிக்கும் போது தான்.


விக்ரமாதித்யன் : பாலிமிக்ஸ் நிற்குமா ? படைப்பு நிற்குமா ?
பிரமிள் : மிகப்பெரிய உலக இலக்கியங்கள் யாவும் பாலிமிக்ஸை உள்ளடக்கியவைதாம். வெறும் பாலிமிஸ் என்று பார்த்தால், காளமேகம், பிற்கால ஓளவை, கம்பன், திருவள்ளுவர் ஆகியோரின் தனிப் பாடல்கள் பாலிமிக்ஸாகவே இன்றும் நிற்கின்றன. வீர்யம் உள்ளவனின் குசுவும் படைப்பாகும். வீர்யமற்றவனின் படைப்பும் குசுவாகும்.

விக்ர : தேவதேவன் தவிர்த்து உங்கள் ஸ்கேலுக்குள் அடைபடும் பிற கவிஞர்கள் யார் யார் மிஸ்டர்?
பிரமிள் : நிச்சயமாக நீர் இல்லை, கவியாண்மையற்ற லிஸ்டர்!

விக்ர : நவீன கவிதையின் அனாவசியமான இயல்பற்ற இறுக்கம், கட்டமைப்பு, செறிவு, லொட்டு லொசுக்கையெல்லாம் உடைத்தெறிகிற கவிதைகளே நம் தமிழுக்கு வளம் சேர்க்கும் என்ற எண்ணத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுதான் என் சிந்தை!
பிரமிள் : உமக்குண்டு ஆமாம் போட ஒரு மந்தை!

விக்ர : சில்க் ஸ்மிதாவின் அழகு, கண்ணிலா, உடம்பிலா?
பிரமிள் : நிச்சயமாக, நீர் காணும் அழகு உமது கண்ணில்தான் என்பது அழகியல் தத்துவம்.


இரா நடராஜன் : தருமு சிவராமு செத்துப்போய் விட்டானா?
பிரமிள் : ஆம். இருப்பது பிரமிள்.

இது போன்ற கேள்விகளுக்கு நம் சக பதிவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என யோசிப்பதும் சுவாரசியாமாகத் தான் இருக்கிறது !

25 comments:

லக்கிலுக் said...

அதகளமா இருக்கே? :-)

குறிப்பாக சாருவின் கேள்விகளுக்கு அளித்த பதில் லஷ்மி வெடி!!!

thaiprabu said...

charu oru waste creator

Athisha said...

பிரமிள் யாருங்க சார் ,

சப்ப கேள்விக்கெல்லாம் பிரமாதமா பதில் சொல்ராறே

சூப்பர்ங்க

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதிஷா, பிரமிள் தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களுள் ஒருவர்.

Athisha said...

//
பிரமிள் தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களுள் ஒருவர்.
//


சார் இன்னும் கூட கொஞ்சம் விவரமாக கூறினால் உதவியாக இருக்கும் .

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதிஷா, பிரமிள் அதிகமும் சிறுபத்திரிகைகளில் இயங்கியவர் - எழுத்து என்ற பத்திரிகை மூலமாக அறிமுகமானார். சிறுகதைகள், விமர்சனங்கள் என இயங்கியிருந்தாலும் அவரது முக்கிய பங்களிப்பு கவிதைகளில்தான்.

இலங்கையில் 1939ல் பிறந்தார். சென்னையில் 1997ல் மறைந்தார். பிரமிளுக்கு நியூமராலஜி போன்ற விஷயங்களிலும் நல்ல தேர்ச்சியுண்டு. புனைவுகளின் முழுத் தொகுதி வெளியாகியிருக்கிறது.

எனக்கு மிகப் பிடித்த கவிஞர்களுள் ஒருவர். அவரைப் பற்றிய அறிமுகமும் சில கவிதைகளையும் விரைவில் பதிவிடுகிறேன்.

நன்றி.

Athisha said...

