கணினியும் போர்னோவும் கொலைகளும்

அறைக்குள் திடீரென
யாரும் பிரவேசித்தால்
வலப்பக்க மேல்மூலையிலுள்ள
சின்ன xஐ அழுத்த வேண்டும்
யாரும் வரும் சமயமல்ல என்றாலும்
எலியை அதை நோக்கியே
வைத்திருக்க வேண்டும்
பாகுபாடில்லாமல் அனைவரும்
சோரம்போகும் தளத்தில்
உலாவுகையில்
ஒலியை இல்லாமலாக்க வேண்டும்

சிலிக்கன் பொருத்தப்பட்ட
நிமிர்ந்த மார்பில்
இல்லாத தாலியைத் தொட்டபடி
தொங்கிக் கொண்டிருக்கும்
விறைப்பேறாத குஞ்சா மணிகளையும்
நம்பிக்கைகளையும்
தூரப்போட வேண்டும்

இப்போது வரலாற்றை
அழிக்கும் படலம்
ஆரம்பமாகிறது

ஈழம்

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நானறிந்த வரையில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லை. அவர்களது இந்த மௌனம் என்னை பயமுறுத்துகிறது. அல்லது மிக உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் நாம் ஏன் தலையை நுழைக்க வேண்டுமென்று இருக்கிறார்களோ என்னவோ...? ஆனாலும் தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் / எழுத்தாளர்களின் இந்தக் கள்ள மௌனம் என்னைத் துணுக்குறவே செய்கிறது.

அனைத்திந்திய அளவில் தொலைக்காட்சிகள் போகும் போக்கில் அல்லது ஒளிபரப்ப வேறு விஷயங்கள் இல்லாதபோது மட்டுமே ஈழப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கின்றன. பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் இந்தப் பிரச்சனை பிரதானமாகக் கைகொள்ளப் படவில்லை.

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியலாம், அதாவது ஜெயலலிதா, சுப்ரமணிய சுவாமி, சோ, ஹிந்து ராம், மாலன் போன்ற பார்ப்பனர்களாக அவர்கள் இருப்பது. காங்கிரஸ்காரர்களை விடுங்கள்; காவேரி விஷயத்தில்கூட கர்நாடக மற்றும் தமிழக காங்கிரஸ் தனித்தனி நிலைப்பாடெடுக்கலாம். ஆனால் ஈழப்பிரச்சனையில் அதுவும் முடியாது. ஆனால் தேசத் தலைமையைவிட அதிக அளவில் குரல் கொடுக்கிறார்கள் மாநிலத் தலைவர்கள்.. Loyal than the king..?? அல்லது ராஜீவின் ஆவி இன்னமும் அவர்களைத் துரத்துகிறதா...?

ஆயுதங்களின் ஷெல்ஃப் லைஃப் முடிவதற்கு முன்னர் உபயோகித்தாக வேண்டிய கட்டாயத்தினால் சில நாடுகளின்மேல் போர்த் தொடுக்கும் அமெரிக்கா. தன்னுடைய ராணுவத் தளவாடங்களை விற்பதற்காகவே உலகின் பல இடங்களில் போர் நடந்து கொண்டேயிருக்க வேண்டுமென விரும்புமது. இப்படிப்பட்ட வல்லரசாகத்தான் இந்தியா விரும்புகிறதா எனத் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி, பிற மாநிலத்தவர்களும் யோசித்துப் பார்க்கலாம்.

இந்திய அரசை நோக்கிப் பலர் இங்கு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இந்தப் போரில் இலங்கைக்கு இந்தியா மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிக் கொண்டிருக்கிறது எனும்போது இதைவிட வேலையற்ற செயல் வேறிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் :

இலங்கையில் தம்முடைய தொழில்களை நடத்தும் மாருதிகளின், அஷோக் லேலண்டுகளின், டாடா டீக்களின், ஹீரோ ஹோண்டாக்களின், ஏர்டெல்களின் நலனை முன்வைத்தே இந்தியா செயல்படுகிறது. ஈராக்கில் மறு கட்டுமானப் பணிகளை பல அமெரிக்க நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டதைப் போல இலங்கையில் செய்ய இந்திய கம்பெனிகள் விழைகின்றன. இதையேதான் பிரணாப் முகர்ஜியும் இலங்கையின் மறு கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா உதவும் எனச் சொல்கிறார்.

இந்நிலையில் நமது போராட்ட வடிவமென்பது உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என இல்லாது இலங்கையில் வணிக நலன்கள் உள்ள இந்திய நிறுவனங்களையும் அவர்களது பொருட்களையும் மறுப்பதேயாகும். எங்கு வலிக்குமோ அங்குதான் அடிக்க வேண்டும். (we should hit them where it counts). இதை ஒரு ஆரம்ப கட்ட போராட்ட வடிவமாகச் செய்யலாம். தனிநபராக இல்லாமல், ஏதாவது ஒரு இயக்கம் முன்னெடுத்தால் நல்லது.

விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகள் என உடுக்கையடிக்க வரும் நண்பர்களுக்கு... மன்னிக்கவும், அதைப் பிறிதொரு சமயம் வைத்துக் கொள்வோம். உடனடித் தேவை போர் நிறுத்தம்... இது எவ்வளவுதான் மொண்ணையான வெற்று மனிதாபிமான அரசியல் கலப்பற்ற கோரிக்கையாக இருப்பினும்.

குறிப்பு : http://www.kalugu.com/ தளத்திற்காக எழுதப்பட்டது. இதன் ஆங்கில வடிவத்தை இங்கே படிக்கலாம் : http://kalugu.com/2009/02/21/eelam-issue/#comment-236. மொழிபெயர்த்து வெளியிட்டமைக்கு கழுகு.காமிற்கு நன்றி.

கழுகுப் பார்வைக்கு கழுகு.காம்

www.kalugu.com

ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்தத் தளத்தைச் சில மாதங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட சில நல்ல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. தளத்தை நடத்துபவர்கள் எழுதுவது மட்டுமல்லாது, பிறரிடமிருந்தும் கட்டுரைகளை வாங்கிப் போடுகிறார்கள்.

தெற்காசியாவை பாதிக்கும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய தீவிரமான கழுகுப் பார்வைகளை முன்வைப்பது இவர்களின் நோக்கம் என்றாலும் பிரதானமாக தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய நிறைய கட்டுரைகள் வருகின்றன.

உதாரணத்திற்கு, சமீபத்தில் வந்த ஒரு சிறு பதிவைக் கீழே தருகிறேன் : (http://kalugu.com/2009/02/05/go-to-hell-syndrome/).

This is a summary of the stands of our politicians about the Tamils getting killed and their voices suppressed militarily. This will spare you from reading very many insensitive statements from our leaders..

TN Chief minister M Karunanidhi says "Let the tigers go to hell!"

Opposition leader J Jayalalitha says "Let the Srilankan Tamils go to hell!"

Actor turned Political leader Vijayakanth says "Let the Loksabha elections go to hell"

External Affairs Minister Pranab Mukherjee says "Let the Srilankan Tamils and Indian Tamils go to hell"

What is suspected to be behind the sudden spread of "Go to Hell" syndrome amongst our politicians is supposed to be another syndrome-"Leave me Alone" syndrome.

என்னையையும் இத்தளத்தில் எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். என்னால் ஆங்கிலத்தில் எழுத முடியுமென்று தோன்றவில்லை. நான் தமிழில் எழுதி அதை அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழறியா வாசகர்களைச் சென்றடைய இது ஒரு வாய்ப்பாயிருக்குமென்பதால், நேரம் கிடைக்கும்போது எழுத முடிவு செய்திருக்கிறேன்.

www.kalugu.com தளத்தை படித்துப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.

வழக்கமாகிப் போன பழக்கங்கள்

கிளாசில் தண்ணிர் கலந்தபின் ஒரு சொட்டெடுத்து
பூமித் தாய்க்கு தானம் செய்தபின் குடிப்பவன் உதயா
வெட்ட வெளியில் மரங்களின்கீழ் அமர்ந்து
மதுஅருந்துவதையே விரும்புவார்
என் பழைய முதலாளி முரளி
ஏசி அறைகளிலேயே குடிக்க விரும்புபவன் பாபு
(அங்கு புகைப்பிடிப்பதை அனுமதிப்பதில்லை இப்போதெல்லாம்)
டாஸ்மாக் பாரில் வேலை செய்யும்
கங்காவும் வீரமணியும் நண்பர்கள் ஜெயனுக்கு
காசில்லாமலும் சில சமயம் குடிக்கலாம்
தண்ணீரோ சோடாவோ சேர்க்காமல்
கோலாவை மட்டுமே உபயோகிப்பான் குமார்
அரைக்குப்பியை ஐந்து நிமிடத்தில் காலிசெய்துவிட்டு
அலப்பறை செய்வான் ராஜேந்திரன்
வாட்டர் பாக்கெட்டோ உப்புக் கடலையோ கடன்கேட்பவர்களுக்கு
தாராளமாய்க் கொடுப்பான் மனோகர்
குடிக்க வரும் திருநங்கைகளுக்கு
சிகரெட் மற்றும் சில்லரை கொடுத்து
சினேகமாய்க் கதைபேசிக் கொண்டிருப்பான் செல்வநாயகம்
குடிக்கும்போது எதையாவது படிக்கும் பழக்கமுண்டு பழனிக்கு
குடிப்பதிலேயே இவ்வளவு பழக்கங்கள் இருக்க
போதையைச் சொல்லி என்ன செய்ய