அஸ்தமன வாசலில்

எதையும் இசைக்காத போதும்
உன்னிலிருந்து பீரிடுகிறது
உன்மத்தமான இசையின்
உயிர் ஒலி.
எல்லையில்லா வெளிகளில்
எரிந்து கொண்டிருக்கிறது
வெளிப்படுத்திய விசேடங்கள்.
சிதறிக் கிடக்கும் உறுப்புகளில்
தன் கை தேடி
சீழ்பிடித்த உடலுடன்
ஒரு சமூக அவலர்.
சட்டங்களெல்லாம் அறையப்பட்டுவிட்டன
மரச்சட்டங்களில்.
நலத்திட்டங்களுக்காக
நகராத வரிசைகளில்
நாட்கணக்கில்...
ஆனாலும்
மறுவாழ்வு குறித்து
மாநாடு கூட்டினோம்
சாண்ட்லியர் வெளிச்சத்தில்
சாராயம் அருந்திக் கொண்டு.

குமார்ஜி எழுதியது

12 comments:

மணிஜி said...

டிபிக்கல் ஜியோவ்ராம்

மண்குதிரை said...

kumarji kavithaikalai atikkati publish seykireerkal

yar ivar?? :-)

ithu avarodo(?) kavithaila vera maari irukku

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தண்டோரா. என்னுடைய கவிதை மாதிரியா இருக்கிறது குமார்ஜி எழுதியது?

நன்றி, மண்குதிரை. குமார்ஜி என்னுடைய நண்பர். கன்யாகுமரி அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். வலைப்பதிவுலக பா ராஜாராமுக்கும் நண்பர்.

Ashok D said...

//குமார்ஜி என்னுடைய நண்பர். கன்யாகுமரி அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். வலைப்பதிவுலக பா ராஜாராமுக்கும் நண்பர்.//

நானும் ’மண்குதிரை’ மாதிரி நினைச்சேன். இப்போ தெளிவாயிடுச்சு..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அஷோக்.

யாத்ரா said...

ரொம்பப் பிடித்திருக்கிறது, பகிர்வுக்கு மிக்க நன்றி.

Kumky said...

பதிவை போலவே உங்க நண்பர் ராஜாராமின் பின்னூட்டங்களும் எதிர்பார்ப்பை உருவாக்கிவருகின்றன.
அதிலுள்ள ஆழ்ந்த நட்பு இழையோடும் மெல்லிய நகைச்சுவை உணர்வுக்காகவே....

கவிக்கிழவன் said...

நல நட்புதான் போங்கோ

குப்பன்.யாஹூ said...

எப்போதும் போல குமாரர்ஜி கலக்கல்

சங்குத் துறை பக்கம் இருந்துக்கிட்டு சாண்டலியர் பத்தி எல்லாம் எழுத முடியுது.

எனக்கு எட்டயபுரத்து பாரதி தான் ஞாபகம் வரான்.

எட்டயபுரம், இளம்புவனதுல இருந்துட்டே பாரதி எடின்பர்க் பத்தி எல்லாம் எழுதின ஆளு.

பகிர்வுக்கு நன்றி சுந்தர்.

அப்புறம் சென்னை சிறுகதை பட்டறை சிறப்பாக நடந்ததற்கு வாழ்த்துக்கள், நன்றிகள் சுந்தர்.

பா.ராஜாராம் said...

அபாரமான கவிதை சுந்தரா!அலை பேசணும் குமரனுக்கு..வாஸ்த்தவம்தான்,மணிகண்டன், மண்குதிரை,அசோக்.பகிர்வுக்கு நன்றி சுந்தரா.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

யாத்ரா, கும்க்கி, கவிக்கிழவன், ராம்ஜி யாஹூ, ராஜாராம்... நன்றி.

விநாயக முருகன் said...

மறுவாழ்வு குறித்து
மாநாடு கூட்டினோம்
சாண்ட்லியர் வெளிச்சத்தில்
சாராயம் அருந்திக் கொண்டு.

பிடித்திருக்கிறது, பகிர்வுக்கு நன்றி.