இப்போது இணையத்தில் தொடர்ந்து இயங்க முடியாது ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். இது நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும். அதனாலேயே ஒன்றும் எழுதத் தோன்றவில்லை.
வினவு பதிவைப் படித்தேன். பின்னர் அதை பைத்தியக்காரன்தான் எழுதியது எனத் தெரிந்ததும் மனம் நொந்து போனேன். ஒரு நாள் முழுவதும் யோசித்துவிட்டு நேற்று காலை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவருடைய சமீபத்திய வழக்கப்படி அந்தத் தனிப்பட்ட கடிதத்தை / அல்லது அதன் contentஐயும் வினவுக்கு அனுப்பியிருக்கிறார். இவ்வளவு நாள் பழகிய நண்பன் தனிப்பட்ட முறையில் ஒன்றை எழுதினால் அதை எப்படி அடுத்தவர்களுக்குக் கொடுக்க முடிகிறது எனத் தெரியவில்லை. இப்போது அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள். அது ஒன்றும் மிகப் பெரிய ரகசிய ஆவணமல்ல என்பதால், நானே அதைக் கீழே கொடுத்துவிடுகிறேன் :
அன்புள்ள பைத்தியக்காரன்,
நீங்கள் நர்சிம்மிற்குச் செய்திருப்பது பச்சை துரோகம். சமீபத்தில் கிடைத்த பெண் நட்புக்காக இரு வருடங்களாகப் பழகிய ஆண் நட்பைக் கொல்கிறீர்கள். அரசியல் ரீதியாகவும், தகவல் ரீதியாகவும், இரட்டை வேடம் குறித்தும் கேள்வி கேட்க நிறைய இருக்கிறது உங்களுடைய அந்த வினவு பதிவிலும் உங்கள் தளத்தில் வெளியான பதிவிலும்.
என்னுடைய தற்போதைய சூழ்நிலை காரணமாக என்னால் விரிவாக எழுத இயலவில்லை. நீங்கள் இப்போது என்னைப் பற்றி எழுதவில்லை என்றாலும், நாளை உங்களுடைய வேறு ஏதாவது பெண் நண்பர்களுடன் எனக்குப் பிணக்கு வந்தால் நீங்கள் அதை எனக்கும் செய்யலாம் என்று பயமாயிருக்கிறது.
நம்முடைய நட்பை முறித்துக் கொள்வதுதான் எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. இதுவரை என்னுடன் நட்புடன் பழகியதற்கு நன்றி.
--
அன்புடன்,
ஜ்யோவ்ராம் சுந்தர்
அவர் தன்னுடைய இரட்டை வேடம் குறித்து எதுவும் பதில் சொல்லவில்லை. அதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கும் மனநிலையில் நானில்லை. என்னுடைய தளத்தில் வெளியான சுகுணா பதிவைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வினவில் எழுதக்கூடாது என்பதில்லை, ஆனால் பைத்தியக்காரன் பதிவில் ஒருவிதமாகவும் மற்ற பெயரில் வேறு விதமாகவும் எழுதுவதைத்தான் இரட்டை வேடம் என நினைக்கிறேன். ஆனால் இது பற்றிக்கூட இப்போது விவாதிக்கும் நிலையில் நானில்லை.
இவரே பண விஷயம் குறித்து எழுதிவிட்டதால் அது பற்றி மட்டும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. திங்கட் கிழமை வினவு பதிவு வெளியான அன்று இரவு இவர் தன்னுடைய தளத்தில் நர்சிம் பண விவகாரம் குறித்து எழுதுகிறார். அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது (ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை). வினவு பதிவில், பணத்தைத் தின்று, பணத்தை மலங்கழித்து, பணத்தில் குளிக்கும் நர்சிம் என்ற வரிகளைப் படிக்கையில் துணுக்குற்றேன். இவருடைய பணத்தேவையின் போது நர்சிம் எப்படிக் கஷ்டப்பட்டு பணத்தைப் புரட்டிக் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும். அப்படிப் பெற்ற உதவியைக்கூட இப்படியெல்லாம் வன்மம் தெறிக்க எப்படி எழுத முடியும்?
