காமக் கதைகள் 45 (31)

சொல்வதற்குச் சங்கடப்பட்டான் அதீதன். ‘இல்ல, இந்தக் கதையைச் சொல்லலாமான்னு தெரியல’ என்றான். ‘ஏன் யார்கிட்டயாவது உதை வாங்கின கதையா... இப்படி எல்லாம் இமேஜ் வச்சுக்காத’ என்றேன். ‘போடா முட்டாள்’ என்றுவிட்டு, நிதானித்து கதையை ஆரம்பித்தான்..

’அப்ப எனக்கு 19 வயசிருக்கும். மண்டை முழுக்க செக்ஸ்தான் இருக்கும். எப்படியாச்சும் பொம்பள உடம்ப பார்த்துட துடிக்கும். எவ்வளவோ கேவலமான காரியங்களைப் பண்ணியிருக்கேன்’

’நீ மட்டுமா, எல்லாரும்தான் பண்ணியிருப்பாங்க... தைரியமாச் சொல்லு’

’என்னோட தூரத்து சொந்தக்காரப் பொண்ணு. பேரு ஸ்ரீவாணி. என்னைவிட நாலு வயசு பெரியவ. வீட்டுக்கு வந்திருந்தவ நேரமாயிட்டதால ராத்திரி தங்கிட்டா. படுக்கறதுக்கு ஒரே ரூம்தான். நான், அம்மா, அவ மூணு பேரும் படுத்திருந்தோம். காலையில எழுந்து பார்த்தா, அம்மா சமையல் ரூம்ல இருந்தாங்க. வெளிச்சம் வராம இருக்க இந்த ரூம் கதவு சாத்தியிருந்துச்சு. ஸ்ரீவாணி தூங்கிகிட்டிருந்தா. அவளோட பாவாடை முட்டி வரைக்கும் வந்திருந்துச்சு.

அவளோட உடம்ப தொட்டுப் பாக்க என் மனசுல ஆசை. ஆனா அவ முழுச்சுகிட்டா என்ன செய்யறதுன்னும் பயம். மனசு கிடந்து தள்ளாடிச்சு. ஆனாலும் ஆசைய அடக்க முடியல.

நைஸா அவளோட பாவடைய கொஞ்சமா தூக்கி அவ தொடைய தொட்டேன்.

டக்குன்னு முழிச்சுகிட்டா ஸ்ரீவாணி. எனக்கு ஷாக் அடிச்சா மாதிரி வெலவெலத்துப் போயிட்டேன். கண் முன்னாடி உலகமே சுத்துது. எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியல... அப்படியே நின்னவன் தலைய குனிஞ்சுகிட்டு ரூம விட்டு வெளிய வந்துட்டேன்.

தெரு முனைக் கடைக்குப் போய் அடுத்தடுத்து ரெண்டு சிகரெட் வாங்கிப் பிடிச்சேன். போச்சு, வீட்ல அம்மாகிட்டயோ இல்லாட்டி அவளோட சொந்தக்காரங்ககிட்டயோ சொன்னா நான் அவ்வளவுதான், காலி. காலியாகறத விடு, எவ்வளவு பெரிய அவமானம் - மூஞ்சி மேலயே காறித் துப்புவாங்க எல்லாரும்.

டிஃபன் முடிச்சுட்டு அவ கிளம்பினா. பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு விட சைக்கிள எடுத்தேன். யார்கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்னு வாய்விட்டு கேக்கவும் கூச்சமா இருந்துச்சு. அவ பின்னாடி கேரியர்ல உக்காந்துகிட்டு, இந்த மாதிரி விஷயம் நடந்தா மாதிரியே காட்டிக்கல. வேற எதையோதான் பேசிகிட்டு வந்தா.

நாளாக நாளாக தெரிஞ்சது - அவ யார்கிட்டயும் இந்த விஷயத்தைச் சொல்லவேயில்ல. அப்ப எனக்கு எவ்வளவு ஆசுவாசமா இருந்துச்சு தெரியுமா?

இப்ப அவளுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. அதுக்கப்புறம் அவளை நிறைய தடவை சந்திச்சிருக்கேன் - ஒரு தடவைகூட ஏண்டா அப்படிப் பண்ணினேன்னு அவ கேட்டதேயில்ல.

