மாலைநேரத் தார்ச்சாலையில்
கட்டிடங்களின் நிழலில்
போதையில் கிடக்கிறது வண்ணத்துப் பூச்சி
பறக்க எத்தனிக்கிறதா
புரண்டு படுக்கிறதா
சரியாகத் தெரியவில்லை
சிக்னலை நோக்கி விரையும் வாகனங்களின்
ராட்சசச் சக்கரங்களிடமிருந்து
எப்படித் தப்பிக்குமோ
மனசு கிடந்து அடித்துக் கொள்ள
அதன் மஞ்சள் நிறத்தைக் கையிலேந்தி
பொத்திப் பாதுகாத்துப்
பறக்க விடுகிறான்
தடுமாறியபடி
முகம் மழிக்காத குடிகாரனொருவன்
தன் சின்னஞ்சிறு ரெக்கைகளின் வனப்பை
ஊருக்குக் காட்டியபடி
பறந்து கொண்டிருக்கிறது
வண்ணத்துப் பூச்சி
போதையில்
(ரமேஷ் வைத்யாவிற்கு)
கார்காலக் குறிப்புகள் - 59
5 days ago
41 comments:
அருமை
அர்ப்பணிப்பும் சூப்பர்
அன்னிக்கு என்னிய குறு குறுன்னு பார்த்தது நீங்க தான்னு இன்னிக்கு கவிதைய பார்த்தவுடன் தான் தெரியுது....
குடிகாரர்களுக்கு என்னிக்குமே இளகிய மனசு தாண்ணே...
\\மனசு கிடைந்து \\
மனசு கிடந்து..!
\\காட்டிபடி\\
காட்டியபடி..!
உங்களுக்கு விளக்கம் சொல்லிச்சொல்லியே நான் ஓஞ்சுருவேன் போலயே..!
:)
ஜ்யோவ்ராம் சுந்தர் Said.
மாற்றிவிட்டேன் டக்ளஸ்.. நன்றி.
மிகச்சிறந்த கவிதை சுந்தர்ஜி..
கண்முன் விரிந்தது பட்டாம்பூச்சியின் சிறகுகள்.. :)
"முகச்சவரம்"ன்னு சொல்லலாம்.
எப்பிடி "முகமழித்தல்"ன்னு சொல்ல முடியும்.
அப்போ, முகத்தையே மழிச்சுருவீங்களா..?
மீசை மழித்தல், தாடி மழித்தல்ன்னு சொல்லலாமா..?
ச்சே, திரும்ப திரும்ப மயிரு மேட்டரே வருதே..!
What Can I do...?
தோரியத்தை சொற்களாக்கி
வைத்திருக்கும் எலும்புகளால் ஆன மதுக்குடுவை
சித்தனின் புதைவிடமாக்கி வைத்திருக்கிறது
தன் எழுதுகோலை
இடறிக் கொண்டே இருக்கிறது
ஏதேனும் ஒரு மின்னல் ஊற்றுக்கண்ணைத் திறந்தபடி
நிரப்பிக் கொண்டே இருக்கிறது கோப்பைகளை பிரியத்தால்
சேர்ந்தபடி இருக்கிறது வேடந்தாங்கலின் நாட் குறிப்புகள்
"உயரங்களின் ரசிகனுக்கு " அர்பணித்திருக்கும் இந்தக் கவிதை
அழகு ..!
டக்ளஸ், எனக்கு முகச் சவரம் என்றால் ஒரு பொருள், முகம் மழித்தல் என்றால் வேறு பொருள். தந்தை என்றால் வேறு அர்த்தம், அப்பா என்றால் வேறு அர்த்தம். அவ்வளவு ஏன், மையம் என்பதை நடுவில் என்பதற்கும் மய்யம் என்பதை இதுவா அதுவா எனத் தெரியாத நிலைக்கும் உபயோகிப்பேன்.
சரியான சொல்தேடி வார்த்தைகள் நிறைந்திருக்கும் அடர்ந்த காட்டில் திக்குத் தெரியாமல் அலையும் சிறுவன் நான்.
நா பின்னூட்டம் போடுவேன்.நீங்க ஆபாசம்னு ....
கவிதை சூப்பரு..
rompa nalla irukku.
verenna solrathunnu theriyalai
rompa nalla irukku
கவிதை அழகு.
அதைவிட டக்ளஸுக்கான உங்கள் பதிலூட்டம் கவிதையைவிடவும் அழகு.
என் தோளில் உங்கள்
பட்டாம்பூச்சியின் மஞ்சள்...
இப்போது நான் போதையில்..
நல்லாயிருக்கு ஐயா
நல்ல ரசனையான கவிதை சுந்தர்ஜி.!
கவிதையின் எளிய அழகியல் என்னைக் கவர்கிறது
நல்ல கவிதை சுந்தர்ஜி.
நீங்கள் பார்த்த வண்ணத்துப் பூச்சியும் நான் பார்த்ததும் வேறுவேறானலும் அடிபடை உணர்ச்சிகள் ஒன்றல்லவா?
அந்த உணர்வுத்தூண்டல் இக்கவிதையில் சாத்தியப்பட்டிருக்கிறது.
//முகம் மழிக்காத குடிகாரனொருவன்//
யாரையோ சொல்றமாதிரி இருக்கே!
ஒரு கட்டிங் அடிச்சா போல இருந்துச்சு.
கவிதை பிரமாதமா வந்திருக்கு.
வரிகளில் காட்சி படிமம்.
