நகுலன்

புரியாத புனைவெழுதி எழுதி
நாசமாய்ப் போனான் நகுலன்
அவன் வாழ்ந்த
சிதிலமடைந்த வீட்டில்
இப்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது
அவனது நாற்றமெடுக்கும் உடலும்
வெள்ளை-மஞ்சள் நிறப் பூனையும்
கேசவனும் மாதவனும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்
ஒரு வாய் பிஜாய்ஸ் பிராந்திக்கு
வந்த வழி கண்ட காக்ஷி
நகுலன் எழுத்துகளில்
சிதறுண்டு கொண்டிருக்கிறான் நவீனன்

9 comments:

சுகுணாதிவாகர் said...

நல்ல கவிதை.

Ken said...

"அவன் வாழ்ந்த " இந்த வார்த்தை இல்லாமலே கவிதை அருமையா இருக்கும்.


நகுலனுக்கு நல்ல நினைவுக்கூறல் கவிதை

rapp said...

என்னமோ போங்க, எனக்கொண்ணும் விளங்கல

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சுகுணா திவாகர்.

நன்றி, கென். இப்போ எனக்கும் அப்படித்தான் தோணுது :)

நன்றி, ராப்.

மங்களூர் சிவா said...

:((

manjoorraja said...

நகுலனின் நினைவிலான கவிதை நன்றாகவே இருக்கிறது.

கென் சொல்வதுபோல 'அவன் வாழ்ந்த" என்ற வார்த்தைகள் இல்லாமலும் நல்லா இருக்கு.

Athisha said...

கவிதை மிக அருமை..தோழரே

சென்ஷி said...

//நகுலன் எழுத்துகளில்
சிதறுண்டு கொண்டிருக்கிறான் நவீனன்//

எழுத்துக்களில் வாழ்வதை ரசிப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மங்களூர் சிவா. ஏன் சோகம்?

நன்றி, மஞ்சூர் ராசா.

நன்றி, அதிஷா.

நன்றி, சென்ஷி.