இப்ப அவள நினைச்சா கூட ரொம்ப நெகிழ்வா இருக்குடா’

என்றபடி கதையை முடித்தான் அதீதன். யோசித்தபடி இருந்த எனக்கு ஏனோ கதை அங்கே முடிந்த மாதிரி தோன்றவில்லை. நான் ‘அவ உன்மேல பரிதாபம் பார்த்து விட்டாளோ இல்லாட்டி அவளுக்கே நீ தொட்டது பிடிச்சிருதுச்சோ’ என்றேன். திடுக் திருப்பமென்றால் கதை இங்கேயாவது முடிய வேண்டும். ஆனால், அதீதன் பிரியப்பட்டபடி அவன் சொன்ன இன்னொரு வாக்கியத்துடன் முடிகிறது.

’சே, உன் புத்தி ஏண்டா இவ்வளவு வக்கிரமாகிடுச்சு?’

18 comments:

buruhani said...

ரொம்ப விருவிருப்பா போய் சக்கென நின்னுடிச்சே.

மணிகண்டன் said...

சூப்பர் கதை. அதீதன் சின்ன வயசுலயே பழம் தின்னு கோட்டை போட்டவன்னு நினைச்சா இப்படி இருக்கானே :)-

எழுதற கதை / கேக்கற கதைல எல்லாத்துலையும் கருத்து சொன்னா, அதீதன் பதில் மாதிரி தான் வரும் :)-

வால்பையன் said...

//‘அவ உன்மேல பரிதாபம் பார்த்து விட்டாளோ இல்லாட்டி அவளுக்கே நீ தொட்டது பிடிச்சிருதுச்சோ’ //

பலர் பரிதாபபட்டும்!
பலர் பிரியபட்டும்!

நான் எனக்கு சொன்னேன்!

மணிகண்டன் said...

ஜ்யோவ்,

இந்த தொடரில் மனித எண்ணத்தின் முரண்பாடுகளை ரொம்ப அழகா எழுதறீங்க. கடைசி பகுதிக்கு வைட்டிங். முழுசா கவிதையா எழுதறேன்னு வாக்கு கொடுத்து இருக்கீங்க.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க வழக்கம் போலன்னு சொல்ல முடியல கொஞ்சம் அழுத்தம் மிஸ்ஸிங் தலைவரே
ஒருவேளை எனக்கு அப்பிடி தோணி இருக்கலாம்
:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

buruhani, மணிகண்டன், வால்பையன்... நன்றி.

இளைய கவி said...

குருநாதா நான் அதீதன் ஆனேன்

Ashok D said...

:)

குசும்பன் said...

//‘இல்ல, இந்தக் கதையைச் சொல்லலாமான்னு தெரியல’ //

ஆமாங்க காமக் கதையில் இந்த கதைய சொல்லலாமான்னு எனக்கும் தெரியல:)

நந்தாகுமாரன் said...

முடிவு அருமை ... ஒரு சாதாரண செக்ஸ் கதையை அசாதாரண தளத்திற்கு நகர்த்திச் செல்கிறது ...

யாத்ரா said...

\\இப்ப அவள நினைச்சா கூட ரொம்ப நெகிழ்வா இருக்குடா’\\

ம்

Sanjai Gandhi said...

ச்சி..ச்சி.. தப்பு தப்பா பதிவெழுதறாங்க.. இது தெரியாம நான் முழுசா படிச்சிட்டேனே.. பெருமாளே.. :(

மணிப்பக்கம் said...

:):):)

மணிஜி said...

எனக்கும் அந்த அனுபவம் இருக்கு...

விநாயக முருகன் said...

நல்லா இருக்கு சுந்தர்.

எனக்கும் சின்ன வயசுல இந்த மாதிரி அனுபவம் நடந்துருக்கு. ஆனா தொடையை தொடவில்லை. அதையும் தாண்டி..

ஹும்ம். அதெல்லாம் ஒரு காலம்

ஊர்சுற்றி said...

கதையின் கடைசி வரிகளை இரண்டு மூன்று முறை படித்தேன்! கொஞ்சூண்டு புரியாத மாதிரி இருந்தது!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நேசமித்ரன், இளையகவி, அஷோக், குசும்பன், நந்தா, யாத்ரா, சஞ்சய், மணிப்பக்கம், தண்டோரா, விநாயக முருகன், ஊர்சுற்றி... நன்றி.

சிவக்குமரன் said...

நான் கூட இந்த கதை வேற மாதிரி முடியும்னு நினைச்சேன்.