அவசர கை நகர்த்தலில்
கோப விட்டெறிதலில்
அடியிலிருக்கும் பேப்பரை உருவுகையில்
எப்படியோ உடைந்து விடுகிறது
மரப்பாச்சி பொம்மைகள்
சும்மா இருப்பதா ஏதாவது செய்வதா
படைப்பதா உருவாக்குவதா
ஒன்றும் புரியாமல்
எழுதியிருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை
கார்காலக் குறிப்புகள் - 60
3 days ago
23 comments:
செய்தல், சும்மா இருத்தல் போலவே இதுவும் ஒன்பது வரிகள் வருகின்றது. முன்பே ஒன்பது வரிகளை தீர்மானித்து எழுத ஆரம்பித்தீர்களா?
வேகமும்,கோபமும் பின்னே நானும் என் குழப்பமும்...
இது என்ன?
குருஜி,
எனக்கு ஒண்ணுமே புரியலை.
கொஞ்சம் விளக்குங்களேன்.
அருமையாய் இருக்கு சுந்தரா.அதென்ன ஒன்பது வரி கவிதைகளா?..பத்து வரி கவிதை போட்டி வார்ம்-அப்?
புரியலயே.... :(
இந்த ஒன்பது வரிசைக் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு mood ஐ அருமையாகக் காட்சிப்படுத்தி பலவாறு உள்விரிந்து செல்கிறது, தொடருங்கள்.
nice sundarji
ஒன்பது வரிக்கவிதைகள் தொடரட்டும்
கவிதை நிகழும் கணங்கள்..
விநாயக முருகன், ப்ரியமுடன் வசந்த், அதிஷா, உலகநாதன், ராஜாராம், செந்தில் நாதன், யாத்ரா, குப்பான் யாஹூ, மண்குதிரை... நன்றி.
@ உலகநாதன் & செந்தில்நாதன்... புரியாவிட்டால் பரவாயில்லை :) கவிதையை விளக்குவதுபோல சள்ளை பிடித்த வேலை வேறொன்றுமில்லை.
ஒரு ஒன்பது ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?
//கவிதையை விளக்குவதுபோல சள்ளை பிடித்த வேலை வேறொன்றுமில்லை.//
அந்த நேரத்துக்கு நாலு பத்து பாத்திரமாவது விளக்கலாம். எப்படியெல்லாம் கிண்டல் பண்றனுங்கப்பா !!!!!
லட்டு
ஆமாம் ஜ்யோவ் நம்மால் சும்மா இருக்கவே முடிவதில்லை தான் :)
ம்ம்ம் ...
சாதா தலைவலிதான் -ஆனாலும்
ஈட்டி வீசியது போலிருந்தது
அனுஜென்யா ஜ்யோவ்ராம் படி
என்றான் நண்பன் ஆதி
படித்து முடித்தேன் பறந்தது
என்னையே கிள்ளிப் பார்த்து
எப்படிடா இதென்று வியந்தேன்
minus into minus plus -என்று
சிரித்தான் அந்தக் காலி
தண்டோரா, லட்டு, நந்தா, வளர்மதி, அனானி... நன்றி.
//சும்மா இருப்பதா ஏதாவது செய்வதா
படைப்பதா உருவாக்குவதா
ஒன்றும் புரியாமல்
எழுதியிருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை
//
இந்த நாலு வரிகள் கவிதை ஒன்பது வரிகள் வந்தே ஆகணும்ன்னு எழுதப்பட்டதா?
குழப்பம்
KVR, T V Radhakrishnan... நன்றி.
கவிதை நல்லா இருக்கு ஜி.
எட்டு தொகை
பத்து பாட்டு
பதினெண் கீழ் கணக்கு
வரிசையில் இந்த
ஒன்பது வரி பாட்டு சேர்ந்தால் மகிழ்ச்சிதான்
கவிதை அருமை
நிலா ரசிகன், அருள் மொழியன்... நன்றி.
குழப்பம்தான்.
Post a Comment