வானத்தில் பறக்கும் கர்ணப் புறா
பல்டியடித்தபடி நேர்க்கோட்டில் கீழிறங்கும்
ஆஃப் பீர்ல
கவுந்துருவாண்டா மச்சான்
வரிசைக் கிரமங்கள்
கலைத்துப் போடப் பட்டிருக்கிறது
பர்ரோஸின் பிரதி
வாணலியில் முலையைப் புரட்டிப் போடுகிறான்
மயிர் பிளந்து
வளைய வரும் மஞ்சள் நிறப் பூனை
யூதாசாகவோ எட்டப்பனாகவோ மாறத் தயார்
என்னை மறந்து உயிர் வாழ்வேன்
முகமூடிகள் போதனைகள்
எதுவும் வேண்டாம்
தத்திப் பீணிகா எக்கன்னா போய் சாவுரா
ராபர்ட் பிரவுணிங்காக ஆசைப் பட்டான் போர்ஹே
காலம் நினைவுகளாய்ச் சுருங்கிக் கிடக்கிறது
வட்டச் சுழல்
பசி
மோனம்
கார்காலக் குறிப்புகள் - 84
3 hours ago
8 comments:
good poem. send it to vaaramalar. labyrinth is not a scale of post modern poem. its a pseudo.
பொய்யன், கூல்.!
நன்றாக உள்ளது கவிதை...
நன்றி, உமாபதி.
பல விஷயங்களைத் தொட்டுத் தொட்டுச் செல்கிறது கவிதை. மையமாக ஒன்றையும் குறிக்காமல்.
நன்றி, அனானி.
படிக்க நல்லா இருக்கு கவிதை.
நன்றி, முனி.
Post a Comment