நகுலனும் நானும்

எல்லாம் நடந்து கொண்டிருந்த
யாருமில்லா பிரதேசத்தில்
அமர்ந்திருந்தவன் புத்தகத்தில்
சுசீலாவையும் ராமச்சந்திரனையும்
பார்த்தவாறிருந்தான்
முன் பின்னிருந்த
பக்கங்களில்
மறைந்து போன நவீனன்
பென்சிலைச் சீவிக் கொண்டிருந்தான்
யார் தலையையோ சீவுவது மாதிரி
கையில் பிஜாய்ஸ் பிராந்திக் குப்பியை
ஆட்டிக் கொண்டிருந்தான்
காலக் கிழவனொருவன்
வந்த வழியும்
கேட்ட செய்தியும்
நான் திரும்பிப் பார்க்க
அந்த மஞ்சள் நிறப் பூனை
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது
சாக மட்டுமே தெரிந்த
நகுலன் எழுதிக் கொண்டிருக்கிறான்
எல்லாவற்றையும்
நான் சரி
நான் மாத்திரம்
சரியே சரி

13 comments:

முபாரக் said...

உங்களுக்கு நகுலன ரொம்ப புடிக்குமா?

Anonymous said...

perfect
nice one
எதுவும் நெருடவில்லை.
:-)

ஜமாலன் said...

//பென்சிலைச் சீவிக் கொண்டிருந்தான்
யார் தலையையோ சீவுவது மாதிரி//

எங்கேயே கேட்டதைப்போல இருக்கிறது இவ்வரிகள்.

/சாக மட்டுமே தெரிந்த
நகுலன் எழுதிக் கொண்டிருக்கிறான்//

நகுகுலனின் வலி நிரம்பிய வாழ்வைச் சொல்லும் வரிகள்.

Anonymous said...

verynice. வாழ்த்துக்கள்.

நான் சரி :-)
யாருமில்லா பிரதேசத்தில்
சுசீலாவையும் ராமச்சந்திரனையும்
நகுலன் எழுதிக் கொண்டிருக்கிறான்

சாக மட்டுமே தெரிந்த
காலக் கிழவனொருவன்
பார்த்தவாறிருந்தான்

அந்த மஞ்சள் நிறப் பூனை
யார் தலையையோ சீவுவது மாதிரி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது

வந்த வழியும்
கேட்ட செய்தியும்
அமர்ந்திருந்தவன் புத்தகத்தில்

கையில் பிஜாய்ஸ் பிராந்திக் குப்பியை
ஆட்டிக் கொண்டிருந்தான்
மறைந்து போன நவீனன்

எல்லாவற்றையும்
நான் திரும்பிப் பார்க்க
பென்சிலைச் சீவிக் கொண்டிருந்தான்

எல்லாம் நடந்து கொண்டிருந்த
முன் பின்னிருந்த
பக்கங்களில்
நான் மாத்திரம்
சரியே சரி

Anonymous said...

ஸரிஸரிஸரி..

கேளாவழி வந்த
செய்தியைச்
சீவிய
மஞ்சள்பூனை
முன்பின்
எழுதிக்கொண்ட
புத்தகப்பக்கப்
பிரதேசத்தில்
மறைந்த
சுசீலாவை,
யாருமற்று
அமர்ந்த
ராமச்சந்திரனை,
ஏன் யாவற்றையும்
சீவிய
காலக்கிழவன்
யார்?.
சாகத்தெரிந்த
என்னை நான்
தலைதிரும்பிப்
பார்த்தவாறிருக்க
கையில்
பிஜாய்ஸ்
பிராந்திக்குப்பியைப்
பென்சிலாய்
ஆட்டி நடந்த
நவீனன் நகுலன்
மாத்திரம்.

சுந்தர், கவிதையில் உரைநடையில் economy முக்கியம்.

ஆடுமாடு said...

இந்த முறையும் அதே பதில்.

டிரை பண்றேன்ஜி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆமாம் முபாரக். நகுலன் ரொம்பப் பிடிக்கும்.

அனானி, என்ன சொல்றீங்க. உள் குத்து ஒண்ணும் இல்லையே (ஸ்மைலி போட்டதால் சந்தேகம்.!).

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன். நீங்கள் கேள்விப் பட்டது போலுள்ள வரிகள் நகுலனுடையவை. அந்த வரிகள் மட்டுமன்று, பல வரிகள் நகுலன் கவிதைகளிலிருந்து எடுத்தவை தாம்.

நன்றி, வானவில். உங்கள் கவிதை என்னை ஈர்க்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நாகார்ஜூனன். நிச்சயம் சிக்கனத்தைக் கடைபிடிக்க முயல்கிறேன். நீங்கள் சொல்லிய பிறகு எனக்கும் தெரிகிறது, சில வார்த்தைகளை எடுத்திருக்கலாம்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வலைச்சர வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு மெதுவா முயற்சி பண்ணுங்க ஆடுமாடு.

தெய்வா said...

good one

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தெய்வா. உங்களிடம் தான் NHM Writer இருக்கிறதே. தமிழிலேயே பின்னூட்டம் இடலாமே...

இராவணன் said...

நகுலன் என்னையும் பாதித்த ஒரு எழுத்தாளர் என்ற வகையில் இந்த கவிதை மிகவும் பிடித்தது