எதையும் செய்யாமல்
சும்மா இருக்கச் சொன்னான் மாரி
சும்மா இருந்து எனத் துவங்கும்
சுந்தர ராமசாமியின்
கவிதையை மனப்பாடமாக ஒப்பித்தான்
செய்தலுக்கும் உருவாக்குதலுக்குமான
வித்தியாசக் குழப்பத்தில்
உருவாக்கியிருக்கிறேன்
இந்த ஒன்பது வரிகளை
கார்காலக் குறிப்புகள் - 60
3 days ago
18 comments:
அன்பின் சுந்தர்,
காமக் கதைகள் ''45'', //இந்த ஒன்பது வரிகளை// என தொடரும் விளையாட்டு சுவாரஸ்யமாகவே இருக்கிறது. /வித்தியாசக் குழப்பத்தில்/ வரி எங்கெங்கோ என்னை இழுத்துச் செல்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
சும்மா தான்
எதையுமே அடிக்காமல்
தள்ளி இருக்கச் சொன்னான் பாவி
கள்ளானாலும் கூடிக் குடி என கூறும்
மொக்கசாமியின்
கவுஜைய 'மொலி' பெயர்த்து ஒப்பித்தான்
அடித்தலுக்கும், குடித்தலுக்குமான
வித்தியாசக் குழப்பத்தில்
உறிஞ்சி இருக்கிறேன்
இந்த ஒன்பது கோப்பைகளை.
சும்மா பின்னிட்டீங்க
பைத்தியக்காரன் said..
அன்பின் சுந்தர்,
//காமக் கதைகள் ''45'', //இந்த ஒன்பது வரிகளை// என தொடரும் விளையாட்டு சுவாரஸ்யமாகவே இருக்கிறது. /வித்தியாசக் குழப்பத்தில்/ வரி எங்கெங்கோ என்னை இழுத்துச் செல்கிறது.//
ஆம்.
அருமை
தமிழ் திரை பாடல் உண்டு
பய்யன் ஒருத்தன் சும்மா சும்மா
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா
சும்மா???
நல்ல கவிதை.
சும்மா இருத்தல் செய்தல் உருவாக்குதல் வித்தியாசக்குழப்பம் ஒன்பது வரிகள்,,,,,,,, அருமை.
புரியும் நொடியில்..ஆஹா..
யார் சம்”மதமு”மில்லாமல்
இப்ப பத்து வரியாயிருச்சு!
//செய்தலுக்கும் உருவாக்குதலுக்குமான
//
ஒன்பது கருத்துரைகளுக்குப் பிறகு வாய்த்திருக்கிறது இந்த வரிகளை எழுத எனக்கும்
”சு” வரிசை மொழிவிளையாட்டு
பிடித்திருக்கிறது ஜி
சும்மா இருப்பதே சுகம் என்றார் ஓர் ஆன்றோர்
செய்தலுக்கும் உருவாக்குதலுக்குமான
வித்தியாசக் குழப்பம்
அருமை சுந்தர்
Well 'Manufactured' poem sir. :-)
அங்கே படித்தப் பிறகு தான், இங்கேயும் புரிவது போல் இருக்கிறது,
வரிகளா வசைகளா ?
வாயடைத்ததால் வரும் முனகல்களா ?
கொட்டாவிக்கு வாய்திறக்கும் போது
விடை கிடைக்கலாம்,
கிடைக்காமலும் போகலாம் !
:)
பைத்தியக்காரன், நர்சிம், நையாண்டி நைனா, ராதாகிருஷ்ணன், ராஜாராம், குப்பன் யாஹூ, தண்டோரா, யாத்ரா, அஷோக், மண்குதிரை, வால்பையன், நேசமித்ரன், லதானந்த், விநாயக முருகன், கார்த்திகேயன், கோவி கண்ணன்... நன்றி.
"செய்தலுக்கும் உருவாக்குதலுக்குமான" சூட்சுமமான இடைவெளி... நல்லாருக்கு
நன்றி, கிருத்திகா.
Post a Comment