பிரமிள் அவர்களின் அறிமுகத்திற்கு நன்றி சார் ,

அவரது கவிதைகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்

யாத்ரீகன் said...

"காற்றில் எழுதிச்செல்லும் ஒரு பறவையின் சிறகு .." பிரமிளின் சிறந்த கற்பனைகளில் ஒன்று ..

anujanya said...

சுந்தர்,

பிரமிள் பற்றிய அறிமுகம் ஜோர். விரைவில் அவரது கவிதையை பதிவு செய்யுங்கள். நன்றி.

மு. சுந்தரமூர்த்தி said...

ஜ்யோவ்ராம்,
பிரமிள் மறைந்தது சென்னையில் அல்ல. வேலூர் மாவட்டத்தில் உள்ள கரடிகுடி என்ற குக்கிராமத்தில் (இதற்கேன் இவ்வளவு அலட்டல் என்று நினைக்கிறீர்களா? வேலூர்-கரடிகுடி பேருந்து எங்க ஊர் வழியாகத் தான் போகுமாக்கும்).

பிரமிளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு, என் பதிவில் சில இடுகைகள்.

பிரமிள் - மேலும் சில குறிப்புகள்

பிரமிள் கவிதைகள் - 1


பிரமிள் கவிதைகள் - 2

பிரமிள் கவிதைகள் - 3 - குறுங்காவியம்

ரவி ஸ்ரீநிவாசின் பிரமீள்-கடிதங்கள்-நினைவுகள்

பெயரிலியும் பிரமிள் கவிதைகளை பதிவிட்டிருக்கிறார். அவசரமாகத் தேடியதில் ஒரு இடுகை தான் தட்டுப்பட்டது.
அள்ளல் - 2

முரளிகண்ணன் said...

உண்மையிலேயே வித்தியாசமான அதிரடி பதில்கள்.
\\அவரைப் பற்றிய அறிமுகமும் சில கவிதைகளையும் விரைவில் பதிவிடுகிறேன்.\\
விரைவில் செய்யுங்கள்

கே.என்.சிவராமன் said...

சுந்தர், என்னை முந்திக் கொண்டீர்கள்!

‘உயிர் எழுத்து' இதழில் பிரமிள் பதில்களை கண்டதுமே அதை மீள் பிரசுரம் செய்ய வேண்டும் என நினைத்தேன். நினைத்து கொண்டே இருந்தேன்... நீங்கள் செய்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

ஆனால், ஒரு சின்ன தகவல் பிழை இருக்கிறது.

‘சுப மங்களா' இதழின் நேர்காணலுக்காக கோமல் சாமிநாதன், பிரமிளை தொடர்பு கொண்டார். ‘அறிவியல் மாணவர்கள் தவக்களையை படம் பிடித்து ஒட்டுவது போல் எழுத்தாளர்களின் படங்களை நீங்கள் பிரசுரிக்கிறீர்கள். அனைத்து கலைஞர்களின் உள்முகம் அந்தப் படங்களில் வெளிப்படுவதில்லை. மாறாக போஸ் கொடுக்கிறார்கள். உங்கள் இதழுடன் எனக்கு உடன்பாடில்லை. நேர்காணல் தர முடியாது' என்று கூறிவிட்டார்.

அதனை தொடர்ந்து அப்போது முழுக்க முழுக்க பிரமிள் எழுதிவந்த ‘மீறல்' சிற்றிதழில் அவரது நேர்காணலை பிரசுரிப்பது என முடிவாயிற்று. அதன் தொடர்ச்சியாக வாசகர்களிடமும், கலைஞர்களிடமும், எழுத்தாளர்களிடமும் கேள்விகள் வரவேற்கப்பட்டன. பிரமிளை எதிர்த்தவர்கள், ஆதரித்தவர்கள் என சகலரும் கேள்வி கேட்டனர். கால. சுப்பிரமணியம், அந்த கேள்விகளை தொகுத்து பிரமிளிடம் நேர்காணல் செய்தார். அந்த செவ்வி, ‘மீறல்' சிறப்பிதழில் வெளியாயிற்று. வெளிவந்த சூட்டோடு விற்றும் தீர்ந்தது.

