இன்று மற்றுமொரு நாளே

காலையில் எழுந்து
அவசரமாய்க் குளித்து
டிபன் காஃபி
கசப்பு நாக்கிலிருக்க
கூடவே ஒரு சிகரெட்
அலுவலகம்
with reference to your letter
தட தட தட்
மதிய உணவிற்குத் தயிர்சாதம்
தூக்கக் கலக்கத்துடன் வேலைகள்
சீக்கிரம் கிளம்பணும்
ஐயையோ லேட்டாயிருச்சே
என்ன ரஷ், என்ன ரஷ்
கைகால் கழுவி
சாப்பிட்டுப் படுத்து,
நாளையேனும்...

(கவிதா சரண் ஜூன் 1992ல் வெளியானது)

15 comments:

வெண்பூ said...

அற்புதமான வரிகள் சுந்தர்.. 1992ல் எழுதியது இன்றும் பொருத்தமாக இருக்கிறது, இன்னும் 20 வருடம் கழித்தும் பொருந்தும் என்பது வலிக்கும் உண்மை..

Ken said...

என்ன ரஷ், என்ன ரஷ்
கைகால் கழுவி
சாப்பிட்டுப் படுத்து,
நாளையேனும்...


இந்த கவிதை முழுக்க நிரம்பி வழியும் அந்த டென்சன் எவ்ளோ நிதர்சனம்.

நாளையேனும் நல்லா இருக்குங்க

Anonymous said...

//நாளையேனும்...//
இந்த நம்பிக்கையில்தானே வண்டி ஒடுது..

குப்பன்.யாஹூ said...

நாளை மற்றும் ஒரு நாளே கவிதை யாரு எழுதியது பிரம்மராஜன் அல்லது சல்மா. நான் மறந்து விட்டேன்.

காப்பி தேநீர் சுவை நாக்கில் மறக்க காபி குடித்த வுடன் தணீர் குடிக்கவும். இது அரேபியா தேசத்து உணவகத்தில் நான் கற்ற விஷயம்.

நல்ல கவிதை.

வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ

ரோஜா காதலன் said...

//
த.அகிலன் said...
//நாளையேனும்...//
இந்த நம்பிக்கையில்தானே வண்டி ஒடுது..
//

வழிமொழிகிறேன்..
இந்த டென்சனை போக்க டூர், நண்பர்களோடு அரட்டை, திருவிழா போன்ற வகையறாக்கள் இருந்தும், அவ்வளவு சுலபத்தில் அமைவதில்லை.

MSK / Saravana said...

// வெண்பூ said...

அற்புதமான வரிகள் சுந்தர்.. 1992ல் எழுதியது இன்றும் பொருத்தமாக இருக்கிறது, இன்னும் 20 வருடம் கழித்தும் பொருந்தும் என்பது வலிக்கும் உண்மை..//

அதேதான்.. :)

anujanya said...

சுந்தர்,

மற்றுமொரு நாளாக உங்களுக்கு இருக்கலாம். எனக்கு இல்லை. முக்கியமான ஒருவரை சந்தித்த தினம். கவிதை நல்லா இருக்கு.

அனுஜன்யா

narsim said...

குருவே.. கலக்கல் கவிதை..

இந்த கவிதை படித்தவுடன் ஒரு சங்கப்பாடல் நினைவிற்கு வந்தது.. கிட்டத்தட்ட இதே சூழல்.. அடுத்து பதிவிருவோம் அதை..

இவ்வளவு அவசரமாக எங்கே போகிறோம்? என்ற கேள்வி எழ(விழ) வைத்து விட்டீர்கள்!!

நர்சிம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வெண்பூ.

நன்றி, கென்.

நன்றி, அகிலன்.

நன்றி, குப்பன் யாஹூ. நாளை மற்றுமொரு நாளே என்ற தலைப்பில் ஜி நாகராஜனின் நாவலிருக்கிறது. நீங்கள் சொன்ன கவிதை நான் அறிந்ததில்லை.

Unknown said...

சிம்ப்ள் கவிதை
keep it up!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரோஜா காதலன்.

நன்றி, சரவண குமார்.

நன்றி, அனுஜன்யா. :)

வால்பையன் said...

//நாளையேனும்...//

என்றேனும் மாற வாய்புண்டா
எல்லோருக்கும்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நர்சிம்.

நன்றி, ரவிஷங்கர்.

நன்றி, வால்பையன்.

Anonymous said...

//வெண்பூ said...

அற்புதமான வரிகள் சுந்தர்.. 1992ல் எழுதியது இன்றும் பொருத்தமாக இருக்கிறது, இன்னும் 20 வருடம் கழித்தும் பொருந்தும் என்பது வலிக்கும் உண்மை..//

என் கருத்தும் அஃதே

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வடகரை வேலன்.