காமக் கதைகள் 45 (4)

திறந்த வான்நோக்கிய கூட்ஸ் ரயில் பெட்டியில் புணர்வதற்கும் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டியில் நடக்கும் சம்போகத்திற்குமான வித்தியாசத்தை நீ உணர்வாயா பெண்களும் ஆண்களும் கூட்டமாக இடுப்பை முன் பின்னாக அசைத்து ஆடுவது உன் வரவேற்பரையில் நடக்கிறதா இல்லையா அதை ரசிக்கும் நீ அப்பெண்கள் ஆடை மாற்ற படும் சிரமங்களைப் பற்றி என்றாவது யோசித்ததுண்டா சி மணியின் பச்சையம் படித்திருக்கிறாயா ரமேஷ் பிரேமின் கவிதைகளுக்கும் விக்ரமாதித்யன் கவிதைகளுக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறாயா என்றாவது லைவ் ஷோவில் வெட்கத்தைத் துறந்து கலந்து கொள்ள முடிந்திருக்கிறதா பாலியல் கதைகளுக்கும் பாலியல் துணுக்குகளுக்குமுள்ள ஒன்பது வித்தியாசங்களை உன்னால் பட்டியல் போட முடியுமா

நீலப் படங்களில் நிர்வானப் பெண்கள் ஏன் காலணிகளோடு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா ஏன் அப்படங்களில் ஒரு இயந்திரத்தைப் போலவே ஆண்கள் இயங்குகிறார்கள் என என்றாவது யோசித்ததுண்டா காமம் சுயவாதையும் கூட என்பதை ஒப்புக் கொள்வாயா முலை தொங்கிய விலைமகளிர் புணர்ச்சியை எப்படி எதிர்கொள்வார்கள் உன்னைப் போல் மட்டமான சரக்கைக் குடித்துவிட்டு மனைவியைக் கலவிக்குக் கூப்பிட்டு அடிப்பவர்களைப் பற்றி நீ கேள்விப் பட்டதில்லையா அழகான பெண் உடனிருக்க உச்ச போதையில் குறிசுருங்கிப் படுத்து உறங்கியிருக்கிறாயா

மனைவிகளையும் காதலிகளையும் மாற்றிக் கொள்ளும் பார்ட்டி கொண்டாட்டங்களைப் பற்றி நண்பன் விவரிக்கையில் முகம் சுளிக்கவில்லையா நீ ஆண்களுக்கிடையிலான ஓரினப் புணர்ச்சி பற்றிய உன் கருத்துகளை எங்காவது பதிந்திருக்கிறாயா ஆண் ஓரினப் புணர்ச்சிக் கதைகளையோ அல்லது படங்களையோ விரும்பிப் பார்த்திருக்கிறாயா நீ சிகப்புத் தோலே உன்னை வசீகரித்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வாயா

ஏன் இந்தக் கதைத் தொடரில் எல்லா எண்களின் கூட்டுத் தொகையும் ஒன்பதாக வருகிறது என்பதை நீ விளக்க முடியுமா உனக்கு எண் கணிதம் ஜாதகம் தெரியுமா

குளங்களில் பெண்கள் குளிப்பதை வெறித்துப் பார்க்காமல் இருக்க முடிந்திருக்கிறதா உன்னால் டாஸ்மாக் கடைகளுக்கு ஏன் பெண்கள் குடிக்க வருவதில்லை என உணர்ந்திருக்கிறாயா தெருவோர குடும்பங்கள் எந்நேரத்தில் எப்படி உடலுறவு கொள்வார்கள் என்பதற்காய் வருத்தப்பட்டதுண்டா தாய்லாந்தில் இருக்கும் பாலியல் தொழிலாளியுடன் செல்வதைப் பெருமையாகக் கருதும் நீ சென்னை மெரினாவில் உன்கை பிடித்திழுக்கும் பெண்களை உதறித்தள்ளுவது ஏன்

காதலியுடன் படுக்கச் சென்ற பின் ஆணுறை இல்லாததைக் கவனித்திருக்கிறாயா அசந்தர்ப்பமாகக் காதலி கருவுற்று அதை கலைக்கவென மருத்துவமனைகள் ஏறி இறங்குவது பற்றி என்ன நினைக்கிறாய் காதலில்லா காமம் உனக்கு சாத்தியமா இப்படிப் பல கேள்விகளை கேட்க முடியுமென தெரிந்திருக்கிறாயா நீ

36 comments:

வசந்த் said...

