காத்திருப்புகள்

மின்சாரம் தடைபட்டிருக்கும் அகால வேளை
மெழுகுவத்தியின் ஆடும் நிழல் வெளிச்சங்கள்
பேய் உருவங்களாய் பயமுறுத்தும்
வேட்டை நாயின் குரூரத்துடன்
நோக்கும் பார்வை, நீர் சொட்டும் நாக்கு
என்னைக் கொன்றவளுக்கான
காத்திருப்பில் கழிகிறது

அர்த்தங்களை இழந்த அபத்தக் கவிதையாய்
நின்று கொண்டிருக்கிறேன்
பயமூட்டும் பிரம்மாண்ட மைதானத்தில்
தனியனாய்
எனக்கென நீ கொடுத்துச் சென்றது
சில புலம்பல்கள்;
சில கவிதைகள்;
சில காத்திருப்புகள்

(கவிதா சரண் செப்டம்பர் 1994ல் வெளியானது)

4 comments:

முபாரக் said...

//அர்த்தங்களை இழந்த அபத்தைக் கவிதையாய்
நின்று கொண்டிருக்கிறேன்//

அர்த்தங்களை இழந்தால்(மட்டும்)தான் அபத்தக் கவிதையா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முபாரக், இல்லை என்றே நினைக்கிறேன்.

மரா said...

இன்னும் பத்து வருஷம் கழித்து

// சில ட்வீட்டுகள் //

னு சேர்த்துக்குங்க குருஜி :)

கவித நனி நன்று குருஜி.

dheva said...

கனமான காத்திருப்புதான்.....!