ஜனவரி 1ம் தேதி புத்தகச் சந்தைக்குப் போகலாம் என்று முடிவு செய்தது அன்று காலைதான். முதல் நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஒன்றும் பெரிதாக இல்லையென்றாலும் மதியம்கூட ஏனோ தலையை வலித்தது. கடையில் அனாசின் வாங்கிக் கொண்டு பார்த்தால் தண்ணீர் இல்லை. ஒரு பாக்கெட் தண்ணீர் 3 ரூபாய் (டாஸ்மாக்கில்) ஆனால் வெளியில் 1 ரூபாய்தான். மாத்திரையைப் போட்டுக் கொண்டு ரயில் பிடித்து சேத்துப்பட்டில் இறங்கினேன். என்னுடன் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர். அங்கிருந்து அப்படியே நடந்து வந்து பஸ் பிடித்து பச்சையப்பா கல்லூரியில் இறங்கிக் கொண்டோம்.
கண்காட்சிக்கு எதிராகப் பழைய புத்தகக் கடை ஒன்றிரண்டு இருந்தது. நிறைய புத்தகங்களை விரித்திருந்தார்கள். சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை 10 ரூபாய்க்குக் கிடைத்தது. வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே ஒரு பிரதி வீட்டிலிருந்தாலும் யாருக்காவது கொடுக்கப் பயன்படுமே என்று நினைத்துத்தான் வாங்கினேன். போலவே என்னுடைய நண்பன் ஒருவனுக்குப் பரிசளித்து விட்டேன்.
கண்காட்சியில் வாசலில் கார்கள் வருவதற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். டூ வீலரில் வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் - உடனே செல்ல முடிந்தது. ஆனால் பார்க்கிங் சீட்டு ரொம்பச் சின்னதாக இருந்தது என்று உள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள். வெளியே ஃபிளெக்ஸ் பேனர்களில் நிறைய விளம்பரங்களைப் பார்க்க முடிந்தது. ஆனந்த விகடன் நிறைய விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
நுழைவுக் கட்டணம் 5 ரூபாய். நல்ல வேளையாகக் க்யூ இல்லை. மூன்று பேருக்குமாய்ச் சேர்ந்து 15 ரூபாய் சில்லரையாகக் கொடுத்தேன். உள்ளே நுழையும் முன் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என்று பார்த்தேன்.
பதிவர்கள் பைத்தியக்காரன், லக்கி லுக், சங்கர் மற்றும் சிலரைச் சந்தித்தேன். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். தனி இடுகையாகப் புகைப்படங்களை வெளியிடுகிறேன்.
நிறைய ஸ்டால்கள் இருந்தன. ஸ்டால்களின் நடுவில் நிறைய இடைவெளி விட்டிருந்தார்கள். கிழக்கு பதிப்பக ஸ்டால் அருகில் பா ராகவனும், பத்ரியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்தேன்.
புதிய தலைமுறை (?) பெரிய பையைக் கொடுத்தார்கள். புத்தகங்களை வைத்துக் கொள்ள வசதியாயிருந்திருக்கும். விகடன் அரங்கிலும், இன்னும் சில அரங்களில் மட்டும் கூட்டம் அம்மியது.
சாரு நிவேதிதா.உயிர்மை அரங்கில் இருந்தார். அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். எஸ் ரா இல்லை. இருந்திருந்தால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.
கார்பெட் நன்றாக இருந்தது. சென்ற வருடங்களைப் போல முனை மழுங்கியில்லை. மழுங்கியிருந்த இடங்களிலும் உடனுக்குடன் ஆணியடித்துச் சரி செய்து கொண்டிருந்தார்கள்.
வீட்டுக் கடன் வழங்கும் HDFC ஸ்டாலில் நின்று விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். குறைவான வட்டியில் கடன் கிடைத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே. அப்போது வெளியில் இருந்த புடவைக்கடை விளம்பரங்களைக் குறித்து யாரோ பேசியபடி சென்றார்கள்.
அழகான பெண்கள் தனியாக வந்திருந்தார்கள். அவர்களை ஸைட் அடித்தபடி நடந்து செல்வது ஆனந்தமானது. காலையில் கிளம்பும் முன் இங்கே செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் இன்னும் நல்ல உடையில் வந்திருக்கலாம். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.