சுந்தர்,

படிப்பதற்கு உண்மையாகவே நல்லாத்தான் இருக்கு. என்னை கேள்வி கேட்பது போலவே இருக்கு.

ஆனாலும் ஏமற்றிவிட்டீர்கள். :-))


நன்றி
வசந்த்

Sridhar V said...

//இப்படிப் பல கேள்விகளை கேட்க முடியுமென தெரிந்திருக்கிறாயா//

பலசமயம் பதில்களிருந்துதான் கேள்விகள் புறப்படுகின்றன.

இந்த கதை நன்றாக இருக்கிறது.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

சுந்தர்,

கேள்விக்குறிகள் இல்லாதிருப்பதன் காரணம் என்ன? அவை இல்லாமலே கேள்விகளாகத்தான் படித்தேன். இரண்டாம் முறைதான் கவனித்தேன்.

ரவி said...

excuse me ?

may i come in ??

what is happening here sundar sir ?????

Anonymous said...

I liked this one out of four stories you have written so far. Please continue.

Regards,

Ramesh

Anonymous said...

அது என்ன சாரு வாடை அடிக்கிறது?

மங்களூர் சிவா said...

உள்ளேன் ஐயா

Athisha said...

ஆஹா ........

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வசந்த்.

நன்றி, ஸ்ரீதர் நாராயனண்.

நன்றி, வித்யாசாகரன்.

கேள்விக் குறி இல்லாவிட்டாலும் அவை கேள்விகள்தான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, செந்தழல் ரவி.

நன்றி, ரமேஷ்.

அனானி, சாருவின் வாடை இக்கதையில் அடிக்கிறதா என்ன? நான் அப்படி உணரவில்லையே...

நன்றி, மங்களூர் சிவா.

நன்றி, அதிஷா.

லக்கிலுக் said...

எந்த 'குறி'யும் இல்லாத இந்த பதிவு உணர்த்த வேண்டிய குறிப்புகளை சரியாகவே உணர்த்துகிறது

நன்றி

கிருத்திகா ஸ்ரீதர் said...

அடுத்தக்கட்டத்திற்கு நகரும் முயற்சியா... அலசல்கள் பிராமாதம்...

இராம்/Raam said...

ஏனிந்த இந்த(னை) கேள்வி... :))

உண்மைத்தமிழன் said...

கொடுமை.. காமநெடியைத் தாங்க முடியல..

manjoorraja said...

சில டாஸ்மாக் கடைகளுக்கு பெண்களும் சென்று வாங்குகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.

சில கேள்விகளை பற்றிய கேள்விகளும் இருக்கிறது.

ஆமாம் சி.மணியின் பச்சையம் எங்கே கிடைக்கிறது????

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டங்களை நிராகரிப்பதில் எனக்கு வருத்தமே. ஆனால் வேறு வழியின்றி ஒரு சைக்கோ அனானியின் இரண்டு பின்னூட்டங்கள் நிராகரிக்கப் படுகின்றன.

King... said...

சூடு ஏற ஆரம்பிச்சிருக்கு...

King... said...

செந்தழல் ரவி...said...

///excuse me ?

may i come in ??

what is happening here sundar sir ?????////

ஏன் தெரியலையா?

Anonymous said...

சாருவின் ஜீரோ டிகிரியின் முதல் சில பக்கங்கள இந்த பகுதியை ஒத்துள்ளது மற்றும் அந்த கதையின் அடிப்படையில் ஒன்பது எண்ணும் குறிப்பிடப்படும்.
படியுங்கள்

லக்கிலுக் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கொடுமை.. காமநெடியைத் தாங்க முடியல..
//

உலகின் எந்தப் பகுதியிலும் காமநெடியே அடிக்காது என்று கடவுள் இயற்கையை மாற்றியமைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்!

ஜமாலன் said...

சுந்தர்..

இந்தப்பகுதி அருமையாகவும் பல முக்கியமான கேள்விகளுடனும் வந்துள்ளது. தொடருங்கள்.

//நீலப் படங்களில் நிர்வானப் பெண்கள் ஏன் காலணிகளோடு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா//

இந்த கேள்வி பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விதான் என்றாலும் எனக்கு தெரிந்த ஒரு பதில்..

