இலக்கு

இருளால் மூடப் பட்டிருக்கிறது சாலை
தவளைகளின் இரைச்சல்
நரம்புகளை ஊடுருவுகிறது
குடைகளை மீறி மனிதர்களைச்
சில்லென்று ஸ்பரிசிக்கிறது மழை
செடிகளும் மரங்களும் பேயாட்டம் போடுகின்றன
மின்னல் வழிகாட்டுகிறது உற்ற தோழனாய்
குறுக்கே மல்லாந்த மரங்களை
அப்புறப் படுத்தி
இலக்கை நோக்கிச் சக பயணிகள்
வேகமாக முன்னேறிச் செல்கின்றனர்
மழையையும்
இருட் சாலை அழகையும்
பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன்

(கவிதா சரண் ஃபிப்ரவரி 1995ல் வெளியானது)

4 comments:

TBCD said...

எது இலக்கு என்று சரியாகத் தெரியாமல் போகிறார்கள்..

இயற்கையயை ரசிக்காமல்.

இப்படிச் சொல்லலாமா..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, tbcd.

அப்படியும் சொல்லலாம்.

இரா. சுந்தரேஸ்வரன் said...

இரு நிமிட‌ குறும்ப‌ட‌ம் பார்த்த‌து போல் உண‌ர்ந்தேன். உண‌ர்ந்தேன் என்ப‌தை விட‌ பார்த்தேன் என்றுதான் சொல்ல‌வேண்டும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சுந்தரேஸ்வரன்.