அவரது பதிவில் உள்ள வேறு சில விஷயங்களும்கூட என்னை அதிர்ச்சி அடைய வைத்தன (அதில் ஒன்று நான் சாதி காரணமாகத்தான் நர்சிம்முடன் பழகினேன் என்பது மாதிரி ஒரு வரி - நர்சிம் முதலில் என்னுடன் பழக ஆரம்பித்தபோது அவர் என்ன சாதி என்றே எனக்குத் தெரியாது - அவர் ஒரு முறை மெயில் அனுப்பும்போது அதில் உள்ள நரசிம்மன் என்ற பெயரை வைத்து ஒரு மாதிரி யூகித்தேன், அவ்வளவுதான்). அந்த ஒரு வருட வரலாறுகூடப் பக்கச் சார்பானதுதான். ஆனால் சம்பந்தப்பட்ட யாராவது விரும்பினால் பதில் எழுதிக் கொள்ளட்டும். போன வருட தீபா விஷயத்தைப் பற்றியும் எழுதியிருப்பதுதான் வேடிக்கை. ஏனெனில், பைத்தியக்காரனும் தீபாவைக் கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தார் அப்போது. சரி, இதையும் இரட்டை வேடம் என்று விட்டுவிட வேண்டியதுதான்.
நானும் நர்சிம்மும் நெருங்கிய நண்பர்களில்லை. யாராவது குடி வாங்கிக் கொடுத்தார் என்று எழுதிவிடுவார்களோ என பயமாயிருக்கிறது. ஒரே ஒரு முறை - அதுவும் போன வருடம் ஜனவரி மாதத்தில் - அவருடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் மது அருந்தியிருக்கிறேன். அப்போது பைத்தியக்காரனும் உடனிருந்தார். நர்சிம்மைப் பதிவர் சந்திப்புகளில் மட்டுமே சந்தித்திருக்கிறேன். ஒரே ஒரு முறை நான் மருத்துவமனையில் இருந்தபோது பைத்தியக்காரனுடன் தன்னுடைய புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். வேறு தனிச்சந்திப்புகள் இருந்ததில்லை.
பைத்தியக்காரனின் நேற்றைய பதிவில் என்னைப் பற்றிப் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்ததைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னுடைய கடிதத்தை அல்லது அதனுடைய கண்டெண்ட்களை வினவுக்கு கொடுப்பது என்ன மாதிரியான காரியம் என்று தெரியவில்லை.
அவருடைய கடவுச்சொல் என்னிடம் கொடுத்திருப்பதாக ஏற்கனவே எழுதியிருக்கிறார். நான் தான் அதை சுகுணாவுக்குக் கொடுத்தேன் என்று சூசகமாகச் சொல்கிறார். வினவிலும் அதே மாதிரி எழுதியிருக்கிறார்கள். மற்றவர்களும் அதை நம்பலாம். அதற்காக இந்த விளக்கம் : அவருடைய கடவுச் சொல்லை எனக்கு மட்டும் தெரிந்தே பைத்தியக்காரன் நான்கைந்து வலைப்பதிவர்களிடம் கொடுத்திருக்கிறார். என் நெஞ்சில் கைவைத்துச் சொல்ல முடியும் அதை நான் செய்யவில்லை என்று.