காலனி என்பதும் உள்ளாடை என்பதும் அம்மணம் என்பதுடன் உறவு கொண்டதாகவே விக்டோரியன் பண்பாட்டில் காணப்படுகிறது. அதாவது காலனியுடன் இருப்பது அம்மணம் அல்ல ஆனால், உள்ளாடையுடன் இருப்பதுகூட அம்மணம்தான். ஒரு பெண் தானே அடையை அவிழ்க்கிறாளா அல்லது ஆண் அவளது ஆடையை அவிழ்க்கிறானா என்பதே வன்புணர்ச்சியின் முக்கிய தடயமாக இருப்பதுக்கூட இந்த அம்மண கண்ணோட்டத்துடன் உறவு கொண்டதே.

ஒருவேளை நீலப்படங்களில் பெண்கள் காலுறையோ காலனியோ அணிவதால் சட்டரீதியாக அதனை முழு அம்மணம் இல்லை என்று வாதிடலாமோ என FBI தான் சொல்ல வேண்டும். :)

இறுதியாக, பாலியல் என்பது பொதுப்பரப்பிலிருந்து தனிப்பரப்பிற்க மாற்றப்பட்டதன் தொடுதல் அரசியல் பற்றிய ஒரு ருசிகரமான நூல் 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய பெண்கள் எப்படி பாலியல் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டு கட்டமைக்கப்பட்டார்கள் என்பதையும் அம்மணம் (nudity) என்கிற கருத்தாக்கம் எப்படி உருவானது என்பதைப்பற்றியும் அங்கிகள் மூலம் அம்மண உடல் என்பது தனியான ரகசிய தளத்திற்கு நகர்த்தப்பட்டது பற்றியும் விவாதிக்கிறதாம் லாரா கோவிங் மற்றும் டேவிட் டர்னர் என்கிற இரண்டு ஆய்வாளர்களின் நூல்கள். Laura Gowing. Common Bodies: Women, Touch and Power in Seventeenth-Century England. David M. Turner. Fashioning Adultery: Gender, Sex and Civility in England, 1660-1740.

மேலதிகமாக இவற்றைத் தொடர இந்நூட்கள் உதவலாம். லாரா கோவிங் நூல் பற்றிய இங்கு உள்ள (http://www.lrb.co.uk/v26/n08/woot02_.html) மதிப்புரையும் இது பற்றி அறிமுகத்தை தருகிறது.

Ayyanar Viswanath said...

மிக முக்கிய பின்னூட்டத்திற்கு நன்றி ஜமாலன்..

காமக்கதைகளை சரியாய் அணுகும் பக்குவம் வாய்ப்பது சிரமம்தான்...நம் சூழலில் ஃபோர்னோ என்பது பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை....கிளுகிளுப்பிற்கான மூன்றாந்தர உற்சாகம் மற்றும் புனிதங்கள் தரைமட்டமாகிறதே என்பது போன்ற பதட்டங்கள்/ வேடிக்கை மனோபாவங்களே பின்னூட்டங்களில் தென்படுகின்றன.முழுமையான காமம் என்பது சாத்தியமில்லைதானெனினும் அதை நோக்கிய விழைவுகள் கூட நம் சூழலில் இல்லை.தொடர்ச்சியான உரையாடல்கள் அல்லது காமம் குறித்தான விழிப்பே தன் சார்ந்த வதையிலிருந்து அல்லது சுந்தர் குறிப்பிடும் பாலியல் வறட்சியிலிருந்து வெளிவர தூண்டுதலாய் இருக்கலாம்

தொடர்ந்து பேசுவோம்....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, லக்கி லுக்.

நன்றி, கிருத்திகா.

நன்றி, இராம். காமம் குறித்து நிறைய கேள்விகள் இருக்கில்லையா, அதான் :)

நன்றி, உண்மைத் தமிழன். இதுவே காம நெடியா ?

ஆடுமாடு said...

//நீலப் படங்களில் நிர்வானப் பெண்கள் ஏன் காலணிகளோடு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா//

சுந்தர், இதுகுறித்து ஜமாலன் சார் சொல்லியிருந்தாலும் என் பங்குக்கும்.