முக்கியமான விஷயம் : புத்தகச் சந்தை கேண்டீனில் லிச்சி ஜூஸும், தக்காளி சூப்பும் நன்றாக இருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம். லிச்சி ஜுஸ் 10 ரூபாய். வாங்கிக் குடித்தோம்.
புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்த போது சரியான கால்கடுப்பு. மதியம் ஏற்பட்ட தலைவலி ஏனோ ஞாபகம் வந்து, தலையும் வலிப்பது போல் தோன்றியது.
கார்காலக் குறிப்புகள் - 51
1 day ago
31 comments:
உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா? :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
இந்த சிறுகதையில் கடைசி நாலு வரியில் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கலாம்.
பைத்தியக்காரன் said..
உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா? :)
அதானே...
கன்றாவி புடிச்சவன்..புத்தகம் வாங்கினதை சொல்லுடான்னா..
இதெல்லாம் டூ மச் சுந்தர். இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் :))))))))
அனுஜன்யா
//பைத்தியக்காரன் said...
உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா? :)//
இதிலென்ன லொள்ளு இருக்கிறது?
----------------------------
சுந்தர் சார் பஜ்ஜி 30 ரூவாயாமே? உண்மையாவா?
குருஜி,
நீங்க அங்க எதுக்கு போனீங்க?
//முக்கியமான விஷயம் : புத்தகச் சந்தை கேண்டீனில் லிச்சி ஜூஸும், தக்காளி சூப்பும் நன்றாக இருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம். லிச்சி ஜுஸ் 10 ரூபாய். வாங்கிக் குடித்தோம்.//
:)))))))))))
என்ன தலைவா....கிட்ட தட்ட பத்து நாள் கழிச்சு ஒரு பதிவு எழுதி இருக்கீங்க...ரொம்ப ஆசையோட ஓபன் பண்ணி படிச்ச இப்படி எமாத்திடிங்களே...உங்க பேச்சி "கா" போங்க......
சுந்தர் ஜி யின் இடுகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தேன்
புளிய மரத்தின் கதை பத்து ரூபாயா, ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம்
// கடையில் அனாசின் வாங்கிக் கொண்டு பார்த்தால் தண்ணீர் இல்லை. ஒரு பாக்கெட் தண்ணீர் 3 ரூபாய் (டாஸ்மாக்கில்) //
உங்கள் நக்கல்சுவையை ரசித்தேன் :)
நீங்கள் வாங்க விரும்பிய புத்தகங்களை வாங்கினிர்களா அல்லது என்னென்ன புத்தகங்களை வாங்கினீர்கள்
அருமையாக பகிர்ந்துள்ளீர்கள், நன்றிகள்.
இந்த மாதிரி ஜாலியாகத்தான் புத்தகக் கண்காட்சியை அணுக வேண்டும், பெரும்பாலனா பதிவர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் (நான் உட்பட) புத்தக கண்காட்சியை மிக சீரியசாக அணுகுகிறோம். அது தவறு, ஏதோ கோவிலுக்கு செல்வது போல பயந்து சீரியசாக போகிறோம் கண்காட்சிக்கு.
வாங்கிய புத்தகங்கள் , ரசித்த எழுத்துக்கள் குறித்து விரைவில் பதிவிட வேண்டுகிறேன்.
purchasea 10ல ஆரம்பிச்சு 10ல முடிச்சிங்க பாருங்க.. அங்கதான் நீங்க நிக்கறீங்க
சிரித்துக் கொண்டே தான் படித்தேன், சிவராமண்ணனின் கமண்ட் பார்த்ததும் இன்னும் சிரிப்பு அதிகமாகிவிட்டது :)
அப்போ ஸைட்” அடிச்சிட்டு வந்துட்டேன்னு சொல்லுங்க....
நல்லாருக்கு :)
/அழகான பெண்கள் தனியாக வந்திருந்தார்கள். அவர்களை ஸைட் அடித்தபடி நடந்து செல்வது ஆனந்தமானது. காலையில் கிளம்பும் முன் இங்கே செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் இன்னும் நல்ல உடையில் வந்திருக்கலாம். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.