எனக்கு நர்சிம்மைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ஒன்றுமில்லை. அவரது அந்தப் பதிவைப் படித்த உடனே பைத்தியக்காரனிடம் தொலைபேசியில் நர்சிம்மின் நுண்ணுர்வற்ற தன்மையையும் ஆண் திமிரைப் பற்றியும் 5 நிமிடம் பேசிவிட்டே, பிறகு, ’நேற்றே சொன்னேனே ஏதாவது பிரச்சனை வரும்னு, பாத்தீங்களா, ஏன் அந்தம்மா இப்படிச் செஞ்சாங்க’ என்றும் கேட்டேன். அது என்னுடைய உடனடி எதிர்வினை. ஆனால் யோசித்த பிறகு என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே செய்தேன். மதியம் சந்தித்தபோதும் நர்சிம்மை விமர்சித்தே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சந்தன முல்லை பற்றிப் பேச நேர்ந்த எப்போதும் அவரை அவள் இவள் என்று குறிப்பிட்டதில்லை. ஏன், எந்தப் பெண் பதிவரையும் தனிப்பட்ட பேச்சுகளின்போதுகூட ஒருமையில் யாரைப் பற்றியும் பேசியதில்லை. அதனால் அவரது பதிவில் உள்ள /நர்சிம்முக்கும் எனக்கும் நெருக்கமான நண்பரிடம், நர்சிம்மின் இந்த செய்கையை கண்டித்தபோது, 'அவளுக்கு இது வேணும்...' என்றார்./ என்ற வரி என்னைக் குறித்ததாக இருக்காது என நம்புகிறேன். இது குறித்து சிலர் என்னிடம் தொலைபேசியில் விசாரித்ததால் இந்த விளக்கம். சந்தேகமே இல்லாமல் நர்சிம் செய்தது ஆண் திமிரிலும் பார்ப்பனத் திமிரிலும்தான் என்பதுதான் என்னுடைய தற்போதைய நிலைப்பாடு. ஆனால் அதற்காக அவரைக் கழுவிலேற்ற வேண்டும் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்னிடம் இல்லை.
நானும் பைத்தியக்காரனும் நெருங்கிப் பழகியவர்கள். மற்ற எல்லா வலைப்பதிவர்களையும்விட அவரைத்தான் அதிகமாக நேசித்தேன். ஒருவேளை அதனாலேயேகூட என்னுடைய அதிர்ச்சி அதிகமாயிருந்திருக்கலாம் என்றும் புரிகிறது. யாருடனும் சண்டை போட்டுப் பிரிவது எனக்கு உடன்பாடில்லை. ஆனால் எனக்குப் பயமாயிருந்ததால் நட்பை முறித்துக் கொண்டேன். அவ்வளவுதான். விளக்கம் சொல்லத் தோன்றியதால் இந்தப் பதிவு. பின்னூட்டங்கள் பைத்தியக்காரனுக்கு என்மீதும் வன்மத்தைத் தூண்டுவதாக அமையலாம். அதனால் அம்மாதிரியான பின்னூட்டங்கள் வேண்டாமே. நேரம் கிடைத்தால் மட்டுமே பதில் எழுத முடியும் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
கார்காலக் குறிப்புகள் - 63
3 days ago
29 comments:
கோரவையாகவும் தெளிவாகவும் எழுதவில்லை என படித்துப் பார்க்கும்போது உணர்கிறேன்.
இல்லாவிட்டாலும், இன்னும் சில நாட்களில் இந்த இடுகையை எடுத்தாலும் எடுத்துவிடுவேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
பகிர்தலுக்கும், உண்மையை உரைத்தமைக்கும் மிக்க நன்றிகள் ஜ்யோவ்..!
தொல்லை விட்டுச்சுன்னு விடுங்கண்ணே. உரையாடல் அமைப்பினை திறம்பட சில காலங்கள் பின்னர் நடத்துங்கண்ணே.
அன்பின் சுந்தர்,
இடுகைக்கு நன்றி. குறிப்பாக -
//பின்னூட்டங்கள் பைத்தியக்காரனுக்கு என்மீதும் வன்மத்தைத் தூண்டுவதாக அமையலாம். அதனால் அம்மாதிரியான பின்னூட்டங்கள் வேண்டாமே.//
இந்த வாக்கியத்துக்காக கோடானுகோடி நன்றிகள் ணா...
இந்த மறுமொழியை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பம்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
:(
நேர்மையான முடிவு.