பலருக்கு அந்த இதழ் கிடைக்கவில்லை. எனவே 'மீறலில்' வந்த பிரமிளின் நேர்காணலை மட்டுமே ஒரு தனி இதழாக மீண்டும் கொண்டு வந்தார்கள். நீங்கள் குறிப்பிட்டது போல் அது வெளிவராமலில்லை. இடப் பற்றாக்குறை காரணமாகவும், பக்க நெருக்கடி காரணமாகவும் அந்த ‘மீறல்' இதழில் வெளிவராத பிரமிளின் பதில்களில் ஒரு பகுதியையே இப்போது ‘உயிர் எழுத்து' வெளியிட்டிருக்கிறது. பிரமிளின் முழு நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை கொண்டு வரும் முயற்சியில் இப்போது கால. சுப்பிரமணியம் ஈடுபட்டிருக்கிறார்.

பிறகு ஒரு வார்த்தை... சாருவின் கேள்விகளை இப்போது தனியாக பார்க்கும்போது வேறு அர்த்தங்கள் தொனிக்கக் கூடும். ஆனால், இந்த சம்பவங்கள் நடந்த காலத்தில் சாரு - பிரேம்: ரமேஷ் - எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள். ‘க்ரணம்' இதழில் வந்த பிரேம் - ரமேஷ் கவிதைகள், தனது கவிதைகளின் அப்பட்டமான காப்பி என பிரமிள் சொன்னதும், அதற்கு சாரு - பிரேம்: ரமேஷ் எதிர்வினை புரிந்ததும் இந்த கேள்விகளில் மறைந்திருக்கிறது. அப்போது எழுத்தாளர்களின் புனித பிம்பங்களையும், எழுத்தின் புனிதத்தையும் உடைப்பதற்காக வெளிவந்த ‘கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும்' என்ற சிறுகதை தொகுப்பு வெளிவந்த காலகட்டமும் இதுவேதான். இந்த இடத்தில் எழுத்தின் புனிதத்தை பற்றியும், ‘உள் தரிசனம்' குறித்தும் அதிகளவில் பிரமிள் எழுதிவந்தார் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

எனவே சாருவின் வினாக்களுக்கு பின்னால் அந்த காலகட்டத்து எழுத்து, மொழி தொடர்பான விமர்சனங்கள் இருக்கின்றன. இதையும் மனதில் வைத்துக் கொள்வது பன்முக பார்வைக்கு வழிவகுக்கும்.

நல்லதொரு மீள்பிரசுரத்துக்கு நன்றி சுந்தர்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மு. சுந்தர மூர்த்தி.

பிறந்தது இலங்கையில், இறந்தது இந்தியாவில் என எழுத நினைத்து, சென்னை என எழுதி விட்டேன்.

தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.

நீங்கள் பிரமிள் கவிதைகள் குறித்து எழுதியிருப்பது முதலில் தெரியாது. இப்போது வாசிக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, பைத்தியக்காரன்.

மீறல் பற்றி என் நினைவிலிருந்தே எழுதினேன். அவரது பேட்டி வெளியானது நினைவிருக்கிறது; ஆனால் அது மற்றவர்களின் கேள்விகளைத் தொகுத்து கால சுப்ரமணியம் கேட்டது தானா என்பது நினைவிலில்லை. தகவலைச் சரி பார்க்கிறேன்.

கர்நாடக முரசு / கிரணம் / மீறல் பேட்டி வெளியானது மூன்றும் ஒரே காலகட்டத்தில் நடக்கவில்லை என நினைக்கிறேன். இத்தகவலையும் சரி பார்க்கிறேன்.