//
:)))
:))
கண்காட்சில வாங்கின புக்ஸ் பத்தி ஒண்ணுமே சொல்லலை.
அட்டகாசமான போஸ்ட்..!
ஜ்யோவ் அசத்திட்டீங்க..!
இப்படியே தொடர்ந்து நாலு பதிவு போட்டு நம்ம சங்கத்துல இணைஞ்சுட்டீங்கன்னா நல்லாயிருக்கும்..!!!
பதிவையும், பின்னூட்டங்களையும் பார்க்கும்போது சீரியஸாக ஏதோ காமெடி போவதைப்போல இருக்கிறது. அதுவாவது புரியும் அளவில் என் சிற்றறிவு இருப்பதில் மகிழ்ச்சி. :-))
இதுக்கும் மேல யாராவது புக் ஃபேரப் பத்தி எழுதுவாங்கன்னு நினைக்கிறீங்க???????
10 மேட்டர் நல்லா இருக்கு :)
அது ஏன் குருஜி, அழகான பொண்ணுங்க பெரும்பாலும் தனியாவே புத்தகக்கடையில திரியுதுங்க? :)
நான் சனிக்கிழமை போலாம்னு இருக்கேன்.அழகான பெண் + லிச்சி ஜூஸ்- ரெண்டையும் ட்ரை பண்றேன் :)
Sundar Ji,
haa haa..Classic!!:-)
இப்படியே தொடர்ந்து நாலு பதிவு போட்டு நம்ம சங்கத்துல இணைஞ்சுட்டீங்கன்னா நல்லாயிருக்கும்//
என்னாது???????/
super........thats you.....
ஒன்பது வரிக்கு மேல படிச்சவுடனேதான் எனக்கு நிம்மதியாக இருந்தது..அப்பாடா! இது குருவோட வழக்கமான கவிதை இல்லை!!
உங்கள் உணவுப் பட்டியல் சுவாரஸ்யம்.. இது போன்ற கலெக்ஷன்கள் தான் காலத்தை கடந்து நிற்கும்.. தினத்தந்தி படிக்கிறவன் வண்ணமலர் படிக்கிறவன்லாம் வாசகனாம்.. வாசிப்பு அனுபவம்னு வேற சொல்றாங்க.. நாராயணா இந்த வாசகனுங்க தொல்லை தாங்க முடியலைடா.. எங்க போனாலும் பட்டியல் போடறாங்க..
(நீர் என் ஜாதி ஐயா.. கண்காட்சியோ புத்தககாட்சியோ எதுவாயினும் நமக்கு பெரிய அப்பளமும் மிளகாய் பஜ்ஜியும் தான் முக்கியம்..)
கவிதை இன்றி நீங்கள் எழுதும் விஷயம் முதல் முறை வாசிக்கிறேன். அவ்வபோது மற்ற விஷயங்கள் பற்றியும் இது மாதிரி எழுதலாமே?
அண்ணா
கலக்கல்! (இது டெம்ப்ளேட் பின்னூட்டமல்ல. நெஜமாவே சிரிச்சுகிட்டேஏஏ இருக்கேன்!)
பைத்தியக்காரன், ரவிஷங்கர், ராஜாராம், அனுஜன்யா, நான் ஆதவன், தராசு, உயிரோட, கமலேஷ், நேசமித்ரன், சங்கர், நந்தா, குப்பன் யாஹூ, அஷோக், யாத்ரா, கும்க்கி, பாஸ்டன் பாலா, கேபிள் சங்கர், ராஜகோபால், உண்மைத்தமிழன், ஆதிமூலகிருஷ்ணன், நர்சிம், RVC, லேகா, கார்க்கி, செந்தழல் ரவி, தண்டோரா, சஞ்சய் காந்தி, மோகன் குமார், பரிசல்காரன்... நன்றி.
விருந்தையும் மருந்தையும் ஒன்னாவே treat செய்யறீங்க :))
அது சரி. இப்படித்தான் எல்லோரும் எழுதிருக்காங்க, புத்தக கண்காட்சி பத்தி.. :))
Post a Comment