ஒவ்வொரு பெயர் வைத்து ஒவ்வொருவர் கூப்பிடுகின்றனர்
ஆங்கிலம் தெரிந்த ஜாதகமும்
முருக பக்தரான அப்பாவும்
நியூமராலஜி பிரியரான பெரியப்பாவுமாய் சேர்ந்து
ஆனந்த் குமார் மகேஷ் என்றது பிறப்புச் சான்றிதழ்
மகேஷ் என்றார்கள் சிலர்
குமரா என்பார்கள் பள்ளி நண்பர்கள்
அம்மாவுக்கு மட்டும் இவன் எப்போதும் சிட்டிதான்
எழுதுவதற்காக இவனே வைத்துக் கொண்ட புனைபெயர் தனி
’கேசவ மாதவன்’ இருபெயர் கொண்ட
நகுலனின் நாயகன்வேறு தொந்தரவு செய்கிறான்
பெயரில் என்ன இருக்கிறது
அல்லது பெயரில் என்னதான் இல்லை
எழுதிப் பார்த்தாலும் தீரவில்லை குழப்பம்
போதையில் நண்பனொருவன்
அவித்த முட்டையை நினைவுபடுத்தும்
மழுமழுவென்ற கன்னம் தடவி
’ஆனந்தி...’
விளிக்கும்போது மட்டும் உடல் சிலிர்க்கிறது இவனுக்கு
கார்காலக் குறிப்புகள் - 115
29 minutes ago
18 comments:
அருமை சுந்தர், வழக்கம் போலவே கலக்கல்
அதும்வும் இணையம் வந்த பிறகு, ஒவ்வொரு வலை தளத்திற்கும் ஒரு பெயர், கடவுச்சொல் குழப்பம் கூடத் தான் செய்கிறது.
யாஹூவிற்கு ஒரு பெயர், கூகிள் இன்னொரு பெயர், ஷாதி டாட் காமில் இன்னொரு பெயர், ஓர்குட்டில் வேறு ஒரு பெயர், ட்விட்டரில் இன்னொரு பெயர், இரவு நேர cam2cam chattrikku இன்னொரு பெயர்.
ஆஹா பேரை வைத்து கவிதை
நல்லா இருக்கு ஜ்யோவ்.
கன்னம் - மழுமழு ரொம்ப சரி.
அனுஜன்யா
:):):)
சூசிப் பெண்ணே ரோசாப் பூவே என்பது மாதிரியோ ... :)
peyaril enna irukkirathu
peyaraiththavira
nalla irukku kuruji(no tamil fonts)
அன்பின் ஜ்யோவ்ராம் சுந்தர்
கவிதை ந்ன்று - நச்சென்ற இறுதி வரியுடன்
பெயரில் என்ன இருக்கிறது - ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அழைக்கிறார்கள் அவர்களுக்கு விருப்பப்பட்ட பெயரில்
நல்வாழ்த்துகள்
மிகப் பிடித்திருந்தது.. பெயரில் என்ன இருக்கிறது? சும்மா பெயருக்காக..
பெயரில் என்னதான் இல்லை:
good work
யாஹு ராம்ஜி, சங்கர், அனுஜன்யா, மணிப்பக்கம், நந்தா, தண்டோரா, சீனா, நர்சிம், டாக்டர் ருத்ரன்... நன்றி.
அவித்த முட்டையை நினைவுபடுத்தும்
மழுமழுவென்ற கன்னம் தடவி...
சுந்தர்ஜி,,எனக்கு உங்கள் கன்னம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.
பெயரில் என்ன இருக்கிறது. பெயரில் என்னதான் இல்லை. இதுதான் விஷயம்.
அருமை சுந்தர்.
"பெயர்கள்" நல்லாக இருக்கிறது.
நல்ல ஃபீல்.. அருமை
அருமை !! ரசித்தேன்
ரொம்ப பிடிச்சிருக்கு,
ஜீவராம் சுந்தர்,
சுந்தரா,
ஜ்யோவ்!
மிக அருமை.பிடிச்சிருக்கு........
காவேரி கணேஷ், அகநாழிகை, மாதேவி, உழவன், மோகன் குமார், பா ராஜாராம், விடிவெள்ளி... நன்றி.
Post a Comment