முன் அறிவிக்கப்படாத
கணமொன்றில் நிகழ்ந்தது அது
அழகற்றது
உணர்ச்சிக் குவியல்
ஏற்கனவே சொல்லப்பட்டதன்
சரியாய்த் தெரியாத நகல்
உயிரற்றது பாசாங்கானது
தோலால் மூடப்பட்ட எழும்பாத குறி
ஆபாசச் சிரிப்பு
பொருளற்ற வார்த்தை ஜாலம்
அற்புதமானது அழகானது உண்மையானது
முன் அறிவிக்கப்படாத கணங்களில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது
(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/08/blog-post.html)
கார்காலக் குறிப்புகள் - 59
5 days ago
14 comments:
மதிப்பிற்குரிய ஜ்யோவ்ராம் சாருக்கு,
என் தளத்தில், தக்க பின்னூட்டமிட்டமைக்கு நன்றி! வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலமாக, செமினார் நடத்துவது குறித்த சாத்தியங்களை அலசி பாருங்களேன்.
என் பயிற்சி சிறுகதை(நான் இடுகையில் குறிப்பிட்டிருந்தது) இங்கே:
http://sumazla.blogspot.com/2009/08/blog-post_6112.html
முடிந்தால், நிறை குறைகளை சுட்டி காட்டுங்கள். என் எழுத்தை செம்மைபடுத்த உதவுங்கள்.
ஆஹா
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க
//பாசாங்கு // ம்ம்ம்'
போங்க ஜி!
எனக்கு வெட்கமா இருக்கு!
சுமஜ்லா, நன்றி. சிறுகதை குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.
நேசமித்ரன், நன்றி.
வால்பையன், நன்றி.
கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.
ஜ்யோவ்சார்,
என்னோட கதை எழுதும் முயற்சி+பயிற்சி கடைசியில இப்படி காமடி கலாட்டாவுல முடியும்னு நினைக்கல். சிரிச்சு, சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு. பாருங்க இந்த லின்க்ல http://sumazla.blogspot.com/2009/08/blog-post_12.html எதாவது தப்பிருந்தா சொல்லுங்க, நானும் நந்தவேரனும் ஆளுக்கு நாலு தோப்புகரணம் போட்டுடறோம்.(”சுமஜ்லா , சந்தடி சாக்குல, என்னையும் இப்படி இழுத்து விடறீங்களே, இது நியாயமா?” நொந்தவேரன்)
அப்படியே சிவராமன் அண்ணாச்சிய பார்த்தா, அவர் காதுலயும் இந்த மேட்டர போட்டுடுங்க(என் கதைப்படி அவர் தூங்க ஆரம்பிச்சவர் இன்னும் எழுந்திரிக்கல, அதான்)
நன்றி, யாத்ரா.
நன்றி, சுமஜ்லா. படித்தேன் :)
ஆஹா ...
சார், ப்ளீஸ் இதையும் கொஞ்சம் பொறுமை படிச்சு பாருங்களேன். ரொம்ப தொந்தரவுன்னு நினைக்க மாட்டீங்கன்ற நம்பிக்கை தான். காரணம் நீங்க முதன்மையா ஒரு வாசிப்பாளன்னு சொல்லி இருக்கிங்க!
லின்க் தர மறந்து விட்டேன் : http://sumazla.blogspot.com/2009/08/blog-post_2506.html
//
அற்புதமானது அழகானது உண்மையானது
முன் அறிவிக்கப்படாத கணங்களில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது
//
வழமை போல...நல்லாருக்கு...
சரியாக பின்னுட்டங்களூம் 11 தான்.முன் மற்றும் மீள் பதிவிற்கு(இதை பிரசுரித்தால் இதற்கு 12)
yethu?
நந்தா, சுமஜ்லா, அது சரி, தண்டோரா, ரசிகை... நன்றி.
Post a Comment