'தர்சனம், உள்ளொளி' விவகாரம் நினைவிருக்கிறது. தமிழவன் கூட எலக்டிரிசிட்டி போர்டிற்குத்தான் இதெல்லாம் தேவை என நக்கலடித்ததும் ஞாபகமிருக்கிறது (படைப்பும் படைப்பாளியும் தொகுப்பு தானே....).

இதெல்லாம் ஒரு புறம் இருக்க... கர்னாடக முரசு தொகுப்பில் உள்ள நாகார்ஜூனன் கதையை மீள் பிரசுரம் செய்வோமா.. :))

கே.என்.சிவராமன் said...

சுந்தர்,

//கர்நாடக முரசு / கிரணம் / மீறல் பேட்டி வெளியானது மூன்றும் ஒரே காலகட்டத்தில் நடக்கவில்லை என நினைக்கிறேன். //

ஒரே காலகட்டமல்ல... ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்புடையது...

அப்புறம், இந்த ‘கர்நாடக முரசு...' சிறுகதை தொகுப்பு தொடர்பாக ஒரு விஷயம்...

அந்த தொகுப்பில், நாகார்ஜுனன், சாருநிவேதிதா, எம். டி. முத்துகுமாரசாமி, ஜனகப்ரியா ஆகிய நால்வரின் சிறுகதைகள் அடங்கியிருக்கிறது...

உண்மையில் அந்த தொகுப்பை கொண்டு வரும்போது நால்வரும் இருந்த மனநிலை, புரிதல், அப்போதைய அந்த தொகுப்புக்கான தேவை, விமர்சன - உரையாடல் வேறு. அந்த தொகுப்பு பிரதி, புனிதம், எழுத்தாளரே கடவுள் என்பதான போக்குக்கான எதிர்வினை.

பிரதி, ஆசிரியரின் மரணம், மொழி விளையாட்டு, அமைப்பின் அதிகாரம், கண்காணிப்பின் அரசியல்... என பின்நவீனத்துவம், பின் அமைப்பியல்வாதம் சார்ந்த அறிமுகத்தின் ஒரு சிறு துணுக்கே அந்த தொகுப்பு. அச்சில் இருக்கும் அந்த தொகுப்பின் வாக்கியங்களுக்கு இடையிலான உரையாடலை, சில, பல கோட்பாட்டு அறிமுகத்துக்கு பிறகே புரிந்து கொள்ள முடியும்...

இப்போது அந்த தொகுப்பை முதல் வாசிப்பில் வாசிக்கும் யாரும் அதை ஃபோர்னோகிராபி வகைக்குள் அடக்கி விடுவார்கள். அந்த தொகுப்புக்கான தேவையை முன்னிறுத்தியே அது குறித்த உரையாடல் இருக்கிறது. அவசரப்பட்டு மீள்பிரசுரம் (நல்லவேளை இறுதியில் ஸ்மைலி உள்ளது!) செய்யாதீர்கள். அது கோட்பாடு சார்ந்த உரையாடலின் ஒரு பகுதி... இதை நீங்களும் அறிவீர்கள்...


தோழமையுடன்
பைத்தியக்காரன்

லக்கிலுக் said...

பைத்தியக்காரன்!

//இப்போது அந்த தொகுப்பை முதல் வாசிப்பில் வாசிக்கும் யாரும் அதை ஃபோர்னோகிராபி வகைக்குள் அடக்கி விடுவார்கள்.//

அந்த தொகுப்பு எங்கே கிடைக்கும்? அவசியம் வாசிக்க விரும்புகிறேன்!

கிரி said...

//சாரு நிவேதிதா : சே குவாராவின் குசு அதிக வாசனையா ? அல்லது விசிறி சாமியாரின் குசு அதிக வாசனையா ?
பிரமிள் : உங்கள் எழுத்துக்களில் அடிக்கும் வாசத்தை எது தோழர் பீட் பண்ணும்!