(கவிதையின் ஆரம்பத்தில் வரும் பட்டாம்பூச்சியின் போதை இல்லையெனில் இன்னும் போதை கூடுமோ..!! இது இச்சிறியோனில் எண்ணம் மட்டுமே)
நல்லாயிருக்குங்க... ஆனா முதல் வாசிப்பிலேயே புரியுதே.. வேற ஏதாவது ப்ளாக்குக்கு வந்துட்டோமோ!!! ;)
அந்த முகம் மழிக்காத தாடிக்காரன் யாருங்க>?
and is this a parody
கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.
"பறக்க எத்தனிக்கிறதா
புரண்டு படுக்கிறதா
சரியாகத் தெரியவில்லை"
Super!
\\ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
டக்ளஸ், எனக்கு முகச் சவரம் என்றால் ஒரு பொருள், முகம் மழித்தல் என்றால் வேறு பொருள். தந்தை என்றால் வேறு அர்த்தம், அப்பா என்றால் வேறு அர்த்தம். அவ்வளவு ஏன், மையம் என்பதை நடுவில் என்பதற்கும் மய்யம் என்பதை இதுவா அதுவா எனத் தெரியாத நிலைக்கும் உபயோகிப்பேன்.
சரியான சொல்தேடி வார்த்தைகள் நிறைந்திருக்கும் அடர்ந்த காட்டில் திக்குத் தெரியாமல் அலையும் சிறுவன் நான்.\\
ஹலோ, ராங் நம்பர்ன்னா ராங் நம்பர்ன்னு சொல்லுங்க..
அத விட்டுட்டு ராங்கா பேசுனா என்ன அர்த்தம்..!
\\ பரிசல்காரன் said...
கவிதை அழகு.
அதைவிட டக்ளஸுக்கான உங்கள் பதிலூட்டம் கவிதையைவிடவும் அழகு.\\
ஒய், எரியுற ஃபயர்ல ஆயில் ஊத்திங்....?
:)
//தன் சின்னஞ்சிறு ரெக்கைகளின் வனப்பை
ஊருக்குக் காட்டியபடி
பறந்து கொண்டிருக்கிறது
வண்ணத்துப் பூச்சி
போதையில்//
கவிதைக் கோப்பை பெருகி வழிகிறது இவ்வரிகளில்!!
போதையில பறக்கிற வண்ணத்துப்பூச்சி :)
நல்லாயிருக்குங்க சுந்தர் கொஞ்சம் போதையை குறைச்சுக்க சொல்லுங்க
அருமை.
////முகம் மழிக்காத குடிகாரனொருவன்//
யாரையோ சொல்றமாதிரி இருக்கே//
ஒசாமா பிலேடனா இருக்குமோ?
அது ஏன் ரமேஷ் வைத்யாவுக்கு?
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
அருமையான கவிதை சுந்தரா...எனக்கும்தான்,நண்பர் D.R.Ashok அவர்களே!...
//சரியான சொல்தேடி வார்த்தைகள் நிறைந்திருக்கும் அடர்ந்த காட்டில் திக்குத் தெரியாமல் அலையும் சிறுவன் நான்//
யாரு, நீங்களா? நம்பிட்டோம் :-)
கலவையான வரிகளில் காட்சிகள் கண்முன்.
அருமை. அந்த நல்ல ஊரு எங்க இருக்கு? :-)
முரளிகண்ணன், நையாண்டி நைனா, டக்ளஸ், நிலாரசிகன், நேசமித்ரன், தண்டோரா, கார்த்திகேயன், மண்குதிரை, பரிசல்காரன், இரவுப் பறவை, அத்திரி, ஆதிமூலகிருஷ்ணன், நந்தா, வடகரை வேலன், வால்பையன், வினாயக முருகன், முத்துராமலிங்கம், அஷோக், கேபிள் சங்கர், யாத்ரா, ரானின், ராதாக்ருஷ்ணன், கார்டின், கென், நர்சிம், தமிழன் - கறுப்பி, ராஜாராம், முபாரக், துபாய் ராஜா, உழவன்... நன்றி.
kudiyum kudiyai kaappaatrum pola:)
அறிவாளிகள் நிரம்பிய தமிழ் வலையுலகம்
-------------------------------
நாள் முழுவதும் அலுவலகத்தில்
கணினியின் நிழலில்
எழுதும் அசை எனும் போதையில் கிடக்கிறது வண்ணத்துப்பூச்சி
பக்கம் பக்கமாக தெரிந்ததையெல்லாம் பரப்ப நினைக்கிறதா
இல்லை புரியாததை எல்லாம் துரத்த நினைக்கிறதா
சரியாகத்தெரியவில்லை
பல சிந்தனை சிர்ப்பிகளிடம் தரும் வாரணங்கள்
இராத்தூக்கம் கெட்டு பலர் போடும் ரம்பமான தோரணங்கள்
இவர்களிடம் எப்படி தப்பிக்குமோ
மனசு கிடந்து அடித்துக்கொள்ள
அதன் neuron களை கையிலேந்தி
பொத்திபாதுகாத்து
மேலும் ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதமென
பறக்கவிடுகிறான், பழிவந்தாலும் பரவாஇல்லை என்று
இந்த அறிவார்ந்த அற்புதன்
நாள் கடந்தால் என்ன, வாய் உலர்ந்தால் என்ன,
கை சிவந்தால் என்ன, செவி சிதைந்தால் என்னவென்று
பறந்து கொண்டிருக்கிறது வண்ணத்துப்பூச்சி
தினசரி காலையில் மாலையில் அதன் பாதையில்,
அடங்கா எழுத்து போதையில்
(இது திரு ஜோவ்ரம் சுந்தருக்கு இல்லை)
நன்றி
இப்போதான் வாசிக்கிறேன். :)
Post a Comment