காலையில் (அ) பு.பி.
குளியல் தொட்டியில்
சோப்பு நுரையினூடாக
தொலைபேசியில் பேசும்
புஷ்டியான நடிகையை
நினைத்துக் கொண்டு
பிளாஸ்டிக் வாளியிலிருந்து
சொம்பில் நீர் மோந்து
குளிப்பது சுகமானது
நினைத்தல் (அ) பு.போ.
மதியம் பார்த்த படத்தின்
நாயகியை நினைத்தபடி
(she was oozing sex)
புணர்கையில்
(i would like to cum on you)
தவறிப்போய் அவள் பெயர் உச்சரித்து
பயந்து போய் இவளைப் பார்த்தேன்
கண்கள் கிறங்க
எந்த நாயகனையோ நினைத்துக் கொண்டிருந்தாள்
வரிகள் வேறு மாதிரி இருக்கலாம்
கார்காலக் குறிப்புகள் - 60
3 days ago
25 comments:
மூனும் ரொம்ப பிடிச்சிருக்கு.(+1:தைரியம்!)
//நினைத்துக் கொண்டு
பிளாஸ்டிக் வாளியிலிருந்து
சொம்பில் நீர் மோந்து
குளிப்பது சுகமானது//
அடப்பாவி மக்கா....
//கண்கள் கிறங்க
எந்த நாயகனையோ நினைத்துக் கொண்டிருந்தாள்//
நம்மள மாதிரிதானே...விடுங்க....
நல்ல கவிதைகள்....
சுந்தர்,
முதல் கவிதை நன்றாக இருக்கிறது.
இரண்டாவது கவிதை வெகுசாதாரணமானது. கிட்டத்தட்ட துணுக்குக்கவிதை மாதிரியாகிவிட்டது. ‘அவலை நினைத்து உரலை இடித்தாற்போல‘ என்ற பழமொழி கூட ஒன்றிருக்கிறதே. இரண்டாவது கவிதை ரொம்பவே பழைய விஷயம்.
- பொன்.வாசுதேவன்
very nice..
thanks!!
டகீலாதான் எடுத்து வச்சிருக்கேன்னு சொன்னனே தலைவரே
அகநாழிகை பொன்.வாசுதேவன் சொன்ன கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன்
(அ) அபாரம்
அன்பான நண்பர் திரு ஜ்யோவ்ராம் சுந்தர்,
கவிதை எழுதும் வியாதி ஒன்று பரவுது பார்
கண்டதை எழுதி கவிதை இதுவே என்று கதருதுபார்
சத்திலா உரை நடை ஒன்றை எடுத்து
சொல் சொலாக சொத்தையாக அதையும் உடைத்து
கவிதை இதுவே என்றார் வெட்கமிலா
தமிழ் தாயும் ஓடினார் உங்களைக்கண்டு சத்தமிலா
கவிதை எழுத வேண்டுமென்ற ஆசையில் தப்பில்லை
ஆனால் நீங்கள் எழுதிய இந்த கிச்சடியிலோ உப்புச்சப்பில்லை
கவிதையென்று பெயரிட்டால் மட்டும் போதாது
இடம் விட்டு prose எழுதுவது கவிதை ஆகாது
நன்றி
கலக்கல் குருஜி
அவ்வ்வ்வ்வ்...
அட ஆமாம்ல!
:D
குளியல் தொட்டியில்
சோப்பு நுரையினூடாக
தொலைபேசியில் பேசும்
புஷ்டியான நடிகையை
நினைத்துக் கொண்டு
அடுத்து ஏதோ விவகாரமாக சொல்ல போகின்றீர்கள் என்று நினைத்தேன்.
பிளாஸ்டிக் வாளியிலிருந்து
சொம்பில் நீர் மோந்து
குளிப்பது சுகமானது
ஏமாற்றி விட்டீர்கள். ஆனால் இதுவும் சுகமாக இருக்கின்றது.
:)
\\மூனும் ரொம்ப பிடிச்சிருக்கு.(+1:தைரியம்!)\\
nice poems
'பெட்டைப்புலம்ப' லென்பான் பாரதி
'நபும்சக கோப' மென்பான் பித்தன்
தன் கணவன் தன் சுகத்தில்
தன் மனம் வேறானதுபோல்
- பொதிகைச்சித்தர்
துணையோடு புணரும்போது
மனபிம்பம் வேறுவேறாகும்.
என்ற வரிகளை சொல்லத்தோணுது சுந்தர் ஜீ
wow nice sundar ji
ரொம்ப நல்லாயிருக்கு
உங்க தைரியம் ரொம்பவே பிடிச்சிருக்கு...
நல்லா இல்லை :)- ரெண்டாவது கவிதையோட கடைசி வரி + ஆங்கில கலப்பு பராவாயில்லை !
இன்னமும் ஸ்ட்ராங்கா எதிர் பார்த்தேன் தல
ஏமாத்திடிய போங்க :)
//எந்த நாயகனையோ நினைத்துக் கொண்டிருந்தாள்//
சூப்பரு....
கவிதை கலக்கல்!
தல! நம்ம ப்ளாக்கையும் கொஞ்சம் பாருங்க. இப்போதன் களத்துல குதிச்சிருக்கோம்
நுணுக்கமா சில விஷயங்கள் பதிவு செஞ்சிடறீங்க :)
ம்ம்... அ-கவிதை எல்லாம் இப்ப எழுதறது இல்லையா நீங்க?
ராஜாராம், பாலாசி, அகநாழிகை, கார்த்திகேயன், தண்டோரா, நந்தா, உழவன், நோ, முரளிகண்ணன், சூரியன், வால்பையன், சாம்ராஜ் ப்ரியன், விநாயக முருகன், யாத்ரா, நேசமித்ரன், குப்பன் யாஹூ, JP, கும்க்கி, மணிகண்டன், பாலா, புலவன் புலிகேசி, விந்தைமனிதன், ஸ்ரீதர் நாராயணன் ... நன்றி.
ரொம்ப தைரியமா எழுதுறீங்க
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com
Post a Comment