சாரு : உங்களின் விந்து சக்தியை குண்டலினியாக மாற்றிக் கவிதை எழுதுகிறீர்களாமே, இது உண்மையா ?
பிரமிள் : என் கவிதைகளுக்கு சக்தி புத்தி. உங்கள் பேத்தல்களுக்கு பீத்திமிர்.

சாரு : குஷ்புவின் பின்னழகு - சுகன்யாவின் பின்னழகு ஒப்பிடுக.
பிரமிள் : ஒப்பிடுவது எப்படி ? பின்னழகு ஒப்பனைக்கு ஒப்பனை மாறுபடும் பிடரி மயிர் ஓய்!

சாரு : ஜெனெ - ஜே கே, இந்த இருவரில் தங்களை அதிகம் திருப்திப்படுத்தியவர் எவர் ? யாரிடம் அதிகபட்சம் உச்ச இன்பம் கிடைத்தது?
பிரமிள் : ஜெகன் மோஹினிப் பிரமையில் ஏதோ பேத்தி விட்டீர்கள். என் உச்ச இன்பம் எல்லாம் உங்கள் வாய்களைக் கிழிக்க அடிக்கும் போது தான்//

ஏங்க இதெல்லாம் உண்மையான கேள்விகளா இல்லை கற்பனை கேள்விகளா???

நாகார்ஜுனன் said...

சுந்தர், பைத்தியக்காரன்

பதிவுகளை, பின்னூட்டங்களை வாசித்தேன். தீவிரமிக்க இலக்கிய விவாதங்களின் பின்னணியில் எழுந்தது இந்தக் கேள்வி-பதில் என்பதே உண்மை.

கிரணம் விவாதம் 1989-90 என நினைக்கிறேன். கர்நாடக முரசு.. தொகுப்பு நாங்கள் கொண்டுவந்தது 1990-ஆம் ஆண்டில். அதில் இங்கு குறிப்பிடப்படும் சிறுகதைகள் தவிர, மிஷெல் ஃபூக்கோ தம்முடனே நடத்திக்கொண்ட உரையாடலின் என் மொழியாக்கம் உண்டு.

சிறுகதை, உரையாடல் இரண்டையும் சேர்த்தே வாசிக்க வேண்டும் என்பதை, ப்ரேம், ரமேஷ், சாரு, நான், எம்டிஎம், ஜனகப்ரியா எல்லோரும் இன்றும் ஏற்போம் என்றுதான் நினைக்கிறேன்.

தவிர, சுபமங்களா போன்ற இடைநிலை இதழ்கள் ஒரு எல்லைவரைதான் செல்ல முடியும் என்பதையும் ஏற்போம் என நினைக்கிறேன்.

நாகார்ஜுனன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பைத்தியக்காரன், மீறல் பேட்டி தொடர்பாக.. தகவலைச் சரி பார்த்தேன். நீங்கள் சொல்லியிருப்பதே சரி.

தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.

Anonymous said...

ஸ்ஸ்ஸ் அப்பாஆ முடியல....

manjoorraja said...

உங்களின் இந்த பதிவிற்கும் பின்னூட்டங்கள் மூலம் மேலும் விவரங்களை அளித்த நண்பர்களுக்கும் நன்றி.

Anonymous said...

கவியாண்மையற்ற லிஸ்டர்

What has poetry or creativity to do with masculinity.

பரிசல்காரன் said...

பிரமிளின் ஆளுமை அவரது எல்லா பதில்களிலும் தெறித்தோடுகிறது! அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நாகார்ஜூனன்.

சிறுகதைகளையும் உரையாடலையும் சேர்த்தே வாசிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

லக்கி லுக், தாய்பிரபு, அதிஷா, யாத்ரீகன், அனுஜன்யா, மு.சுந்தரமூர்த்தி, முரளி கண்ணன், கிரி, மஞ்சூர் ராசா, பைத்தியக்காரன், அனானி & பரிசல்காரன்... பின்னூட்டங்களுக்கு நன்றி.