ஆண்/பெண் இருபாலருக்கும் உறுப்புகள் தவிர வேறு வித்தியாசமில்லை. பொதுவாக பெண் என்றால் கொலுசு கால்கள் ஞாபகம் வரலாம். ஆணுக்கு காலில் அடையாளங்கள் கிடையாது. நீலப்படங்களில் பெண்கள் காலில் காலணிகளோடு இருப்பது, பார்ப்பவனின் உள்ளக் கிடக்கையை தூண்டுவதற்காக இருக்கலாம் என்பது என் கருத்து.

(மல்லாக்கப் படுத்து யோசிப்போம்ல)

King... said...

காமம் என்பதை சரியான கண்ணோட்டத்தில பார்ப்பதற்கு பலருக்கு சிந்தனைவளர்ச்சியும் பக்குவமும் இருந்தாலும் முழுமையான காமம் என்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே...மற்றபடி காமம் முறைப்படி அணுகப்படுகையில் அது ஒரு முழுமையான சக்தி வடிவம் என்பதும் அற்புதமான கலை என்பதும் என்னுடைய கருத்து...

நிறையத்தெரிந்து கொள்ள முடிகிறது தொடர்ந்து எழுதி பேசுங்கள் அறிந்து கொள்கிறேன்...

ஜமாலன் said...

மல்லாக்கப் படுத்து யோசிச்சாலும் ஆடுமாடு சொல்வதிலும் ஒரு காரணம் இருக்கு. காலனிகள் காம-அணிகளாக உள்ளது என்கிறரார். அதுவும் சரிதான்.

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே!
இதில எத்தனை கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியும்...:)

இதில எத்தனை கேள்வியை உங்ககிட்ட கேட்டிருக்காங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

சுவாரஸ்யமான கேள்விகள்...
???????!!!!!!!!!!!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மஞ்சூர் ராசா. பச்சையம் என்பது தொகுப்பல்ல, ஒரு கவிதை. முடிந்தால் தனியாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன் (புத்தகம் தேடி எடுத்தபிறகு).

நன்றி, கிங்.

நன்றி, அனானி. ஜீரோ டிகிரி என்றில்லை, அதற்குமுன்பு வந்த எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் நாவலில் கூட இந்த 9 கூட்டுத் தொகை 9 வருமாறு எழுதியிருப்பார். ஆனால் அவர் எழுத்துகளில் சாயல் இந்த இடுகையில் எனக்குத் தெரியவில்லை :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

நன்றி, அய்யனார்.

நன்றி, ஆடுமாடு.

நன்றி, தமிழன்.

Anonymous said...

I am sure this is charu...... As far as I know him very well.... this is charu..... As you all know char is best in the way of gossip writting..... this is also an extend of gossip.....style.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி, இந்தப் பிரதியில் எங்கய்யா காசிப் இருக்கு??!!

உங்களுக்குச் சாருவை விமர்சிக்க வேண்டுமெனில் அதற்கு என் பதிவுதானா கிடைத்தது??

லேகா said...

அருமையான பதிவு நண்பரே..யாரும்(நான் உட்பட) பேச தயங்கும் விசயங்களை நேர்த்தியாக வர்ணித்த முறை அழகு..பெண்கள் உன் வலைத்தளத்தில் அதிக கருத்துக்கள் பதியவில்லை என கருதுகிறேன்....இந்நிலை மாற வேண்டும்..Let me start the chain..

லேகா said...

//அனானி, இந்தப் பிரதியில் எங்கய்யா காசிப் இருக்கு??!!

உங்களுக்குச் சாருவை விமர்சிக்க வேண்டுமெனில் அதற்கு என் பதிவுதானா கிடைத்தது??//

Sundar..cool!!Ask tat anany to read charu's recent article on this blog..so funny to read his comments..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, லேகா.

சூர்யா - மும்பை said...

ஐயா,

சும்மா நச்சுனு இருக்கு. ஆனால் ஒரு விஷயம். காமம் என்ற ஒரு உயிரின் கட்டாயத் தேவையை எடுத்துக் கொண்டு, அதை நேர்த்தியாகவும், அடர்த்தியாகவும் பதிவு செய்யும் முயற்சி பாராட்டக் கூடிய செயல்.

வாழ்க காமம் வளர்க காமக் கதைகள்.
அன்புடன்
சூர்யா