நீங்கள் சொல்லவில்லையானாலும் கேள்விகள் ஆயிரம் மனதை குடைவதை புறந்தள்ள முடியவில்லை.
எதிரிகளைவிட துரோகங்களைத்தான் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாமலாகிவிடுகிறதல்லவா...
சாமி கஃப் ரொம்ப அதிகமாக அடிக்க ஆரம்பிக்கிறது....
இதை ஒர் இடத்தில் விட்டுவிட்டு வேறு வேலை பார்ப்போம் சாமி....
தோண்ட தோண்ட கஃப் தாங்க முடியலைடா சாமி
"ஓ"ட்டு போட்டுவிட்டேன் பாஸ்
அப்பாடி ஒரு வழியா சுந்தர் பதிவு போட்டார்..
சிவராமனுக்கு என்ன பிரச்ச்னையோ ஒன்னும் தெரியல..
பதிவர்களுக்குள்ளேயே சந்தேக கண்ணோடு பார்க்கும் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் சிவா..
நடந்த வெறித்தனமான சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தமைக்கு நன்றிகள்.
நீங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டை கொடுத்திருப்பீர்கள் என்று நம்பவில்லை. அது யார் என்று எனக்கு தெரியும்.
நீங்கள் பதிவு போடாவிட்டாலும் உரையாடியில் கேட்கலாம் என்று இருந்தேன். நன்றி.
//செந்தழல் ரவி said...
நீங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டை கொடுத்திருப்பீர்கள் என்று நம்பவில்லை. அது யார் என்று எனக்கு தெரியும்.
//
:))
அடுத்த பிரச்சினைக்கு வித்தா ரவி?
பாஸ்வேர்ட் களவாடி(?!) மற்றவர்களிடம் தகவல் சொல்வது சைபர் கிரைமில் சேருமா ரவி?
Thanks for the psot
ஜாதி மதத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு 'வினவு' காரர்கள் அனைவருக்கும் இடையில் மதக் கலவரத்தை உண்டு பன்னுகிறார்கள்.
சுந்தர்ஜி இத்தனை விளக்கங்கள் தேவையேயில்லை. சிவராமன் தன் நட்புக்காய் செய்த எல்லாமே அவரின் மனதுக்கு ஒப்புதலாயிருக்கையில் நாம் எதற்கு வருத்தம் கொள்ளனும் .
உங்க வேலையை நீங்க பாருங்க ! அவரின் கொள்கையை அவர் பார்க்கட்டும் :(
Sreedharan from Sharjah said,
Better late than never !!
Atleast now you understood the colours of Sivaraman. Sure this will happen to you tomorrow or one day if you had continued your friendship with Coward liar Paithiyakkaran pachonthi Sivaraman.
In one of the comments Sivaraman said,as it is his office computer he cannot spit on it.
Let him spit on himself before the mirror in his house.
Thanks for your clarifications and for making your views very clear.
It is a tough choice but there are time when one has to take decisions with a heavy heart without wavering thoughts.
Time will heal the wounds but dont allow humans to deepen the wound further.Perhaps one day he will feel sorry for this folly and will apologise to those who have been hurt deeply.It may be too late by then.
take care. i believe you when you say that you were not responsible for the issue.
சந்தேகம் என்பது வருவது இயல்புங்க. அதுக்காக உங்க நட்பை சிவரமனுடன் முறிந்த்துக்கொள்வது தப்பு.
நட்புங்கிற இலக்கணம் வேறு. நடைமுறையில் அது வேறு
நரசிம்மை சப்போர்ட் பண்ணாமல் நியாயத்தின் பக்கம் அவர் போனது தப்பா? இல்லை!
அதை செய்தவிதம் தப்பு. அவர் நரசிம்மை தண்டித்ததற்காக நீங்க எல்லோரும் அவரை விட்டு ஓடுவீர்கள் என்று அவர் யோசிக்கவில்லை!
