தலைஇப்பு நீண்ட...

அம்மா அப்பா ஆட்டு உரல்
ஆரம்பக் கல்வி இடைநிலைக் கல்வி
தொலைதூரக் கல்வி
நிற்றல் நகர்தல் நகர்த்துதல்
வாசிப்பு கருத்தரங்கம்
கருத்தில்லா அரங்கம்
இட்லி சாம்பார் நாண்
சரவணபவன் சாலையோரக்கடை
சுந்தர் சுந்தர ராமசாமி
பிரபாகர் கல்யாண சுந்தரம்
பட்டுக்கோட்டை
வேலை வேலை இல்லாமை
இல்லாமை
பணம் பதவி தேர்தல்
இடை இடைத் தேர்தல்
கலவி கல்யாணம்
குமுதம் குழந்தை குற்றம்
பீர் பிராந்தி விஸ்கி
காக்டெயில் கூட்டணி
தனிமை தவம் தவிப்பு
தற்பெருமை நொடி நோய்
மாத்திரை லவங்கம் கற்பூரம்
தாமிரபரணி காவேரி காவிரி
தலைவிரிந்து நடந்தாய்
வாழவில்லை சக்தி
வைத்தியம் ஜானகி ராமன்
நகுலன் மௌனி அபி
தர்மு சிவராமு லாசரா
அம்மா அப்பா நான்
நீ பைத்தியம்
தவிர்க்க முடியவில்லை
அச்சமும் கவிதையும்
மிச்சம் ஒன்றுமில்லை
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
எப்படியும் இரு சாமி
சாமிகள் சாத்தான்கள்
ஒன்றுமே இல்லாதவன்
எங்கேயும் இல்லை

நண்பர் குமார்ஜி சமீபத்தில் எழுதியது. இத்தனைகாலம் எழுதாமல் இருந்தது குறித்து :

பொழுது போகாமல்
எழுதத் துவங்கினேன்
இப்
பொழுது போதாமல்
எழுதாமலிருக்கிறேன்
இடைப்பட்ட காலத்தில்
அவிந்து
போகாமலிருக்கிறது
ஆரம்ப காலத்தின்
அடி ஊற்று

இன்னொரு தலைப்பில்லாத கவிதை :

இடக்கையில் தூக்கு
வலக்கையில் வாளி
வரப்புச் சேற்றில்
கால்கள் புதைய
அப்பாவுக்குச் சோறு
வார் அறுந்த
நிக்கரின் சொறுகல்
அவிழ்ந்து கொண்டிருக்கும்
அடிக்கு அடி

17 comments:

manjoorraja said...

புரியலென்னு சொல்லவும் தோணலெ
புரியுதுன்னு சொல்லவும் முடியலெ
மொத்தத்தில் புரிந்தும் புரியாமலும்.

துபாய் ராஜா said...

பெருசை விட சின்னது இரண்டும் சிக்குனு இருக்கு.

தராசு said...

தலைவா,

முதல் ஐட்டம் கொஞ்சம் புரியுது. இன்னும் நிறைய படிக்கணும்.

மத்ததெல்லாம் சூப்பர்.

குப்பன்.யாஹூ said...

கவிதையிலேயே பேட்டை ராப் பாட்டா, அல்லது அந்தாதி வகையறாவா
ஆனால் வாசிக்க இனிமையாக உள்ளது.

குப்பன்_யாஹூ

பா.ராஜாராம் said...

என்னடா சுந்தரா,...உன்னை மாதிரியே எழுத தொடங்கிவிட்டான்(முதல் கவிதை).... ரெண்டாவது மிக அற்புதம் என அலைபேசியில் சொல்லவேணும்...எங்கு போய் ஒளிந்து கொண்டாலும் கை பிடித்து இழுத்து,தோல் அணைத்து கொண்டுவரும்,உன் அன்பு மிக நெகிழ்வு சுந்தரா...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

நன்றி...

நர்சிம் said...

முதல் கவிதை புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை..

நேசமித்ரன் said...

விசிறி அடிக்கும் பன்முகத்தன்மை
அற்புதமான வார்த்தை விளையாட்டு
நல்லா இருக்கு ...!
இவரின் வலையக முகவரி கிடைக்குமா ஜி ..?

Ashok D said...

தத்துவம் பித்துவம் மிஸ்டிசம்
பரம்பொருள் தேடல் தொலைத்தல்
தொலைதல் இருத்தல் இல்லாமல் இருத்தல் ;)

குமார்ஜியின் இரண்டு கவிதையும் முத்துக்கள்.

நந்தாகுமாரன் said...

குமார்ஜிகிட்ட சொல்லுங்க ... முதல் கவிதையும் மூன்றாவது கவிதையும் எனக்கு பிடித்திருக்கிறது என்று

Ronin said...

Second poem is beautiful and pulling me into the image..

யாத்ரா said...

கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது, பகிர்வுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

தயவுசெய்து கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு உண் வேலை பார், அடுத்தவனை இப்படி கொல்லாதே.

இந்த முதல் கவிதை மயுறு மாரி இருக்கு

கார்க்கிபவா said...

//முதல் கவிதை புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை//

தல புரியவில்லையென்றால், எப்படி அதை கவிதை என்கிறீர்கள்?

எப்பூடி?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மஞ்சூர் ராசா, துபாய் ராஜா, தராசு, குப்பன் யாஹூ, ராஜாராம், ஜகதீஸ்வரன், நர்சிம், நேசமித்ரன், அஷோக், நந்தா, ரானின், யாத்ரா, அனானி, கார்க்கி... நன்றி.

@ நேசமித்ரன், அவருக்கு வலைப்பதிவு இல்லை. நாகர்கோயிலருகில் ஒரு சிறிய ஊரில் வசிக்கிறார். இணையத் தொடர்புகள் கொஞ்சம் கஷ்டம் அங்கு.

@ அனானி, உங்கள் பின்னூட்டத்திற்குத் தனியாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

யார் இந்த குமார்ஜி...நான் இதுவரை படித்ததில்லை..(என்னமோ எல்லாரையும் படிச்சிட்ட மாதிரின்னு சொல்லாதீங்க)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா. குமார்ஜி என்னுடைய நண்பர். அவருக்குத் தனி வலைப்பதிவு இல்லை. அவர் எழுதும் கவிதைகளை அவ்வப்போது பதிவிடும் எண்ணத்தில் உள்ளேன்.