பாஸ்வேர்டை நம்பிக்கொடுத்த நண்பனே துரோகம் பண்ணினால்?
You know who can hurt you or sivaraman most? The closest one who knows his strength and weakness.
Well, I am sure sivaraman can survive without his backstabbing friends and you can survive without him too!
Let us move on! We all make mistakes or not?
Take care!
ஜ்யோவ்,
நீங்கள் என்ன மாதிரியான மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்கள் எனப் புரிகிறது.
இதுவும் கடந்து போவீர்கள்.
அதற்கான என் ஆதரவும், அன்பும்.
நந்தா.
இந்த பின்னூட்டத்தைத் தவறுதலாக சிதைவுகள் பதிவில் வெளியிட்டுவிட்டேன்.
என்ன ஒரு கொடுமையான குழப்பம். :(
நீங்கள் இந்த பதிவு எழுதி இருக்கா விட்டாலும் எனக்கு உங்கள் மீது அன்பும் மரியாதையும் உண்டு சுந்தர்.
இன்னும் எத்தனை பதிவர்கள் உங்களை பற்றி தூற்றி / பொய்யாக எழுதினாலும், எனக்கு உங்கள் எழுத்தை பிடிக்கும், உங்கள் தமிழை பிடிக்கும்.
வருத்தமே! :((
// என் நெஞ்சில் கைவைத்துச் சொல்ல முடியும் அதை நான் செய்யவில்லை என்று.//
இவ்வளவு சொல்ல தேவை இல்லைடா. உன்னை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.
நல்ல முடிவு..
உங்கள் முடிவு சரியானதே!
ராம்ஜி_யாஹூ-வின் பின்னூட்டத்தை வழிமொழியும் காலம் வரும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் வந்தே விட்டது. :-(
நான் ராம்ஜி_யாஹூ-வின் பின்னூட்டத்தை வழிமொழிகின்றேன். Take care Sundarji...
சிவராமன் எடுத்த முடிவு தவறு என காலம் உணர்த்தும்.வினவு கும்பலுடன் முரண்பட்டால் அவர்கள் அவரை அவதூறு செய்ய தயங்கமாட்டார்கள்.அப்போது அவரது பார்பனியமே குற்றச்சாட்டாகும் :).
நீங்கள் ஒதுங்கியிருப்பது நல்லது.இந்த சர்ச்சை தானே அமுங்கிவிடும்.சிவராமனுக்குத்தான் இதில் இழப்பு அதிகம்.நல்ல நண்பர்களை இழக்காமல், கொள்கையை கைவிடாமல் இதை கையாள முடியும்.
சிவராமனின் கட்டுரையை திருடி சுகுணா திவாகருக்கு கொடுத்துவிட்டு பொய் சொல்கிறீர்களே. இது நியாயமா? உண்மை வெளிவராது என்ற தைரியமா.
முல்லை பிரச்சனையை சாக்கிட்டு முடிந்த வரையில் நர்சிம்மின் வலையுலகம் சார்ந்த செயல்களை பார்பனியம் என்று காட்ட பைத்தியக்காரன் திரித்தவை மிகவும் அருவெருப்பானவை. அவ்வளவு சந்தேகத்துடன் இவர் பழகியதை நட்பு என்று கொள்வதற்கு இல்லை.
பைத்தியாகரனை விட்டு விலகிய உங்கள் உணர்வுகள் புரிந்து கொள்ளக் கூடியது சுந்தர்.
பிளவு சரி செய்யப்பட்டு விட்டது என்றே நம்புகிறேன்...
ஒரு ஆபாச பதிவுக்காக , ஒரு "நர" கல் பதிவரை காப்பாற்ற -எதிர்க்க என்று இரு நல்லவர்கள் பிரிவதை , ஓர் அமைப்பு சிதறுவதை தனிப்பட இழப்பாக கருதி வருந்தியவன் நான்..
இணைப்பு என்னும் இனிப்பு செய்தியை தனி பதிவாக இடவும்...
Post a Comment